9 April 2015

நடிகையின் ஆங்கில அறிவு :)

            ''நடிக்க வந்த சில வருடங்களில் நிறைய வேடங்களில் நடித்து விட்டீர்கள் ,இதுவரை வந்த 'கேரியரில் ' மறக்க முடியாதது எது ?''

           '' மீன் குழம்பும் ,நண்டு  வருவலும்தான் ...தயாரிப்பாளர் எனக்காக ஸ்பெசலா கேரியரில் அடிக்கடி  கொண்டு வர்றாரே  !''

மெண்டல் குடும்பப் பொண்ணுன்னு வேண்டாம் என்றாரோ !

          ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டுப் போனவங்க ,
இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
         ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க  ஃபேமிலி மனநல டாக்டர்
கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''
         வருண்9 April 2014 at 02:49
:-)))
Bagawanjee KA9 April 2014 at 08:42
ஒரு மனநல டாக்டரை குடும்ப டாக்டர்னு சொல்லிக்க முடியலே ,எந்த விதமான சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் :)
எப்படி நம்ம ஃபீலிங் ?
தேவையா இது...? ஹா... ஹா...
Bagawanjee KA9 April 2014 at 08:47
தாத்தா அரை லூசு ,அப்பன் முழு லூசு ,ஆனா பொண்ணு குணத்திலே தங்கம்ன்னு பரட்டைத் தனமா டாக்டர் ஏதும் சொல்லி இருப்பாரோ ?
டிபிஆர்.ஜோசப்9 April 2014 at 12:04
இது தேவையா? இதத்தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிக்கறதுன்னு சொல்வாங்க :))
Bagawanjee KA9 April 2014 at 12:11
இப்படிப் பார்த்தா மனநல மருத்துவரை,எங்க குடும்ப டாக்டர்ன்னு சொல்லிக்கவே கூடாது போலிருக்கே!

நாடி ஜோதிடமே ?அதிலும் இரட்டை நாடி ஜோதிடமா ?

      ''உ ன் வீட்டுக்காரரோட நாடி ஜாதகத்தை பார்க்கவே முடியாது 
போலிருக்குன்னு சொல்றே ,ஏன் ?''
       ''அவருக்கு இரட்டை நாடி , இரட்டை நாடி ஜோதிடம் யாரும் 
பார்க்கிறமாதிரி தெரியலேயே !''

நாம் செய்த மாதவம் தமிழராய் பிறந்தது !

யாரும் இங்கே ராமன் இல்லை ...
கருவாடு மீனாகாது கறந்தபால் மடிபுகாது ...
அவள்  பத்தினியுமில்லை நான் முற்றும் துறந்த முனிவனுமில்லை ...
காலத்தால் அழியாத பொன்மொழிகள் இவை !
தமிழனாய் பிறந்ததற்கு மாதவம்தான் செய்திருப்போம் போலிருக்கிறது !

28 comments:

 1. 1) ஹா...ஹா...ஹா... ரசித்துச் சிரித்தேன்.

  2) சொந்தச் செலவுல சூன்யம்?

  3) என்ன கொடுமை!

  4) ஒப்புதல் வாக்கு மூலங்களா? சேறு பூசுதலா?

  ReplyDelete
  Replies
  1. 1.கேரியர் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்வார் [போலிருக்கே :)
   2.இதைக் கூடவா சொல்லக்கூடாது :)
   3.கேட்பார் யாருமே இல்லையா:)
   4.சொன்னவர்கள் இருந்தாலாவது உங்க சந்தேகத்தைக் கேட்கலாம் :)

   Delete
 2. Replies
  1. இன்றைய உங்கள் பதிவை நானும் ரசித்தேன் ஜே கே ஜி :)

   Delete
 3. கேரியரில் இப்படிகூட வகை உண்டா? தங்களின் நகைச்சுவை உணர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டு வரப்படும் நாலடி உயர கேரியரைப் பார்த்து நானும் அசந்து போயிருக்கிறேன் :)

   Delete
 4. Replies
  1. எனக்கு கேரியரைப் பார்த்தா ,வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா பாட்டுதான் ஞாபகத்தில் வரும் :)

   Delete
 5. 01. ஜி இது நகைச்சுவை மட்டுமல்ல, உண்மையும்கூட
  02. உளருவாய் குடும்பமோ...
  03. ரெட்டைநாடி உள்ள ஜோதிடரை பார்க்க வேண்டியதுதான்.
  04. அருமையான தத்துவம் ஜி.

  ReplyDelete
  Replies
  1. 1.நீங்க சொல்றதைப் பார்த்தா ,கேரியரைத் திறந்து பரிமாறின மாதிரித் தெரியுதே :)
   2.மன நல டாக்டரைக் கேட்டுக்குங்கன்னு சொல்றது ,குத்தமாய்யா :)
   3.ஆஹா , சரியாக கண்டு பிடிச்சீங்க :)
   4.பத்தினியும் இல்லை ,...இதைக் கேட்கும்போதே கண்ணில் ஒரு அழகு முகம் தெரியுதா :)

   Delete
 6. மனோரமாவுக்கு வசந்தமாளிகையில் எழுதிக்கொடுக்காமல் விட்ட வசனத்தை இப்பொழுது எழுதிக்கொடுத்துவிட்டீர்களே! அருமை... அருமை...

  சபாஷ்... நாகேஷ்... வி.கே.ஆரும் இல்ல... ஆட்சி பேச முடியாமல் இருக்கிறார்... அருமை...கேரியர் தயாராகட்டும்...! (அ)சைவம் ஆகாதாம்.


