24 April 2015

வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட்:)

-------------------------------------------------------------------------------

 கூகுள் ஆண்டவரே இவரை மன்னியுங்கள்  :)            

                  ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''

              '' வீட்டை விட்டு ஓடிப் போன அவரோட மக எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''

அஞ்சு ,பத்மாவுக்கு பின்னாலே பையன் அலைஞ்சா ,அப்பன் ?

       ''அப்பன் ,மகன் ரெண்டு பேருமே  அஞ்சு ,பத்துக்கு அலையிறாங்களா,என்ன சொல்றே ?''
         ''அப்பன் கையிலே காசில்லாம அலையிறார் ,மகன் பொண்ணுங்க பின்னாலே அலையிறானே!''
வெளங்கிடும் ஐயா.. வீடு நல்லாவே வெளங்கிடும்!.. 
மகனுக்கு ஒரு சாத்து..ன்னா - அப்பனுக்கு ரெண்டு சாத்து!... 
இப்படி ஒரு புள்ளய வேலை மெனக்கெட்டு பெத்ததுக்கு!..

Bagawanjee KA24 April 2014 at 10:53
 • ஊருபூரா இப்படி அப்பனும் ,பயபுள்ளைங்களும் தானே இருக்காக ,
 • சாத்த ஆரம்பிச்சா நம்ம கைதானே வலிக்கும் ?

  1. கிரீன் கார்டு இதுதான் குடிகாரனுக்கு !
  1. ''உன் மனைவி உனக்கு இரட்டைக் குடிஉரிமை  
  2. கொடுத்திருக்காளா, எப்படி ?''

  3. ''பார்லேயே மொத்தமாக் குடிச்சு ரோட்லே கிடக்காமே 
   ,வீட்டுலேயும்  வந்து குடிச்சுக் கிடங்கன்னு சொல்றாளே !''

  4. டிபிஆர்.ஜோசப்24 April 2014 at 11:22
  இரட்டைக் குடியுரிமை கேரளாவில் அனைத்து ஆண்களுக்கும் உண்டுங்க!
  Bagawanjee KA24 April 2014 at 11:50


 • அங்கே மினரல் வாட்டர் மாதிரி இல்லே அதைக் குடிச்சிக்கிட்டு இருக்காக ?படிச்சவங்க நிறைந்த மாநிலம்தானான்னு நம்ப முடியலே !ஒரு வேளை கடவுளின் தேசம்கிறது அப்படித்தான் இருக்குமோ ? • வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் !

  ஒருசேரப் பத்து பொறாமை விழிகள் என்மேல் ...
  ஒரே ஒரு வார்த்தை செய்த மாயம் ...
  ''நிறைய சீனி போட்டு ஒரு டீ !''
  திண்டுக்கல் தனபாலன்24 April 2014 at 05:43
  விரைவில் டிக்கெட்டுக்கு ஏற்பாடு...

 • இவங்க எல்லாம் 'தக்கல்'லே போக நினைக்கிறவங்களாச்சே ! • 20 comments:

  1. 01. சரியான கேள்விதான்.
   02. இதுதான் நல்லதொரு குடும்பம்
   03. இவள்தான் மனைவி.
   04. ஸூப்பர் டீ

   ReplyDelete
   Replies
   1. 1.சிம் அடங்கிய காப்பு ஒன்றை எல்லோர் கையிலும் கட்டிவிட்டால் ,இருக்கும் இடத்தை கூகுள் காட்டிடும் என நினைக்கிறேன் :)
    2.உட்காராமல் அலைவதால் நல்ல குடும்பமா :)
    3.தீர்க்க சுமங்கலியா இருக்க நினைக்கிறாங்களோ :)
    4.இனிப்புதான் கொஞ்சம் தூக்கல் :)

    Delete
  2. நல்ல அப்பா, நல்ல மகள்?

   ReplyDelete
   Replies
   1. எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்த வேண்டியதுதானே :)

    Delete
  3. வதனப் புத்தகக் கடவுள் உதவலாம் ஜி...!

   ReplyDelete
   Replies
   1. அந்த கடவுள் காதலர்களுக்கு தானே உதவுவார் :)

    Delete
  4. அவங்க குடிச்சா வாட்டர்!..
   நாங்க குடிச்சா குவாட்டரா?..

   தக்காளிச் சட்னி புதுசா அரைச்சாச்சா!?..

   ReplyDelete
   Replies
   1. நீங்க எங்கே நின்னு குடிக்கிறீங்க ,அதான் சந்தேகம் வரக் காரணம் :)

    தக்காளி மலிவாய் கிடைக்கையில் அரைக்காமல் இருக்க முடியுமா :)

    Delete
  5. கூகுள் ஜோக் சூப்பர்.
   த ம 6

   ReplyDelete
   Replies
   1. நமக்கு உதவுற கூகுள் ஆண்டவர் ,அந்த அப்பனுக்கு உதவ மாட்டார் ,அப்படித்தானே :)

    Delete
  6. இரட்டை குடியுரிமைக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டு என்பது இப்போதுதான் தெரியும்.

   ReplyDelete
   Replies
   1. தெரிஞ்சுகிட்டதோடு நில்லுங்க :)

    Delete
  7. கூகிளில் தேடும் ஜோக் ரசிக்க வைத்தது அஞ்சு பத்மாவுக்குமா அஞ்சு பத்துக்குமா. இங்கு தனயனைபோல் அப்பனா.

   ReplyDelete
   Replies
   1. எதை எங்கே தேடுவது :)
    பத்மாவுக்கு செல்லப் பெயர் பத்து தானே :)
    ஒரே ஜீன் அப்படித்தானே இருக்கும் :)

    Delete
  8. அனைத்தும் அருமை, கூகுள் சூப்பர்.

   ReplyDelete
   Replies
   1. கூகுள் ,நமக்கெல்லாம் சூப்பர் தான் :)

    Delete
  9. வணக்கம்
   ஜி
   அனைத்தும் அருமையாக உள்ளது அதிலும் கூகிள் ஆண்டவர் செம கிட்...த.ம 8
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. பதிவர்கள் அனைவரும் கூகுள் ஆண்டவரின் பக்தர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துஇருக்க முடியாதே :)

    Delete
  10. கூகுள் ஆண்டவரிடம் எதைக்கேட்டாலும் கிடைக்கும் என்று தப்பாக புரிந்துகொண்டிருப்பாரோ? அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

   ReplyDelete
   Replies
   1. அளவுக்கு அதிகமா எதிர் பார்த்து ஏமாந்து போகிறார்கள் :)

    Delete