13 April 2015

ஈருடல் ஓருயிர் தம்பதிகள் ஜெயித்தது எப்படி :)

-------------------------------------------------------------------------------------
இதிலுமா கணக்கு பார்க்கிறது :)                
              ''படியிலே தாவி தாவி,மாடிக்கு வந்த பையனை அடி அடின்னு அடிக்கிறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
         ''ஏனாம் ?''            
          ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !     

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ,
          நேற்றைய ' ஈருடல் ஓருயிர் ' போட்டியின் முடிவைப் பார்த்து விடுவோமா ?
     (அதைப்  படிக்காதவர்கள் சென்று படித்துவர 
லிங்க் ...http://www.jokkaali.in/2015/04/blog-post_12.html)
=======================
கடைசி சுற்றுப் போட்டி ...
ஒரு ஜோடி தம்பதியரை மறைவிடத்தில் இருக்கச் சொல்லி விட்டு ,இன்னொரு ஜோடியிடம் ,ஒரு சைனா மக் நிறைய ஜிகர்தண்டாவை ஊற்றிக் குடிக்கச் சொன்னார்கள் .ஈருடல் ஓருயிர்  போட்டியாச்சே ,தம்பதிகள் விடுவார்களா ?
கணவர் பாதியை குடித்தபின்  மனைவிக்கு கொடுத்தார் ,அவரும் குடித்து முடித்தார் !
மறைந்து இருந்த ஜோடித் தம்பதிகளும்  வெளியே வந்தார்கள் ,அவர்களும் முதல் ஜோடியைப் போன்றே ,நீ பாதி நான் பாதி என்று குடித்து முடித்து ,முடிவுக்கு காத்திருந்தார்கள் ....
இரண்டாவது தம்பதியர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டவுடன் ,எல்லோருக்கும் ஆச்சரியம் !
முதல் ஜோடி தம்பதியர் கேட்டார்கள் ..
''நாங்கள் குடித்ததைப் போன்றேதானே அவர்களும் குடித்தார்கள் ?எப்படி வெற்றியை முடிவு செய்தீர்கள் ?''
நடுவர் சொன்னார் ''குடித்தது பாதி பாதிதான் ,அதில் ஒன்றும் வித்தியாசமில்லை ...
 ஜிகர்தண்டா  இருந்த 'மக்'கின் கைப் பிடியை நீங்கள் வலது கையால் பிடித்து, குடித்து முடித்ததும் மனைவி கையில் கொடுத்தீர்கள் ,ஆனால் அவர் இடது கையால் 'மக்'கை  பிடித்து குடித்தார் !
இரண்டாவது ஜோடித் தம்பதிகள் இருவருமே வலது கையால் 'மக் 'கைப் பிடித்து குடித்தார்கள் ,இதனால் ,கணவன் 'மக் ' கில் எங்கே வாய் வைத்துக் குடித்தாரோ,அதே இடத்தில் மனைவி வாய் வைத்துக் குடிக்கத் தயங்கவில்லை ..அதுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று அறிவித்த போது ,அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது .

கணவன் மனைவி சண்டையில் தலையிடலாமா ?

        ''பக்கத்து வீட்டிலே புருஷன் பெண்டாட்டி சண்டைன்னா...நாம 
ஒரு தப்பு செய்யலாம் ,ஒரு தப்பு செய்யக்கூடாதா ,என்னங்க சொல்றீங்க ?''
         ''காதை  தீட்டிக்கிட்டு ஒட்டு கேட்கலாம் ,சமரசம் செய்யப் 
போனாதான் தப்பு !''
           Ramani S13 April 2014 at 06:03
இலவசமா ஒரு சினிமா
பார்ப்பதுபோல் எடுத்துக் கொண்டால்
பிரச்சனையில்லை.அப்படித்தானே
Bagawanjee KA 13 April 2014 at 18:56
இது சினிமா இல்லே ,ஒலிச் சித்திரம் மட்டும்தான் ,காது கேட்காமல் போகாதே ?
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!..
ஏன்?.. 
காலையில ஊடல்..ன்னா!.. 
கட்.. கட்.. ஸ்வாமிகளே.. உமக்கு இதெல்லாம் தேவையா!..


 1. ரமணி சார் இதை சினிமாங்கிறார்,நீங்க என்னடான்னா ..கட் ,கட் என்கிறீங்க ... இங்கே என்ன நடக்குதேன்னு புரியலையே !

 2. ஹா...ஹா..ஹா...அதுக்கு நீங்க சரியாவரமாட்டீங்கனு சொல்லலை போல:)))
 3. சொல்லி இருந்தா பக்கத்து வீட்டுப் பிரச்சினை இவங்க வீட்டுப் பிரச்சினை ஆகி இருக்குமே !
 4. சொல்லிக்கவே நல்லா இருக்காதே !