  மாப்பிள்ளைக்கும் அவர்தான் பேமிலி டாக்டராம்...! காந்தம் மாதிரி...ரெண்டு ஒரே பக்கமும் ஒட்டாதுன்ட்டாராம்...!


  அத்தான்... நாடி நரம்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் அத்திடுவேங்கிறாரு...!


  பொன் மொழிகள் காலத்தால் அழியாததுதான்... தமிழன்தான்...? ஆந்திரா... இலங்கை... அகிலத்தில்...!


  -நன்றி.
  த.ம. 5.

  ReplyDelete
  Replies
  1. இப்படியெல்லாம் பேசி ரசிக்க வைத்த ஆச்சி ,இப்போ பேசாமல் படுக்கையே கதியாய் இருப்பது ,எனக்கும் வருத்தம் அளிக்கிறது !

   மெண்டலும் மெண்டலும் சேர்ந்தா நல்லதே நடக்காதா :)
   நரம்பு அறுத்து அளந்து ஜோசியம் சொல்வாரோ:)

   இப்போ பக்கத்து மாநிலத்திலேயே (


   Delete
 7. ஆங்கில வார்த்தையைத் தமிழில் எழுதினால் இப்படித்தான் அர்த்தம் கொள்வார்கள் பொன் மொழிகள் எங்கோ கேட்டது போலிருக்கே

  ReplyDelete
  Replies
  1. மேரியம்மா கேரியரில் எறா(ல்) இருக்குது
   அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கிடக்குது ..என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தாலும் தப்பில்லை :)

   எல்லாம் உங்க வயசுலே கேட்டதுதானே :)

   Delete
 8. கொடுத்து வச்ச நடிகை...' மீன் குழம்பும் ,நண்டு வருவலும்...ம்ம.ம்..

  ReplyDelete
  Replies
  1. தயாரிப்பாளர் சின்ன மீனைப் போட்டு ,நண்டு பிடியாய் பிடித்து விடுவார் போலிருக்கே :)

   Delete
 9. 1) அட ! இப்பவே உங்க கேரியர்ல உங்களுக்கு ”கடலளவு” அனுபவம் வந்திருக்குமே!
  2) மாப்பிளை கீழ்ப்பாக்கத்துக்காரருங்கிற உண்மை தெரிஞ்சு கிண்டல் பண்றாங்கன்னு நினைச்சிருப்பாங்களோ?
  3) உங்களக் கல்யாணம் பண்ணியிருக்கும்போதே அவரோட சப்த நாடியும் ஒடுங்கியிருக்குமின்னில்ல நெனைச்சேன்!
  4) சரியாச் சொன்னிங்க பகவான்ஜி... இப்பவும் பாருங்க அம்மா தவத்திலதான் இருக்காங்க :))
  இல்ல இல்ல அம் மாதவத்திலதான் இருக்காங்கன்னு சொன்னேன்.

  எதுக்குப்பா வம்பு :))

  t m 9

  ReplyDelete
  Replies
  1. 1.கடலளவு வந்தாலும் வரவேண்டியது ,பிரபஞ்ச அளவிற்கு இருக்கே :)
   2.அப்படின்னா ரொம்ப வசதியா போச்சுன்னு நினைக்க வேண்டியதுதானே :)
   3.சப்த நாடியை மறுபடி பழைய நிலைமைக்கு கொண்டுவர ஜோதிடர் தேடுகிறாரோ :)
   4.ஆள விடுங்க ,தீச்சட்டி தூக்க என்னாலே முடியாது :)

   Delete
 10. வணக்கம்
  ஜி
  இப்படியான கவனிப்பு இருந்தால்தான் ... அடுத்த கட்டம் நகர முடியும்....

  மற்றவைகளை இரசித்தேன் இறுதியில் சொல்லிய பொன் மொழிகள் செம கிட்... ஜி. த.ம9

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மாதவம் உங்களுக்குப் பொருந்தாதே ,ரூபன் ஜி :)

   Delete
 11. 1)கேரவன்ல மறக்க முடியாத நிகழ்ச்சி எது?
  கேட்டால் பதில் பல கோடி இருக்கும்?
  2) மார்க்கெட் மாயமாகி போனதாலோ என்னவோ?

  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. படத்தில் கதை இருக்கோ இல்லையோ ,இந்த கேரவனில் நிறைய கதைகள் இருக்கும் போலிருக்கே .....
   என் கேரவன் பக்கமே சிம்பு வரக்கூடாது என்று நயன்தாரா சொன்னதாக செய்திகூட வந்ததே :)

   Delete
 12. ரெட்டை நாடி ஜோதிடமும், கேரியரும் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பார்த்து ரொம்ப நாளாச்சே, ஜோதிடத்தை சொல்லலை ...உங்களைச் சொன்னேன் :)

   Delete
 13. நடிகை சாப்பாட்டு ராமி போல!

  ReplyDelete
  Replies
  1. சின்ன வயசுலே வறுமையில் வாடியதால் ,இப்போ இப்படி ஆகியிருப்பாங்களோ:)

   Delete
 14. ஹஹாஹாஹா நடிகைகளை விட நடிகர்களுக்கு இந்த ஜோக் பொருத்தமா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பொருந்தும்தான் ,நடிகைகளில் சிலர்தானே நிலைத்து நிற்க முடிகிறது :)

   Delete