26 April 2015

தமிழனை உலகமே வியந்து பார்க்கும் !

---------------------------------------------------------

டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் !

                ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு  சாப்பிடுறதேயில்லே , ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
        ''கல்யாணம் ஆனதில் இருந்தே  நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''


எதை ஓசி கேட்பதென்று விவஸ்தை வேண்டாமா ?

       '' இன்சுலின் சிரிஞ்ச் பேனாவை  பையிலே  வச்சுருப்பீங்களே,

இப்ப காணலையே ,ஏன் ?''

      ''அதையேன் கேக்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் 
கேட்கிறாங்களே !''
ஹா..ஹா..
 1. போறப் போக்கைப் பார்த்தால் எல்லோர் பையிலும் இன்சுலின் பேனா வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் போலிருக்கு !
 2. அதுவும் யூஸ் அன் த்ரோ வாகிவிடும் விரைவில்... நல்ல நகைச்சுவை. 
 3. பலரும் பலரையும் யூஸ் அன் த்ரோ ஆகத்தான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்,மனிதனுக்கே இந்த நிலை என்றால் ,மருந்துக்கு ..?
 4. ஸ்கூல் பையன்26 April 2014 at 20:31
  நீங்கள் சொல்வது சரியே, இப்போதெல்லாம் முப்பது வயதுக்குள்ளாகவே பெரும்பாலானோர் இன்சுலின் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.... ஜோக் சிரிக்க வைத்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயத்தையும் கிளப்பி விடுகிறது...
  1. Bagawanjee KA26 April 2014 at 20:39
   நாட்டிலே ,தாராள மயக் கொள்கையால் எது நடந்ததோ இல்லையோ ,ஏராளமாய் சர்க்கரை குறையுடையோர் பெருகி விட்டார்கள் ,மருந்துக்கு தாராளமாய் செலவு செய்யவேண்டிய சூழ்நிலையும் உருவாகி விட்டது !பன்னாட்டு மருந்து கம்பெனிகள் காட்டில் மழைதான் !
தமிழனை உலகமே வியந்து பார்க்கும் !
             ''பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''


          ''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் '

புண்ணியத்தால்  கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த 

சக்தி வந்திடும் !''


சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?
சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 

தப்பைச் செய்தவர்களும் 


'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 

என்பதில்  என்ன நியாயம் ?

30 comments: 1. 1) அடடா.... என்ன தியாகம்... என்ன தியாகம்! பிள்ளைக் குட்டிகளுக்குக் குறைவிருக்காதே!

  2) ஹா...ஹா...ஹா... இலவசங்கள் கொடுத்துப் பழக்கி விட்டிருக்கும் அரசைச் சொல்லணும்!

  3) ஹா...ஹா...ஹா...அல்ரெடி வந்திடுச்சிங்க!

  4) புத்தர் கூடப் பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம், பித்தர் கூட புத்தனாகி தத்துவங்கள் சொல்லலாம்... புத்தி கேட்ட மானிடர்க்குத் தத்துவங்கள் தேவை என்ன...


  :)))))))))


  ReplyDelete
  Replies
  1. 1.ஆமாம் ,அவர் மனைவியும் கசப்போடு ஆறு பிள்ளையைப் பெற்றுத் தள்ளி விட்டாரே :)

   2 பேனா என்று நினைச்சுக் கேட்டீங்களான்னு கேட்டா ,இன்சுலின் பேனான்னு தெரிஞ்சுதான் கேட்டேன்னு அதிர்ச்சியைக் கொடுக்கிறாரே :)

   3இருட்டில் பார்க்கும் சக்தி ,எனக்கு பாதிதான் வந்திருக்கு :)
   4.புத்தி கெட்ட ,புத்தி கெடாத மனிதருக்கும் தத்துவம் தேவையில்லை ,அப்படின்னா ,யாருக்குத்தான் தேவை :)

   Delete
 2. கசப்பு நல்லது தான் ஜி...!

