21 April 2015

பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம்:)

---------------------------------------------------------------------------------

பரம்பரையா  சொத்து மட்டும் வரலே :)
                     ''தாத்தா ,பாட்டியை மறக்கவே முடியாதுன்னு சொல்றே ,அவங்க மேலே  அவ்வளவு பாசமா  ?''
                   ''எனக்கிருக்கிற  சர்க்கரை நோய் பாட்டி கொடுத்தது ,அதுக்கு செலவு பண்ற பணம் தாத்தா கொடுத்ததாச்சே !''

நான் வெஜ் சமைக்கத் தெரிந்தாலும் இதை செய்ய முடியுமா ?

                ''வீட்டிலே ஒரு பெருச்சாளி அட்டகாசம் பண்ணிக்கிட்டு 
இருக்குன்னு சொல்றே ,ஆனா அடிக்காதீங்கன்னு ஏன் சொல்றே ?''
            ''கொன்றால்  பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்க ,
எலிக்கறியை யாருங்க சாப்பிடுறது?''


Chokkan Subramanian21 April 2014 at 05:12
அப்ப நீங்க வீட்டுல எலி எல்லாம் வளர்க்கிறீங்களா???
விலைவாசி தாறுமாறா ஏறிப் போச்சு,உங்களை மாதிரி வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு கறி விருந்து வைக்க வேண்டாமா ?
 • Chokkan Subramanian21 April 2014 at 10:42
  ஆஹா. மின்னாடியே சொல்லிட்டீங்க. அதனால உங்க வீட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு.
 • அப்படியெல்லாம் சொல்லப்படாது ,அன்பாய் அவுல் கொடுத்தாலும் 'பகுத் அச்சா'ன்னு சொல்லி சாப்பிடுறதுதான் நமது பண்பாடுங்கிறதை மறக்கலாமா ?
 • Chokkan Subramanian21 April 2014 at 17:18
  ஹலோ, அவல் எங்கேயிருக்கு, எலிக்கறி எங்க இருக்கு. உங்களுக்கே இது அநியாயமா தெரியலையா. அதுவும் ஒரு சைவக்காரனிடம் எலிக்கறி சாபிடுங்கன்னு சொன்னா எப்படியிருக்கும்??
 • இந்தப் பாட்டை நீங்கள் கேட்டு இருப்பீர்களே ...
  #சைவப் பொருளாய் இருப்பவனே அன்று
  ஓட்டல் கறியை கேட்டவனே....
  ஹிஹி...பிள்ளைக்கறியை கேட்டவனே...
  அதே அதே சபாபதே! அதே அதே சபாபதே!#
  அந்த சொக்கனே பிள்ளைக் கறி கேட்டு சாப்பிட்டதா புராணம் இருக்கிறது ,இந்த சொக்கன் எலிக்கறி சாப்பிடக் கூடாதா ?
 • கறிக் கடைக்கு இவ்வளவு ஆதரவு இருக்கா!...
 • ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகமாச்சே இது ,கறிக்கு சொல்லவா வேணும் ?
 • பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம்....!
 •           ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது 
  வசதியான இடத்தில் தானா ?''
           ''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே 
  லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''
  சே. குமார்21 December 2013 at 13:08
  அது சரி.... இரண்டு திருடர்கள் சம்பந்தி ஆகிறார்கள்..
  Bagawanjee KA21 December 2013 at 22:59
  நன்றாக ஆகட்டும் ,மொய் பணத்திற்கு நம்ம மடியில் கைவிடாமல் இருந்தால் சரி !


  30 comments:

  1. 1. அடப்பாவமே... பணம் கொடுக்கிறார் என்றாலும்...

   2. இது வேற கஷ்டமா... தூக்கி வெளியில் போடுங்க.. காக்காய் தின்னட்டும். பாவம் போயிடும்!

   3. என்ன கொடுமை!

   ReplyDelete
   Replies
   1. 1.வேண்டாம்னா வராமலா இருக்கப் போகிறது ,ஜீனிலேயே உள்ளதே :)
    2.முன்னோர்களுக்கு nv விருந்தா :)
    3.இனம் இனத்தோடு சேருவது ,கொடுமையா :)

    Delete
  2. அனைத்துமே அருமை. எலிக்கறி நகைச்சுவையை அதிகம் ரசித்தேன்.

   ReplyDelete
   Replies
   1. எலிக் கறியால் மூட் அவுட் ஆயிட்டார் போலிருக்கு நம்ம சொக்கன் ஜி ,இன்னைக்கு வந்து எட்டிப் பார்க்கலியே :)

    Delete
  3. எங்க பாட்டிக்கும் சக்கரை நோய் இருந்தது. எதுக்கும் தாத்தா மேல ஒரு கேஸ் பைல் பண்ணிவப்போம்:))

   சொக்கன் சகோவிற்கு அடுச்சுருகீங்க பாருங்க லாஸ்ட் பன்ச்!! பகுத் அச்சா பாஸ்!

   ReplyDelete
   Replies
   1. தாத்தா இன்னும் இருக்காரா .கேசுக்கு பலன் இருக்குமா :)

    தெய்வம் பிள்ளைக் கரியைக் கேட்டதாம் ,இப்படி எல்லாமா புரூடா விடுறது :)

    Delete
  4. ஒரு விதத்தில் சீர் படுத்தும் சொத்து...!

   பகுத் அச்சா... பகுத் அச்சா... ஜி...

