25 April 2015

சம்பாதிக்க முடியாதவன் புருசனா:)

==========================================
முட்டாள்களை   வேலை வாங்க முடியுமா :)
                  ''என்னை ஏன் வேலையிலிருந்து  நீக்குறீங்க ,முதலாளி ?''
                  '' ஃபோர்மேனைக் கூப்பிடுன்னு சொன்னா ,நாலு பேரைக் கூட்டி வர்றீயே !''


சம்பாதிக்க முடியாதவன் புருசனான்னு மனைவி கேட்கிற மாதிரி ....!
            ''நம்ம பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்கு   பணம் கிடைக்கலே போலிருக்கா ,ஏன் ?''
         ''வோட்டுக்கு பணம் தர வக்கு இல்லாதவன்  எல்லாம் தேர்தல்லே 
ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுக்கிட்டு இருக்காரே !''

நாணயம் வேணும்தான் ,ஆனா இப்படியா ?

              ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
                   ''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்து கதவை தட்டுகிறாரே !''

விண் மீன் உயரத்தில் மீன் விலை !
உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் 
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும் 
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?

1. என்ன ஒரு ஆவேசம்!

2. நல்லவேளை நாணயங்களாக மாற்றி வாடகை தராமல் விட்டாரே!

3. சிரி கவிதை விழிப்புணர்வுக் கவிதையாக உள்ளது.
1.என்னைக்கும் கொடுக்கிற மூதேவி இன்னைக்கு ஏன் கொடுக்கலைன்னு அவர் கேட்கத்தானே செய்வார் ?
2.காயினா கொண்டு போனா தன தலையிலேயே கனகாபிஷேகம் நடந்து விடுமோன்னு பயந்து விட்டார் !
3.இது தரகு முதலாளிகளின் காலம் ,விழிப்புணர்ச்சி ,ஊஹீம் ..வருமான்னு தெரியலே !
       கோவை ஆவி25 April 2014 at 08:00
NSK typeல இருக்கே.. பேஷ்..
இருக்காதா ,அவரோட நிஜ காதல் லீலைகளை ரசிக்க முடியவில்லை என்றாலும் ,காமெடியை ரசிக்காதவர்கள் யார் இருக்கக்கூடும் ?
         துரை செல்வராஜூ25 April 2014 at 08:35
1. பரமசிவத்துக்கு இன்னும் பொழுது விடியலையா!..

2. எதுக்கும் ஒரு தடவை ரெண்டு காலும் இருக்கான்னு .. பாத்துட சொல்லுங்க!..

3. ஊரான் வீட்டு தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா..
அதை காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்!..
அப்படின்னு ரொம்ப ரொம்ப பழைய பாட்டு!..
முட்டையிடாத - டூப்ளிகேட் கோழிக்கு - மீன் பரவாயில்ல..

பாவம்.. வலை போட்டு இழுக்கறப்ப - மீனுக்கும் வலிக்கும் தானே.. சிவ.. சிவ...
 1. 1.பத்து full வாங்கிற அளவுக்கு காசு தேறும்னு நினைச்சு ஏமாந்தவருக்கு எப்படி விடியும் ?
  2.அந்த வீட்டு டோர் நம்பர் 13 தான் ,உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?
  3.சரியாய் சொன்னீங்க ,செயற்கை கோழி விலை மலிவாய் இருப்பது உண்மைதான் ,பிராய்லர் மீனும் மலிவாய்க் கிடைத்தால் பரவாயில்லை !
  மீனுக்கும் வலிக்கும்தான் ,அதுக்குத்தான் சொல்றாங்களே ...மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதேன்னு !
 2. துரை செல்வராஜூ25 April 2014 at 10:11
  பிராய்லர்.. மீனா!?... சரியாப் போச்சு போங்க!..
  இனிமே.. அதுக்கான வேலையில எறங்கிடுவானுங்களே!?...
  எல்லாமே - இந்த மாதிரி வந்ததுன்னா... மனுசனும் அதே மாதிரி ஆயிடுவான்!..
  இப்பவே அந்த நிலைக்குப் போய்ட்டதா பீதிய கிளப்புறாங்க!..
  புரிஞ்சுதா.. இல்லையா!.. உங்களுக்குப் புரியாததா!..
 3. குளோனிங் ஏற்கனவே கண்டு பிடிச்சாச்சே !கண்ணுலே படுகிறவங்க எல்லாரும் ஐஸ்வர்யா ராய் மாதிரியே இருந்தாலும் போரடிச்சுருமேன்னுதான் நிறுத்தி வச்சுருக்காங்க போலிருக்கு !
 4. துரை செல்வராஜூ25 April 2014 at 10:33
  குளோனிங்.. சரி..
  ஆனா - நான் சொன்னது வேற..
  முக்கியமான மேட்டருக்கே வரவில்லை.. நீங்க!.
 5. சிவ சிவ ,கூட்டத்திலே கட்டுசோறு அவுக்காதேன்னு சொல்லி இருக்காங்களே ,அதான் அந்த மேட்டரை நாலு தாய்க்குலம் விரும்பி வர்ற இந்த இடத்திலே எப்படின்னுதான் யோசனையா இருக்கு !
  இந்த மாதிரி விஷயத்துக்கு'ஆன்மீக உலா 'நம்பள்கி தான் லாயக்கு !
 6. துரை செல்வராஜூ25 April 2014 at 11:18
  வாழ்க.. வளமுடன்!..