  ReplyDelete
  Replies
  1. மனைவியோடு மனக் கசப்பு நல்லதல்ல ,அப்படித்தானே :)

   Delete
 3. Replies
  1. பேனா சுமந்த பை ,இன்சுலின் பேனாவை சுமப்பது அருமையா :)

   Delete
 4. கசப்பும் ஒரு மருந்துதானே, அப்போ கணவனை ஆரோக்கியமா வைத்திருக்கும் மனைவியும் மருந்துதானே, அதனால் அப்படி சொல்லியிருப்பாரோ.
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. நீயே எனக்கு பாவக்காய் மாதிரிதான் ,எதுக்கு இன்னொரு பாவக்காய் என்று சொல்லுவாரோ :)

   Delete
 5. கசந்த வசந்தம்...!

  ஒங்க சக்கரையையும் சேத்து கொடுக்க வேண்டியதுதானே... போயிட்டு போராரு பாவம்...!

  பூனைக்கு மணி கட்டுறது யாருன்னு பாத்தா... கட்டிடீங்க...அரண்டவனுக்கு இருண்ட இடமெல்லாம்......... இனி அலையப்போறாங்கன்னு சொல்லுங்க...!

  எ சூழ்நிலைய மொதல்ல புரிஞ்சுக்கங்க... அப்பறம் இப்படி பேச மாட்டீங்க...!

  த.ம. 7.

  ReplyDelete
  Replies
  1. சுகந்த வசந்தம் இப்படியாகி போச்சு :)

   சக்கரை இனிக்கிற சக்கரைன்னு பாட முடியாதவர்கள் பாவம்தான் :)

   கோட்டான் கண்ணை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக்க முடியுமான்னு பார்க்கணும் :)

   உங்க சூழ்நிலையைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு :)

   Delete
 6. உங்கள் நகைச்சுவைகள் எந்தக் கசப்பிலும் இனிக்கின்றன பகவானே‘!

  ReplyDelete
  Replies
  1. கசப்பையும் இனிப்பா நினைச்சா இனிப்புதான் :)

   Delete
 7. இன்சுலின் ஜோக்கை நன்றாகவே – குறிப்பாக இன்சுலின் சிரிஞ்ச் பேனா ஓசி – நன்றாகவே ரசித்தேன். இன்சுலினில் கூட ‘இன்’ என்ற இனிமை.
  த.ம.10

  ReplyDelete
  Replies
  1. வள்ளுவர் சொல்லி இருக்கும் 'இனிய சொலின் 'என்பதும் கூட இனிமைதானே :)

   Delete
 8. கசப்போடு வாழ்க்கையா? இருக்கும் இருக்கும்,,,,,,,,,,
  இன்னும் எது எல்லாம் ஓசியோ,,,,,,,,,,,,,,,,
  எதார்த்தம்
  புத்தன் பித்தனாகலாம், பித்தன் புத்தனாகலாம்,,,,,,,,,,,,
  என்ன இப்ப?

  ReplyDelete
  Replies
  1. கசப்போடு வாழ்ந்தாலும் ,ஸ்ரீ ராம் ஜி சொன்ன மாதிரி வாரிசுகள் விசயத்தில் சக்கைப் போடு போடுகிறாரே :)
   ஓசின்னா எனக்கொண்ணு,என் பெண்டாட்டிக்கு ஒண்ணுன்னு சொல்வாரோ:)
   நாம புத்தனும் ஆகவேண்டாம் ,பித்தனும் ஆக வேண்டாம் :)

   Delete
 9. கசப்போடு வாழ்க்கையா? இருக்கும் இருக்கும்,,,,,,,,,,
  இன்னும் எது எல்லாம் ஓசியோ,,,,,,,,,,,,,,,,
  எதார்த்தம்
  புத்தன் பித்தனாகலாம், பித்தன் புத்தனாகலாம்,,,,,,,,,,,,
  என்ன இப்ப?