   ReplyDelete
   Replies
   1. சீர் படுத்தவும் வேணாம் ,சீரழிக்கவும் வேணாம் இந்த இரு சொத்தும் :)

    சொக்கன் ஜி ,வந்து பகுத் அச்சாவா இல்லையான்னு சொல்லுங்க :)

    Delete
  5. காக்கா பிரியாணி பற்றிக் கேட்டிருக்கிறேன் சில இடங்களில் நாய்க்கறியும் சாப்பிடுவதாகக் கேட்டிருக்கிறே பகவான் ஜி எலிக்கறி தருவாராம் பிள்ளைக் கறி கேட்ட சொக்கனை வம்புக்கிழுக்கிறார். பாட்டியிடமிருந்துதான் சர்க்கரை நோய், எப்படித்தெரியும் யாருடைய கொடையோ.

   ReplyDelete
   Replies
   1. சில நிமிடங்களே வாழும் ஈசலைக் கூட விடாத மனுஷன் எலிக் கறி சாப்பிடாமலா இருப்பான் :)
    பரம்பரையாய் வர வாய்ப்பு அதிகம்தானே :)

    Delete
  6. 01. பரம்பரை சீக்குமா ?
   02. கறிக்கடைக்காரன் கொன்னுட்டு திங்கிறது இல்லையே வித்துடுறானே...
   03. இனம் இனத்தோடு சேருது.

   ReplyDelete
   Replies
   1. 1.சர்க்கரை பரம்பரை சீக்கும்தானே:)
    2.மிச்சமானாலும் திங்க மாட்டாரா :)
    3.அதனாலே தவறில்லையா :)

    Delete
  7. வாருங்கள் எலிக் கறி பார்சலோடு பகவான் ஜி
   பதிவினை காண்பதற்கு!
   பாரிசில் பட்டிமன்ற தர்பார்
   http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
   வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
   தம +1
   நட்புடன்,
   புதுவை வேலு

   ReplyDelete
   Replies
   1. பண்பாட்டைச் சிதைத்து நடனம் ஆடியவர்களைப் பற்றி பட்டிமன்ற தர்பாரில் குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள் ,அவர்களுக்கு என் எலிக் கறிப் பிரியாணி பார்சலைக் கொடுத்து விட்டேன் :)

    Delete
  8. அப்ப தாத்தாதான்... கொடுத்துவச்சவருன்னு சொல்லுங்க...!

   எலிக்கறியச் சாப்பிடத்தான் வயக்காட்டுல ஆள்இருக்கே... பாப்பு...ஓ பாப்பு...!


   பொண்ணு மாசமானா கேக்கவே வேணாமுன்னு சொல்லுங்க...!

   நன்றி.
   த.ம. 6.


   ReplyDelete
   Replies
   1. இப்படி தாத்தா கிடைக்க பேரன்தான் கொடுத்து வைத்திருக்கணும்:)

    காலே இல்லாத பாப்புவும் ஆள் ஆயிடுச்சா :)

    மாசமான ,பொண்ணுக்கு மாமூல் வாழ்க்கையில் மாற்றம் வரத்தானே செய்யும் :)

    Delete
  9. Replies
   1. சம்பந்தி பொருத்தம் ஜோர் தானே :)

    Delete
  10. ஹஹஹாஹஹ்ஹ எலிக்கறி ஜோக்கும் அதன் பின்னூட்டங்களும் உங்கள் பதிலும் அதுவும் சொக்கன் வைத்து சொக்கட்டான் விளையாட்டை ரசித்தொம் ஜி.....

   சம்பந்திப் பொருத்தம் ஜோர்...சமபந்தினு சொல்லுங்க....

   ReplyDelete
   Replies
   1. இதுக்கு பெயரும் சொக்கட்டான் விளையாட்டுதானா :)

    முதலில் நானும் சமபந்தி ஜோர் என்றுதான் JK ஜி அவர்களுக்கு மறுமொழி கூறியிருந்தேன் :)

    Delete
  11. ஜி கொஞ்சம் அவ்வப்போதுதான் இணையம் வர முடிகின்றது.....துளசிக்குப் பொது பரிட்சை பேப்பர் திருத்தம்......கீதாவுக்கு காது வலி இன்னும் அவ்வளவாகச் சரியாகவில்லை.....நெட் வேறு அவ்வப்போது எங்கள் தலைமையகம் சென்னையில் கட் ஆகிவிடுகின்றது....எனவேதான்....

   ReplyDelete
   Replies
   1. இவ்வளவு சிரமத்திற்கு இடையிலும் வந்ததற்கு நன்றி ஜி :)

    Delete
  12. வருத்தம் தரும் திருத்தும் வேலையில் ஏற்பட்ட அயர்ச்சி நீங்கிற்று.

   நன்றி பகவானே!

   ReplyDelete
   Replies
   1. அயர்ச்சி நீங்கியதும் ஆரம்பித்து விட்டீர்களே ...உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் தொடரை :)

    Delete
  13. வணக்கம்
   ஜி
   அனைத்தும் கலகலப்பு.... பகிர்வுக்கு நன்றி
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி :)

    Delete
  14. சிரித்து மகிழ்ந்தேன்! ஒவ்வொன்றும் சரவெடி! வாழ்த்துக்கள்!

   ReplyDelete
   Replies
   1. சரவெடியை வெடித்து ,தப்பு தப்பு ...சிரித்து மகிழ்ந்ததற்கு நன்றி :)

    Delete
  15. அடடா ரெண்டு பேரும் கொடுத்துட்டாங்க!

   கொன்றால் பாவம் தின்றால் போச்சு - காக்காய்க்குப் போட்டுட வேண்டியது தானே!

   ReplyDelete
   Replies
   1. கொடுத்தவனே பறித்துக் கொண்டாட்டின்னு பாடிகிட்டு இருக்காரே :)

    பாவம் காக்கைக்கு போய்விடுமா :)

    Delete