             ''பத்து வீடு பார்த்ததில் நடுத் தெருவீடுதான் பிடிச்சிருக்கு ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''
         ''நடுத் தெருவிலே இருக்கேன்னு சொன்னாச் சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !''


 5. பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா 'வும் உண்டு !

 6. காண்போர் நாணும் அளவிற்கு 
  மறைந்துள்ள மச்சத்தைக் கூட காட்டும் 
  'மசாலா'ப் பெண்கள் ஒருபுறம் ...
  உரிமைக்கு முன் உயிர்க்கூட துச்சமென 
  தோட்டாவைக் கூடத் தாங்கும் 
  'மலாலா'ப் பெண்களும் இருப்பதால்தான்
   பெண்மை தலை நிமிர்ந்து நடக்கிறது !

28 comments:

 1. படி தாண்டல் தடை சட்டம்
  பத்தினிக்கு மட்டுமல்ல!
  பையனுக்கும் தான் போலிருக்கே?

  சிரிச்சா! நல்லா தாவி ஓடும் பல்செட்டு!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. அந்த சட்டம் அவருக்கும் சேர்த்துதான் ,கற்பு நெறி என்று வந்தால் அதை ஆண் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்னு பாரதி சொல்லி இருக்காரே :)

   வயசான காலத்தில் இப்படி ரிஸ்க் எடுக்கணுமா :)

   Delete
 2. படி தாண்டல் தடை சட்டம்
  பத்தினிக்கு மட்டுமல்ல!
  பையனுக்கும் தான் போலிருக்கே?

  சிரிச்சா! நல்லா தாவி ஓடும் பல்செட்டு!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. பையனுக்கு மட்டுமல்ல ,அப்பனுக்கும் பொருந்தும் ...கற்பு நெறியை பொதுவில் வைப்போம்னு பாரதி சொல்லி இருக்காரே :)

   இவ்வளவு ரிஸ்க் எடுத்து சிரிக்கணுமா :)

   Delete
 3. ஸ்டெப் பை ஸ்டெப்பா படி ஏறினா கால் உடையாம இருக்குமே!

  ஹா...ஹா...ஹா... இப்படித்தான் ஜெயித்தார்களா!

  முதலாவதும் செய்ய வேண்டாம்... டைம் வேஸ்ட்!

  நடுத்தெருவில் நிற்கவில்லையே... வீட்டில்தானே இருப்பார்? ஹா..ஹா..

  ம்ம்ம்... உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. இதை சொல்றதுக்கு அப்பன்காரன் பையனின் காலை உடைத்து விடுவார் போலிருக்கே :)

   ஈருடல் ஓருயிர் என்றால் இதுதானே :)
   டைம் பாஸ் ஆகுமே :)
   நடுத்தெரு வீட்டில் இருக்கார்ன்னு சொல்லலாமா :)

   ஒரு கோளுக்கு மலாலா பெயர் சூட்டப் பட்ட தகவல் ,நேற்று வெளியாகி உள்ளதே :)


   Delete
 4. 'ஸ்டப் பை ஸ்டப் 'பா வெற்றிக் காரணத்தை அறிந்தேன் ஜி...!

  ReplyDelete
  Replies
  1. 'சிப் 'பை 'சிப்'பா ஜிகர்தண்டாவை குடித்ததால் கிடைத்த வெற்றியாச்சே அது :)

   Delete
 5. வணக்கம்
  ஜி
  ஸ்டப்பை ஸ்டப் பா.... ஜி... நல்ல சொல்லியுள்ளீர்கள்... தம்பதியர் போட்டி செம கிட்.... பகிர்வுக்கு நன்றி த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பையனுக்கு இப்'படி'யா புரிய வைக்கிறது :)

   செம ஹிட் ஆனாலும் ,நான் எதிர்பார்த்த அளவிற்கு விடைகள் வராததில் எனக்கு சிறிது ஏமாற்றமே :)

   Delete
 6. கொஞ்சம் ஸ்டெப் தவறினாலும், எலும்பு முறிந்து விடும் என்பதை பிராக்டிக்கலா சொல்லித்தர்றார் போல!

  ReplyDelete
  Replies
  1. பையன் என்ன சர்க்கஸில் ' பார்' ஆடுகிறானா இல்லையே ,இந்த வயசுலே தாவாமே எப்போ தாவப் போறான் :)

   Delete
 7. ஈ. உ. ஓ. உ. தம்பதியர் போட்டி முடிவு அருமை..

  ReplyDelete
  Replies
  1. ஏகமனதாய் ரசிகர்கள் ஏற்றுக் கொண்ட தீர்ப்பாச்சே :)

   Delete
 8. ''... ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா செய்யணுமாம் ! ..