34 comments:

 1. 01. கணக்கு சரிதானே ?
  02. இவண்தான் ஜனநாயக குடிமகன்.
  03. கவனம் வேற கணக்குல வந்துடாம...
  04. நியாயமான கேள்விதான்.

  ReplyDelete
  Replies
  1. 1.அதான் கணக்கை முடிச்சிட்டார் :)
   2.உரிமையைத் தானே கேட்கிறார் :)
   3.அதை புருசன்காரன் பார்த்துக்குவான்,டோன்ட் ஒர்ரி :)
   4 ஆனால்,தரகன் காதுலே ஏறலையே :)

   Delete
 2. வணக்கம்
  ஜி
  அவனே ஒரு முட்டால் யாரிடம் போவன்.
  பல பேரிடம் வேண்டி பழக்கபட்டவர் போல.... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. யாரிடமும் போக முடியாது அவரை அனுப்பி விட்டார் :)

   காசு விஷயத்தில் மனுஷன் ரொம்பக் கறார் ஆச்சே :)

   Delete

 3. 1. ஹா...ஹா...ஹா... செந்தில் காமெடி நினைவுக்கு வருகிறது!

  2. ஹா...ஹா...ஹா... மக்கள் ரொம்பக் கெட்டுப் போய்விட்டார்கள்!

  3. ஹா...ஹா...ஹா... இவ்வளவு நாணயம் தேவையா? நல்லவேளை, சில்லறையா மாத்தி வாடகை தராத வரைக்கும் க்ஷேமம்!

  4. நான் அறியாத பிரச்னை!

  கீழே பார்த்தால் நான் முன்பு கொடுத்த பின்நூட்டஹ்திலும் அதே கமெண்ட்! மனசு ஒரே மாதிரிதான் யோசிக்கும் போல!

  :))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. 1.காமெடியில் முத்திரை படித்தவரின் நினைவு வந்தால் தப்பில்லே :)
   2.ஜனநாயகம் எப்படி கேலிக் கூத்தா மாறிப் போச்சு :)
   3.காசால் கனகாபிஷேகம் நடக்கும் (இதையும் என்னால் மறக்க முடியலே :)
   4.சாப்பிட வேண்டாம் ,விலையை தெரிந்து கொள்வதில் என்ன இருக்கு :)
   ஏற்கனவே 'ஸ்டோரில்' உள்ளது தானே ,என்றைக்கு இருந்தாலும் வெளியே வரும் :)

   Delete
 4. நாலு மனிதர்களை கூட்டிவந்த வேலைக்காரன் சிரிப்பு என்றால், மீன் தரகர் சீரியஸ்.
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. சீரியசும் ,சிரிப்பும் ,ஜோடி சேர்ந்ததை ரசித்ததற்கு நன்றி :)

   Delete
 5. இரவு 12 மணி நாணயக்காரர் மனதில் நின்றுவிட்டார்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தூக்கம் கெட்டதற்கு ,அவர் சார்பில்நான் மன்னிக்க வேண்டுகிறேன் :)

   Delete
 6. நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஓ..முதலாளி அந்த அரத்தத்தில் எடுத்துக் கொண்டாரா :)

   Delete
 7. அவரை ஃபோர்மான் ஆக்காததை இப்படிக் காட்டுகிறாரோ. ஓட்டுக்குப் பணம் தேர்தல் நேரத்தில்தானே மற்றநேரத்தில் ?ஆஹா இதுவல்லவா நாணயம்

  ReplyDelete
  Replies
  1. ஓ...எதிர்ப்பை இப்படியும் காட்டலாமா :)
   மாசாமாசம் கொடுத்தா கொடுக்க இது என்ன பென்சனா :)
   மனுஷனுக்கு நாணயம் முக்கியம் என்பதை தப்பா புரிஞ்சு கிட்டாரோ :)

   Delete
 8. பிராய்லர் குழம்பு (!?) - இன்னும் காரம் மணமாகத் தான் இருக்கு!...