  ReplyDelete
  Replies
  1. அதெப்படி ,ஒரே நேரத்தில் அதே நொடியில் இரு தடவை கமெண்ட் போடுகிறீர்கள் :)

   Delete
 10. கல்யாணம் ஆனவங்க மட்டும்தான் கசப்போடு வாழ்கிறாங்களா...!!!! அப்போ கலியாணம் ஆகாதவுக இனிப்போடாவா வாழ்கிறார்கள்??????

  ReplyDelete
  Replies
  1. கசப்பு ,கல்யாணம் ஆனதால் வந்ததா ,ஆகாததால் வந்ததா :)

   Delete
 11. கசப்போடு வீட்டில்மட்டுமா. ? அப்படிப் பார்த்தால் யாருக்கும் டெங்குக் காய்ச்சல் வரக் கூடாதே. இன்சுலின் பேனா பதிவு போட்டு ஏன் எல்லோருக்கும் பயம் கொடுக்கிறீர்கள். எல்லாமே ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. மனக் கசப்பு இல்லைஎன்றாலே டெங்கு,சர்க்கரை வராதே :)

   Delete
 12. அருமையான நகைச்சுவைகள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இப்போ வாழ்த்துக் கூறியதற்கும் ,இரவு ,எச்சரிக்கை தகவல் தந்ததற்கும் நன்றி ,சுரேஷ் ஜி :)

   Delete
 13. 01. அப்படீனாக்கா ? பொண்டாட்டியோட சந்தோஷமாக வாழ்ந்தால் டெங்கு காய்ச்சல் வருமோ ?
  02. ஓசி வாங்குறது விவஸ்தையே இல்லாமல் பேச்சு.
  03. போற போக்கைப்பார்த்தால் பூனையாக பிறந்தாலும் தேவலை என்றாகி விடுமோ ?
  04. எந்த தப்பு ?

  ReplyDelete
  Replies
  1. 1.அளவிற்கு மீறி சந்தோசமாய் இருந்தால் காய்ச்சல் வரத்தான் செய்யும் :)
   2.வாங்கிறது ஓசி ,இதில் எதற்கு விவஸ்தை :)
   3.கோட்டானாகவும் பறந்து திரியலாம் :)
   4.தெரிந்தும் ,தெரியாத மாதிரி கேட்டா ,எதை சொல்றது :)

   Delete
 14. நண்பரே! உங்கள் பெயரில் தமிழ் பதிவர்களின் நண்பன் தளம் மூலம் முகநூலில் ஆபாசவீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது! உடனே நீக்க முயற்சிக்கவும்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி .எந்த முட்டாள் அதை என் பெயரில் spam post செய்ததென்று தெரியவில்லை ,உடனே அதை நீக்கி விட்டேன் ,அந்த வீடியோ படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் !
   மீண்டும் இப்படி நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கையாக என் பாஸ் வேர்டை மாற்றிக் கொண்டு விட்டேன் ,இனி இது தொடராது என்று நம்புகிறேன் !

   Delete
 15. பெரும்பான்மையான வீடுகளில் அப்ப பாவக்காய்தானு சொல்லுங்க....

  பென்சிலின் பேனா இலவசமா எங்கப்பா?

  இருட்டு நன்றாகவே பழகிவிட்டது ஜி...ஹஹஹ

  ஜி! உங்களுக்கு எதிரி யாராவது இருக்காங்களா என்ன?!!!ஹ்ஹாஹ் இல்லை உங்க பெயர்ல ஆனந்த விகடன் முகனூலிலி இருந்து ஒரு ஆபாச வீடியோ வந்துச்சு. நாங்க அதை ரிமூவ் பண்ணிட்டோம்....

  ReplyDelete
  Replies
  1. பாவக்காய் சாப்பிடுவதில் பாவம் ஒன்றும் இல்லையே :)

   ஸ்வீட் கடையில்தான் :)

   அப்படின்னா டார்ச் லைட்டே விற்பனை சரிந்து விடுமே :)

   அதில் இருந்துமா ,சொல்லவே இல்லே ....என் பெயர் வலையுலகில் பிரபலம் ஆகிவிட்டதா என் பெயரைப் பயன் படுத்திக் 'கொல்லும்' அளவிற்கு :)

   Delete