  Aaha!...
  சமரசம் செய்யப்
  போனாதான் தப்பு !'' .....Nanru...nanru.....

  ReplyDelete
  Replies
  1. ஸ்டப் பை ஸ்டப் ,அது என்னைக்கும் நல்லதுதானே :)

   இதற்கு காது கொடுக்கலாமா :)

   Delete
 9. 01. வாழ்க்கையிலே படிப்படியாக முன்னேறியவர் இப்படித்தான் இருப்பார்.
  02. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  03. அடுத்த வீட்டுல புருஷன்-பொண்டாட்டி சண்டைனா சந்தோஷமாகத்தான் இருக்கு.
  04. அதேனே கேட்கிறவன் என்ன ? நினைப்பான்
  05. Super Jee

  ReplyDelete
  Replies
  1. 1.உருப்படியா யோசிக்கத் தெரியாதவர் எப்படி படிப் படியாய் முன்னேறி இருப்பார் :)

   2.இதுக்கே இப்படி சொல்றீங்களே ..நேற்று முன்தினம் ஒரு பதிவில் ,நான் படித்ததையும் படிச்சுப் பாருங்க >>>.#கணவனின் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே இந்த ஏற்பாடு .......என்பதைக் கண்டறிந்து மேல் நாட்டு அறிவியல் வல்லுனர்கள் ஆச்சரியப் படுகின்றனர் .இப்போது சொல்லுங்கள் ,கணவன் உண்ட இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா ?#

   3.அதிலும் , ஒட்டு கேட்டால் இன்னும் சந்தோசமா :)

   4.அதுதானே முக்கியம் :)

   5.மலாலா ,சிறிய வயதில் உலகப் புகழ் பெறக் காரணம் ,அவருடைய தைரியம்தானே :)

   Delete
 10. கணக்குப் பார்த்து காதல் வந்தது... கச்சிதமா ஜோடி சேர்ந்தது என்பது இந்த ஜோடிதானோ?


  ‘ஈருடல் ஓருயிர் ' ... நீ பாதி நான் பாதி ... வாய்(இல்) வைத்து...'மக் ' கில்... கொஞ்சம் சொன்னதற்கு கொஞ்ச(ப்) பரிசாவது கொடுக்கக் கூடாதா?


  தப்ப தப்பில்லாம் செய்தால் தப்பில்ல... அப்படித்தானே...! என்ன அங்க தப்பு தப்புன்னு சத்தம் கேக்குது...!


  நடுத்தெருவுல நின்னா... சந்தி சிரிக்க வேண்டியதுதான்...!  'மசாலா'ப் பெண் :மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
  'மலாலா'ப் பெண் புலி - மானை வேட்டைதான் ஆடிடுமே அறிவில்லா நாடான காட்டில்!

  நன்றி.
  த.ம. 8.

  ReplyDelete
  Replies
  1. காதலில் கணக்கு பார்த்தால் காதலிகள் யாரும் மிஞ்ச மாட்டார்களே :)

   சரியாக சொல்லி விடுவீர்கள் என்று நினைத்தேன் ,பரிசான ஆயிரம் பொற்காசில் 'ரம்'மை மட்டும் மக்கில் கொடுத்தால் சந்தோசப் படுவீர்களா :)

   அது தப்பை சரியா அடிக்கிற சத்தம்தான் :)

   நாட்டிலும் இரண்டுகால் மிருகங்கள் அதிகரித்து விட்டன என்பதை அழகாய் சொன்னீர்கள் :)

   Delete
 11. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

   Delete
 12. வாழ்க்கையிலும் படிப்படியா முன்னேறணும்னு அடிச்சு சொல்றார் போல....

  போட்டியில் வெற்றி பெற்றது எப்படி எனத் தெரிந்து கொண்டேன்...

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. படிப் படியா இவரே முன்னேறின மாதிரி தெரியலையே :)

   சரியான தேர்வு தானே ,அதை சொல்லுங்க ஜி :)

   Delete
 13. இறுதிச் சுற்றுப் போட்டிக்கு விடையை இதேபோல்தான் நினைத்திருந்தேன் ஆனால் சொல்லவில்லை. எந்தப் போட்டியிலும் பங்கேற்பதில்லை அல்லவா...ஹிஹிஹி.!

  ReplyDelete
  Replies
  1. இந்த போட்டியில் கலந்து கொள்ள உடல்பலமோ ,நுழைவுக் கட்டணமோ கூட தேவையில்லையே...:)

   Delete
 14. ஸ்டெப் பை ஸ்டெப் ஹஹ்ஹ

  போட்டி நினைத்தது சேம்.....

  ReplyDelete
  Replies
  1. ஸ்டப் பை ஸ்டப் ,படியிலும் கூடவா :)

   செமையா ,சேமா:)

   Delete