17 April 2015

நாலு நாள் காயப் போட்டால் இவரோட 'துணி 'ச்சல் என்னாகும் :)

           

             ''எடைக் குறைவான சேலையைப் பார்த்து வாங்க வேண்டியதுதானே ?''

               ''நான் கட்டிக்கப் போறேன் ,மெஷின் துவைக்கப் போவுது ,உங்களுக்கென்ன ?''
                 '' காயப் போடுற வேலையை  என் கிட்டே சொல்லாதே !''

இருக்கும் போதுகூட மாமியார் மேல் இம்புட்டு பாசமில்லே !

          ''என்னங்க ,அமாவாசை அதுவுமா ஜன்னல்லே காக்கா வந்து கரையுதுங்க,நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா ?!''
           ''ஏன் ?''
   ''கலரும் ,குரலும் உங்க அம்மாவை ஞாபகப்படுத்துதுங்க ,அதான் !''
துரை செல்வராஜூ17 April 2014 at 08:56
காக்காவுக்கு நெய்ச்சோறு வைக்கட்டும்!.. 
நாளைக்கு - இவங்களும் இந்த மாதிரி 
கட்டைச்சுவர் மேல உக்கார வேணுமில்லே!. 1. அது எங்கே இப்போ நினைவுக்கு வருது ?மாமியாரைக் கிண்டல் பண்றது மட்டும் குறையலயே !
 2. சைதை அஜீஸ்17 April 2014 at 11:12
  அமாவாசையா அல்லது அம்மா வசையா?
  1. அப்படியும் சொல்லலாம் ,புருசனின் அம்மாவை வசைப் பாடுவதால் !
  2. வழக்குச் செலவுக்கே ஒத்தி காசு சரியா போயிருக்குமே  ?
  3.         ''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
  4. ''அதையேன் கேட்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுக் கிட்டே இருக்கார் !''

லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது ?

ஊரெங்கும் பணம் தரும் தானியங்கி எந்திரங்கள் ...

நம்மைச் சுற்றிலும் பணம் பிடுங்கும் மனித 

எந்திரங்கள் !

26 comments:

 1. 1. அவரவர் கவலை அவரவர்களுக்கு!

  2. அடப்பாவி... என்னவொரு பாசம்! துரை செலவராஜ் மற்றும் சைதை அஜீஸ் அவர்களின் கமெண்ட் சூப்பர்.

  3. கண்ணுல வர்ற தண்ணியை ஒத்தி ஒத்தி எடுக்க வேண்டியதுதான்!

  4. ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. 1.கவலைகள் என்றும் தீருவது இல்லை :)

   2.பொருத்தமான கமெண்டுக்களை நானும் ரசித்தேன் :)

   3.வழக்கு போற வேகத்தைப் பார்த்தால் ,கண்ணீர் கூட வராது போலிருக்கே :)

   4.இங்கே நீக்கமற நிறைந்து இருப்பது லஞ்சம்தான் போலிருக்கிறது:)

   Delete
 2. தங்களது பல நகைச்சுவைகளில் வாழ்க்கையில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான அம்சங்களும் பொதிந்து கிடைக்கின்றன. நம்மைச்சுற்றிலும் பணம் பிடுங்கும் இயந்திரங்கள் என்பது போன்று.

  ReplyDelete
  Replies
  1. சேலைக் காயப் போடுவதும் கூடவா :)

   Delete
 3. “சேலையத் தொட்டுத் துவைக்கிறதுக்கூட என்ன அனுமதிக்க மாட்டேங்கிறாய்...காயப் போடுற வேலையை மட்டும் நான் செய்யனுமுன்னு என்ன ஏ காயப் போடுறாய்...?”

  “காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடான்னு இன்னும் தெரிஞ்சுக்காம பேசாதிங்க...!ஒங்களப் பாத்துப் பேசிக்கிட்டு நடந்ததில்ல... எ கால்தடுக்கி காயமாயிடுச்சு... மொதல்ல எ காலப்பிடிங்க...!”


  “காக்கா கூட்டத்த பாருங்க... அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க...ஒங்க அம்மாவா...? இருந்தாலும் ஒங்க அம்மாவுக்கு இவ்வளவு ஆசை கூடாதுங்க...!”


  “வர வர நீங்க வீட்டுக்காரரா...? அவர் வீட்டுக்காரரான்னு எனக்கு சந்தேகம் வருது...? வீட்டுக்கு வாங்க ஒத்தி எடுக்கிறேன்...!”

  “என்னையா... அவரையா...?”


