22 April 2015

சாப்ட்வேர் டீம் லீடர் ,சாப்பிடக் கூட விட மாட்டாரா :)

---------------------------------------------------------------------------------

கஸ்டமரை  கஷ்டப் படுத்தக் கூடாது தானே  :)
            ''ஹலோ ,கஸ்டமர் கால் சென்டருக்கு கால் பண்ணிட்டு ...எனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு ஏன் கேட்குறீங்க ?''
            ''எவ்வளவு திட்டினாலும் சிரிச்சுகிட்டே பதில் சொல்றீங்களே ,உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  !''

சாப்ட்வேர் டீம் லீடர் ,சாப்பிடக் கூட விட மாட்டாரா :)

         ''காலையிலே வேலைக்குப் போகும்போது தலைமுடி நல்லாத் தானே  இருந்தது ,சாயந்திரம் வழுக்கைத் தலையனா  வர்றீயே ,ஏன் ?''
           ''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை  இன்னைக்கே  'கையோட முடி 'க்கணும்னு 'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !


108டிகிரி வெயில் இப்படி கேட்க வைக்குதோ ?
        ''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
  ''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்னு கேட்கிறாரே !''
நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது !
ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவில்லை !


திண்டுக்கல் தனபாலன்22 April 2014 at 07:01
இரண்டு கத்தியை விட மத்தளம்...?
ரெண்டு பக்கமும் அடி ?வாங்கிய அனுபவம் இல்லாதால் நினைவுக்கு வரவில்லை ஹிஹி ))))
          துரை செல்வராஜூ22 April 2014 at 08:50
கையோட முடின்னு.. சொன்னதும் - மண்டை காலியாப் போச்சு... ஆபீஸ்ல... குப்பை கொட்றதும் அள்றதும் கஷ்டந்தான்!..
இப்படியே போனா ஆபீசும்,சலூன் மாதிரி ஆயிடும் போலிருக்கே !
டிபிஆர்.ஜோசப்22 April 2014 at 12:50
ஐடி கம்பெனி டீம் லீடர்கள் ஹிட்லர்களாகி பல வருடங்கள் ஆகிவிட்டதாமே! இவர்களுக்கு பயந்தே பல நல்ல நிறுவனங்களிலிருந்தும் பலர் வெளியேறிவிடுகிறார்களாமே!
அங்கே பணிபுரிபவர்களுக்கு தொழிற்சங்க உரிமை இல்லை ,பணி பாதுகாப்பு சட்டம் ஏதுமில்லை ...கொண்டையில் தாழம்பூவாம் ,உள்ளே ஈறும்பேனுமாம் என்பது I Tகம்பெனிகளுக்கு மிகவும் பொருந்தும் !
உங்களுக்கு முடி நிறைய இருக்கே? அது எப்படி? 
   ஒரே உறையில் இரண்டு கத்தி - அருமை
மண்டையைப் பிய்ச்சுக்க நீங்க இருக்கும்போது ,நான் எழுத மண்டையைப் பிய்ச்சுகிறதில்லை...அதான் !
   ஒரே உறைதான்,உள்ளே ஒரு தடுப்பு இருக்கக் கூடாதா ?


30 comments:

 1. 1) கஸ்டமர் கேரா, துப்பறியும் நிறுவனமா?

  2) அடக்கொடுமையே...முடியப் பிச்சி மூளைய தேடியிருக்கு புள்ள!

  3) மைனஸ் 2 டிகிரின்னு கேட்டுப் பார்க்கலாமே..

  4) நாத்தனாரை ஆட்டத்துல சேர்க்க மாட்டீங்களா பாஸ்!

  ReplyDelete
  Replies
  1. 1.இங்கே இவரில்லே ,துப்பறிய முயற்சி பண்றார் :)
   2.என்னதான் முயற்சி செய்தாலும் மூளை, கைக்கு கிடைக்குமா :)
   3 ஹாட் ஆர் கோல்ட் னு அடுத்த கேள்வியைக் கேட்பாரே :)
   4.நாத்தனார் அடுத்த ரவுண்டில் களம் இறங்குவார் (இருந்தால் ):)

   Delete
 2. கால் சென்டருக்கு நூல் விட்டு விட்டாரே...! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. நூல் விட்டு பார்த்து ,அப்புறம் தம்'பட்டம்' விட்டுப் பார்ப்பாரா :)

   Delete
 3. காலையில் வேலைக்குப் போகும்போது wig உடன் போயிருப்பார். வேலைப் பளுவில் விக்கைப் பிய்த்தெறிந்து இருப்பார் கால் செண்டருக்குப் போன் செய்து கேட்கும் கேள்வியா அது. நேரில்கேட்டால் ஏதோ விழும்ஒரே உறையில் கணவன் மனைவி இல்லையா.?

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது உண்மைதான் போலிருக்கே :)

   கால் வைக்கலாம் ,அகலக் கால் வைக்கலாமா :)

   இருக்க முடியாது ,இது காலத்தின் கட்டாயம் :)

   Delete
 4. கல்யாணம் ஆனா எல்லாம் போச்சா?
  சூப்பர்,,,,,,,,,,,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இந்த கஸ்டமரே கணவன் ஆனால் ,அவர் பேச்சை மனைவி இவ்வளவு அமைதியா கேட்டுக் கொண்டிருப்பாரா :)

   Delete
 5. 01. கேரக்டரை இப்படியும் தேர்ந்தெடுக்கலாமோ ?
  02. அம்பூட்டு வேலையா கொடுத்தாரு ?
  03. இந்த விசயமெல்லாம் சூரியா கார்த்தி இவங்கெளுக்கு அத்துபடி.
  04. ஒரே பேனாவுக்குள்ளே ரெண்டு ரீபிள் இருக்குறதில்லையா ?