  ReplyDelete
  Replies
  1. போன வருஷம் நீங்க வைச்சகுழம்பு ,இன்னும் மணக்குதே :)

   Delete
 9. முட்டாளை வேலை வாங்க முடியுமா? வேலை வாங்கிட்டாரே. அத்துனையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வேலையை காவு வாங்கிட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

   Delete
 10. பகவானே...
  அவ்வப்போது கவிதைகளையும் எழுதலாமே..!
  நகைச்சுவைப் பதிவுகளிடையே அதனையும் நகைச்சுவையாகப் பார்க்கத் தோன்றுகிறது.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சிரிகவிதை எழுத நினைத்தாலும் சீரியஸ் கவிதை ஆகி விடுகிறது ,நமக்குதான் சுட்டு போட்டாலும் சீரியஸ் வராதே :)

   Delete
 11. ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம 10

  ReplyDelete
  Replies
  1. அதிகம் ரசித்தது ...ஃ போர்மேனையா வாக்காளனையா குடித்தனக் காரரையா மீனவனையா :)

   Delete
 12. ‘போர்...’. மேன்களைக் கூப்பிடக் கூடாதுன்னு தெரிஞ்ச புத்திசாலி அவன் ... அந்த நாலு பேருக்கு நன்றி...!

  வேட்பாளரு... ஒரு வேளை வாத்தியாரா இருந்திருப்பாரோ...!

  ஒரு வேளை அவரு அமெரிக்கக்காரரா இருப்பாரோ என்னவோ...?


  உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..
  உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..
  உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..
  ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..

  தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
  தண்ணீரில் பிழைக்க வைத்தன்

  நன்றி.
  த.ம. 11.


  ReplyDelete
  Replies
  1. 'போர்' மேன்களை யாருக்குத் தான் பிடிக்கும் :)

   வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதை நீங்களுமா நம்புகிறீர்கள் :)

   உங்களுக்கு யார் சொன்னா ,அமெரிக்காகாரன் எல்லாருமே நாணயமான ஆளுங்க என்று :)

   தண்ணீரில் பிடிக்க வைத்தான் ,தரையிலே துடிக்க வைத்தான் என்று பாடினாலும் பொருத்தமே :)

   Delete
  2. ஆமாம்... 4 ‘மேன்’ என்றாலும் ‘மேல்’ என்றாலும் ‘பிமேல்’-க்குத்தான் பிடிக்கும்.

   வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்று சொல்லவந்தேன்... ஒருக்கால் விட்டுவிட்டுதைப்போய் பெரிதுபடுத்தலாமா?

   நமக்கும் அமெரிக்கக்காரனுக்கும் காலம் மாறுது...அதனால் கணக்கும் மாறுமுல்லன்னு சொல்ல விடமாட்டிங்களே...!

   தண்ணீரில் மீன் அழுதால்... கண்ணீரைத்தான் யார் அறிவார்...?

   Delete
 13. இதில் முட்டாளு முதலாளியா??? தொழிலாளியா ??? என்ற உண்மை தெரிஞ்சாகனும்...

  ஓட்டுக்கு பணம் கொடுக்க வக்கு இல்லாதவனைத்தான் வாக்கு இல்லாம ஆக்கி புடுறாங்கேளே....

  ReplyDelete
  Replies
  1. தோழரே ,இதுக்கு கொடியைப் பிடிக்காதீங்க ,முதலாள் என்பதே ஃபோர்மேன் என்பதன் தமிழ் அர்த்தம் ,அதைச் சொல்லத் தெரியாத முதலாளி முட்டாள்தான் :)

   வாக்காளன் என்றாலே வக்கற்றவன் என்றாக்கி விட்டார்களே :)

   Delete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. இன்றைய பதிவுகளில்
  விண் மீன் உயரத்தில் மீன் விலை!
  என்ற பதிவே சிறந்தது
  என்று நானுணருகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்குஞாயிறு , மீன் வாங்கப் போய் ,மீன் விலையை நேரடியாவே உணர்ந்து விட்டீர்களோ :)

   Delete
 16. ஹாஹாஹா! கண்டிப்பா நீக்க வேண்டிய மனுஷன் தான்! அருமையான ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எதுவும் தெரிஞ்சுக்காம வாழலாம்னு நினைச்சா முடியுமா :)

   Delete
 17. ஃபோர் மேன்-4 மேன் அஹஹஹஹஹ்

  அனைத்தும் ரசித்தோம்....

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி பாணியில், 4மேன் 80பதை ரசனையுடன் ,நீங்கள் சொன்னதை ரசிக்கிறேன் :)

   Delete