  இதுக்குத்தான் பணம் அடிக்கும் எந்திரத்த வீட்டிக்கு ஒன்னா... கொடுத்தாத்தான் இந்தப் பிரச்சனை தீரும் சொன்னா யாரு கேக்கிறாங்க...!

  த.ம. 2.

  ReplyDelete
  Replies
  1. முந்தி வாசிங் மெசினாய் இருந்தவரே இவர்தான் ,இப்போ ,காயப் போட முடியாதுன்னு அழிச்சாட்டியம் பண்ணலாமா :)
   காலை வேறு அமுக்கி விடணுமா :)
   இப்போ காக்காகூட கூட்டம் சேர்க்கிற மாதிரி தெரியலியே :)
   வீடு ஓனர்னுதான் பெயர் ,வாடகை தராமல் அனுபவிப்பவர் தான் உண்மையான ஓனர்:)
   எந்திரம் கொடுத்து விடலாம் ,பணம் அடுக்கிறது யாரு :)

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. வணக்கம்
  ஜி
  நகைச்சுவை அல்ல எல்லாம் ..“நகை+சுளை”பார்த்தேன் இரசித்தேன் ஜி..பகிர்வுக்கு நன்றி த.ம3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தோலிருக்க 'சுளை'யை முழுங்கியதற்கு நன்றி ,ரூபன் ஜி :)

   Delete
 6. இங்கிட்டு எடுத்து அங்கிட்டு... இயந்திர வாழ்க்கை தான் ஜி...

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் எந்திரங்கள் பெருகியதைத் தொடர்ந்து இப்போது வெளியிலும் எந்திரங்கள் ,மனிதன் 'ரோபோ 'ஆகாமல் என்ன செய்வான் :)

   Delete
 7. 01. நல்லவேளை மிஷின் துவைக்குது...
  02. அம்மாவுக்கு வசை ஸூப்பர்.
  03. இந்த ஒத்தி சமாச்சாரத்துக்கு வத்தி வச்சாத்தான் சரியா வரும்.
  04. தாணியக்கி இயந்திரங்கள் தானாக தராதே நம்பர் கேட்குதே...

  ReplyDelete
 8. அம்மணி:- நான் கட்டிக்கப் போறேன்., மெஷின் துவைக்கப் போவுது., உங்களுக்கென்ன?..
  ஐயா:- காயப் போடுற வேலையை என் கிட்டே சொல்லாதே!..

  .. ஐயா.. வெவரம் புரியாம உளறுகிறார் போல!..
  அம்மணியோட சேலைய காயப் போடலைன்னா.. ஐயாவும் காய வேண்டியதுதான்!?..

  பகவான் ஜி.. கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா!..

  ReplyDelete
  Replies
  1. அய்யா ,நான் சொல்லவேண்டியதைதான், தலைப்பிலேயே சொல்லிப் புட்டேனே :)

   Delete
 9. அத்துனையும் அருமை.வாழ்த்துக்கள்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. 'அருமை.வாழ்த்துக்கள்.நன்றி'க்கு,நானும் மும்முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

   Delete
 10. Replies
  1. மனிதனும் தானியங்கி எந்திரம் போலத்தானே :)

   Delete
 11. ஹாஹாஹா! சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சிரித்ததற்கும்.மகிழ்ந்ததற்கும் இரட்டை நன்றி :)

   Delete
 12. //'ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே போட்ட கேஸ் என்னாச்சு ?''
  ''அதையேன் கேட்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுக் கிட்டே இருக்கார் !''//

  கோர்ட்டைப் பத்தியும் நீதிபதியைப் பத்தியும், இப்படித் ‘தத்து‘ பித்துன்னு சொல்லாதீங்கோ..!

  அப்பறம், அவ, மரியாதையா இருக்கச் சொல்லப் போறா. :)

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊர்லே ஏற்கனவே நல்ல பழமொழி இருக்கே 'வரப்பு தகராறில் வயலை விற்றது மாதிரி 'என்று :)

   Delete
 13. அவர் கவலை அவருக்கு.... :)

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. இருக்கத்தானே செய்யும் :)

   Delete
 14. பாவம் கணவர்! அவருக்குல்லத் தெரியும் அந்தக் கஷ்டம்...

  இயந்திரம் மிகவும் ரசித்தோம்....

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கொஞ்ச நாள் போனால் ,நீளமாயிருக்கிற சேலையே எடுக்காதே என்பாரோ :)

   அசையா எந்திரமே தேவலே :)

   Delete