  ReplyDelete
  Replies
  1. 1.தேர்ந்தெடுக்கலாம் ,காதால் கேட்டதும் பொய்ன்னு சீக்கிரமே தெரிஞ்சுடும் :)
   2.வேலை முடிக்காம போகக் கூடாதுன்னு பூட்டிட்டாரே :)
   3.அவங்க விசிறிகளுக்கு தெரியாதா :)
   4.ரெண்டுன்னா ,ரீபிள் நாலுகூட இருக்கலாம் ,ஆனால் .....:)

   Delete
 6. எவ்வளவு அடிச்சாலும் தாங்கு ....வீங்குவீங்கன்னு...சொல்லாங்களே... உண்மையா...? ஹலோ எதாவது பேசுங்க... நா சிரிச்சுக்கிட்டுத்தான் கேக்கிறேன்... ஹலோ...ஹலோ...லோ....


  இருங்க... விக்... கல் வருது... மொதல்ல தண்ணி குடிச்சுட்டு வந்து பேசுறேன்...!


  அவரு டிகிரி படிச்ச மாஸ்டர்... வேலை கிடைச்சா ஏ அவரு இந்த வேலைக்கு வர்றாரு...’காலேஜு படிப்பு காப்பி ஆத்திது’
  சரியாப் போச்சு போங்க...!


  ஒரே அறையில இரண்டு கத்தின்னு கேட்டிடுச்சு... கத்தி கத்தி ஒரேதா சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க...!

  த.ம. 5.


  ReplyDelete
  Replies
  1. நியாயமா பேசினா தாங்குவாங்க ,இல்லைன்னா சைபர் கிரைம்லே புகார் பண்ணிடுவாங்க :)

   விக்கல் நின்னுச்சா :)

   காலேஜு படிப்பு சர்க்கஸில் சிங்க வேடமே போட்டதாக சொல்வார்களே :)

   ஓரகத்தி வந்து சண்டையை பிரிச்சி விட்டாங்களா ,இல்லையா:)

   Delete
 7. அப்படின்னா கல்யாணம் ஆகித்தானே இருக்கணும்

  ReplyDelete
  Replies
  1. இப்படி உண்மையை உடைச்சு சொன்னா ,எப்படி கல்யாணமாகும் :)

   Delete
 8. மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாருன்னா..மண்டைவழுக்கையா ஆயிருமா???..... இது எத்தினியாவது அதிசியம் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. எத்தனையாவது என்று கேட்காதீங்க ,இது தான் 'தலை'யாய அதிசயம் :)

   Delete
 9. கஸ்டமர் அதனாஅல சிரிக்கிறேன்...கணவன் நா வேர மாதிரி......நீங்க எனக்கு கஸ்டமரா இல்லை கணவனா வர்ரீங்களானு கேட்டா.....

  டிகிரிகாப்பி என்றதுமே பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு...உசிலை மணியும், அரவிந்த் சாமியும், அப்புறம் கார்த்தி, சூரியா எல்லாஉம் நினைவுக்கு வருவதால்.....காபி சில்லுனு தான் இருக்கும்....

  இரண்டு கத்தி...கணவன் மனைவி....???

  ReplyDelete
  Replies
  1. கஸ்டமர் கேரில் வேலைப் பார்க்கிறவங்களை வேற தொழிலுக்கு மாற்றி விட்டீர்களே :)

   இவங்களை பார்த்தா ,உங்களுக்கு ஜில்லுன்னு இருக்கு ? :)

   மாமனார் மருமகனையும் சேர்த்துக்குங்க :)

   Delete
 10. வழக்கம் போல அழகு
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. மேக் அப் போடாமலே அழகு ,அப்படித்தானே :)

   Delete
 11. ரசனைக்கு உகந்த தீனி..

  ஹ ஹ ஹா

  நன்றி ஜி.

  ReplyDelete
  Replies
  1. பேஷ்,பேஷ்..ரொம்ப நன்னாயிருக்கா :)

   Delete
 12. வணக்கம்
  ஜி
  எதையும் தாங்கும் உள்ளம் மிகவும் நல்லவரா இருப்பாரா....
  பைத்தியம் போல.... முடியை பிய்க்க.... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நல்லவராத்தான் இருப்பார் ,ஏன்னா ,நம்ம பதிவர்கள் மாதிரி 'வருகைக்கு நன்றி 'ன்னு சொல்லி பேச்சை முடிக்கிறாங்களே:)

   Delete
 13. வெடிச்சிரிப்பு வரவழைக்கும் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வெடித்து மகிழ்ந்ததற்கு நன்றி :)

   Delete
 14. நானுமொரு சாப்ட்வேர் டீம் லீடர் தான்
  ஆனால், பாருங்கோ
  சாப்ட்வேர் என்றாலே
  மண்டையைப் பிய்க்கிற வேலை தான்
  ஆனால், பாருங்கோ
  வழுக்கைத் தலையாக்கிற வேலை இல்லையே!

  ReplyDelete
  Replies
  1. அவசரப் பட்டா எப்படி ,கொஞ்ச நாள் பொறுத்துப் பாருங்க :)

   Delete
 15. என்னா கேள்வி கேட்குறாங்கப்பா!

  முடியைப் பிச்சுப் பிச்சு தலையெல்லாம் புண்ணா ஆயிருக்குமே!

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட கஸ்டமரை கேர் பண்ணிக்க மாட்டாங்களே :)

   அதான்,கையிலே ஆயின்மெண்டும் கையுமா இருக்கிறாங்களே :)

   Delete