12 April 2015

ஈருடல் ஓருயிர் தம்பதியரே ,இதுக்கு உங்க விடையென்ன :)

                சிந்திக்க வைக்கிற மாதிரி பதிவு 'ஜோக்காளி 'யில் வருவதே இல்லையென்று பலர் வருத்தப் பட்டதால் ,ஒரு பதிவைப் போட்டு  பதிலை எதிர்பார்த்தா ...#விடையை கண்டுபுடுச்சு சொல்ற போட்டியெல்லாம் எங்க பரம்பரைக்கே ஆகாதுன்னு உங்களுக்கு தெரியாதுங்களா....????#என்று கமெண்ட் வருது ...
       சரி ,கேள்விக்கான பதிவை மட்டும் போட்டாலாவது ,சம்பந்தப் பட்டவர்கள் பதில் சொல்லக்கூடும் என்பதால்  ,மீண்டும் இந்த பதிவைப் போட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாகி விட்டேன் ...!
                   ஈருடல் ஓருயிராய் வாழும் தம்பதிகள் மட்டுமல்ல ,யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம் ...
        இதோ ,அந்த பதிவு .....
 ஈருடல் ஓருயிர் என்ற தலைப்பில் சிறந்த தம்பதியரைத் தேர்ந்து எடுக்கும் போட்டி ... கடைசி சுற்றில் இரு ஜோடிகள் ஒரே மதிப்பெண் பெற்று சம நிலையில் இருந்தார்கள் ....
முதல் பரிசுக்கு தகுதி பெற ஒரு போட்டி ....
தம்பதிகளுக்கு ஒன்று வீதம் இரண்டு ,சைனா 'மக்'கில் ஜிகர்தண்டா ஊற்றி ,அதை தம்பதிகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதைப் பார்த்து ,ஒரு ஜோடியை முதல் பரிசுக்கு தேர்வு செய்தார்கள் ....
   இப்போது உங்கள் சிந்தனைக்கு கேள்வி ...எப்படி முதல் பரிசுக்கு தேர்வு செய்து இருப்பார்கள் ?
             யோசித்து சொல்லுங்க ..விடையை  அப்புறம் பார்க்கலாம் :)
ஒரு க்ளு...'மக் ' !18 comments:

 1. 01. சொல்லட்டுமா ? ? ?

  ReplyDelete
  Replies
  1. தாராளமாச் சொல்லுங்க :)

   Delete
 2. ஒரு ஜோடி மற்ற ஜோடிக்கு எடுத்துக்கொடுத்து மக்கில் ஜிகிர்தண்டா ? இருக்கிறதா 80தை உறுதி செய்து கொண்டதால் வெற்றி பெற்றதோ ?

  ReplyDelete
  Replies
  1. உங்க ஐடியா நல்லாத்தான் இருக்கு ,ஆனால் பரிசு அதற்காக தரப்படவில்லை :)

   Delete
 3. ‘மக்’கில் எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்பதைப் பார்த்துத் தேர்வு செய்து இருப்பார்கள்...!

  மாமா மாமா மக்குமாமா
  மாமா மாமா மக்குமாமா
  நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா ?

  நன்றி.
  த.ம.3.

  ReplyDelete
  Replies
  1. ஜேம்ஸ் ஜி ,அதுதான் எப்படி என்று விளக்கமாய் சொல்லுங்களேன் :)

   தம்பதிகளில் மக்கு மாமா ஆனது யாருன்னு தெரிஞ்சுக்கத் தானே போறோம் :)

   Delete
  2. வாய்தா வாங்காமல் சொல்ல வேண்டுமென்றால்... ‘வாயில்...!|

   Delete
  3. ஏதோ சொல்ல வர்றீங்க ,அதென்ன வாயில் :)

   Delete
 4. அய்யய்யோ... இது தொடர்கதையாய் போகும் போலிருக்கே ஜி...

  ReplyDelete
  Replies
  1. யாராவது சரியான விடையை சொல்ல மாட்டார்களா என்ற தவிப்பில் நான் இருக்கேன் ,தொடர்கதை நோ சான்ஸ் ,,,,இப்போ மணி பத்து ,இன்னும் இரண்டே மணி நேரத்தில் விடை தெரிந்து விடும் :)

   Delete
 5. நான் ஒரு பதிலைச் சொல்ல நீங்கள் அது அல்ல என்று சொல்லைப்படியே போய் வரும் விடைகளில் சிறந்தஒன்று உங்களுக்குக் கை கொடுக்காமலா போகும்?

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்ல வரும் விடைக்கு இது வரை எதுவும் நெருங்கி வரவில்லை ,விடிந்ததும் ,அதைப் படித்து நீங்கள்தான் சொல்லணும் ..என் விடை சரியா ,தவறா என்று :)

   Delete
 6. வணக்கம்
  ஜி
  நாம இந்த பக்கம் வர வில்லை என்னறால் எப்படியான போட்டி எல்லாம் நடக்குது... இப்பதான் பார்த்தேன்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. விடையையும் ரசிக்க முடிந்ததா :)

   Delete
 7. இதற்கு பதிலை அதாங்க ஜி நீங்க சொன்ன பதிலேதான்....ஆனா கமென்ட் போட முடியாம, அப்புறம் தளம் வர முடியாம போய்டுச்சு ஜி...

  ReplyDelete
  Replies
  1. அடடா ,பதில் தெரிந்திருந்தும் கோட்டை விட்டுட்டீங்களே :)

   Delete
 8. அந்த விடை எப்படி எங்களுக்கு ஸ்ட்ரைக் ஆச்சுனா....ஒரு கதைல ஒரு காதல் ஜோடிங்க ஆப்பிள் பழத்தைக் கடிச்சு சாப்பிட, முதலில் காதலன் ஒரு கடி கடித்து விட்டுக் காதலியிடம் கொடுத்ததும் காதலி அதே இடத்தில் கடிக்க.....காதலன் கேட்பான்...அதே இடத்துல கடிக்கற அப்படினு....காதலி "உன் உதடு பட்ட இடத்தில்...என் உதடும்.....என்று....

  ReplyDelete
  Replies
  1. இது கதை மாதிரி தெரியலே ,கவிதை மாதிரி இருக்கே :)

   Delete