1 May 2015

லியோன் ,லியோனி ,யார் அதிக பிரபலம் :)

 லியோன் ,லியோனி ,யார் அதிக பிரபலம் :)              

             ''நம்ம லியோனி வாங்கின புது செல் ,எந்த கம்பெனி ?'' 

             ''ஜியோனி தான் !''

ஜாதகம் போலியா ,ஜோதிடர் போலியா ?

        ''தலைவரோட ஆயுசுக் காலம் நாளையோட 

முடியுதுன்னு எப்படி சொல்றீங்க ,ஜோசியரே ?''

       ''ஜாதகத்தில் ஜனன நேரம் பக்கத்திலே,ஜனகன மன 

நேரமும் போட்டிருக்கே !''
தங்கம் விக்கிற விலையில் ...?

          ''நீங்க தெரியாம விழுங்கின மூக்குத்தியை

ஆப்ரேசன் செஞ்சு எடுக்கணும்னா லட்ச ரூபா

செலவாகுமே !''


   ''பரவாயில்லை டாக்டர் ,நான் வேற மூக்குத்தியை

வாங்கிக்கிறேன் !''

மனித மனம் ஒரு குரங்கு ?

டார்வின் கொள்கைப்படி ...

பரிணாம வளர்ச்சியில் உருவம் மாறிவிட்டாலும் ...

குரங்கின் குணம்

மனதிலே மாறாமலே இருக்கிறது ...

சேனலை மாற்றி மாற்றி  தாவிக் கொண்டே இருக்கும்

TV ரிமோட்டே சாட்சி
  !

 1. நா.முத்துநிலவன்1 May 2014 at 00:26   இதிலென்ன சந்தேகம் பகவானே? சாதகமாகச் சொலவதுதான் சாதகம், மற்றபடி சாதகமே போலிதான், அதைச் சொல்பவர் பாவம் வறுமையின் குழந்தை அல்லது வேறு வேலைகிடைக்காத “வேலையில்லாத் திண்டாட்டத்தின் குழந்தை” அவரும் போலியான வேலையைச் செய்பவர்தான். இது ! டூப்புகளின் உலகம். ஆனால் கதாநாயகன் தான் பெரியாளாகப் புகழ்பெறுவான். 

   1. Bagawanjee KA1 May 2014 at 22:27 ஜோதிடர் சொல்வதெல்லாம் பலிக்கணும்னா அவருக்கு நல்ல நேரமா இருக்கணுமாம்,முதல்லே அவர் ஜாதகத்தை யாரிடம் கொண்டு போய்க் காட்டுவது ?டிவியில் சில ஜோதிடர்கள் உறுதியாக நடக்கும் என்று அள்ளி விடுவதைப் பார்த்தால் ,அரசியல்வாதிகளுக்கு இவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்களாய் தெரியவில்லை .
   2. அ. வருசத்ல சனவரி, ஆகஸ்டுல கண்டம் - ஜோசியர்.
   3. ஆ. அத்தானெ பாத்தேன். ஒங்க பெறந்த ஊட்லேந்து கொண்டாந்த மூக்குத்தியா - லேடி டாக்டர்.
   4. இ. இந்த ரிமோட்டக் கண்டுபிடிச்சவன் கட்டேலபோக. ஒரு சீரியல் பாக்கவுடறார இந்த மனுசன் - தாய்க்குலம்
   5. Bagawanjee KA1 May 2014 at 23:08
   6. அ. அந்த நாட்கள் இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்துவதாச்சே!
   7. ஆ .வாங்கித் தர ஒரு இளிச்சவாயன் இருக்கான்னு சொல்றீங்களா ?
   8. இ. சீரியல் நேரத்திலே ரிமோட் தாய்க்குலத்தின் கையில் பசை போடாமலே ஒட்டிக் கொள்கிறதே !

26 comments:

 1. இன்றைய பதிவில் என்னை தாக்கியது
  ஒன்று தான்...
  மனித மனம் ஒரு குரங்கு?
  அதற்கு
  TV ரிமோட்டே சாட்சி!
  அதிலும்
  பெண்கள் தான் அதிகமாம்
  அதற்கு
  என் மனைவியே சாட்சி!

  ReplyDelete
 2. 1) ஹா...ஹா...ஹா... அதை நவோமி அறிமுகப்படுத்தலையா?

  2) அட... இதெல்லாம் கூடச் சொல்லிடறாங்களா! சாகற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாள் நரகமாயிடும்னு சுஜாதா சொல்லி இருக்காரே...

  3) ஹா...ஹா...ஹா... ரெண்டு மூணு மூக்குத்தி கூட வாங்கலாம்!

  4) டிவி ரிமோட்டில் மட்டும்தானா குரங்கு மனம்?

  ReplyDelete
 3. நவோமி படத்தைப் போட்டு இருந்தால் அதையும் ரசித்து இருப்பீர்களோ :)

  ReplyDelete
 4. மூக்குத்தி நகைச்சுவை மிக அருமை.

  ReplyDelete
 5. மூக்குத்தி பூ மேலே காத்து உட்கார்ந்து பேச நாளாகுமோ :)

  ReplyDelete
 6. லியோன் ,லியோனி ,யார் அதிக பிரபலம்----இவர்களைவிட தாங்கள்தான் அதிக பிரபலம்..தலைவரே.....

  ReplyDelete
 7. இது உங்களுக்கு தெரியுது ,லியோனுக்கும் ,லியோனிக்கும் தெரியுமா :)

  ReplyDelete
 8. என் reply பட்டனுக்கு என்னாச்சுன்னு தெரியலே ,ஓபன் ஆக மாட்டேங்குதே.வலைச் சித்தரின் உதவியைக் கோரியுள்ளேன் !

  ReplyDelete
 9. அன்பு யாழ் பாவாணன் அவர்களே .
  ஒன்றிலிருந்து அறுபது வரை சேனல் மாற்றிக் கொண்டே 'ஹும்,ஒண்ணுமே சரியில்லை 'என்று சலித்துக் கொளவது ஆண்களும் தானே :)

  ReplyDelete
 10. அன்பு ஸ்ரீ ராம் ஜி .
  நவோமி ,கல்யாணம் முடிக்காமல் பிள்ளைப் பெற்றுக் கொள்வதில் பிஸியாக இருப்பதால் இதை அறிமுகப் படுத்தலே :)
  சுஜாதா சொன்னது 1௦௦/100 சரிதான் :)
  டாகடர் விழுங்க நினைக்கும் காசுக்கு தாராளமாய் வாங்கலாம் :)
  எதிலில்லை குரங்கு மனம்னு யோசித்தாலே தாவி தாவி ஓடுதே :)

  ReplyDelete
 11. அன்பு புலவர் இராமாநுசம்,
  மூக்குத்தி கண்ணை சிமிட்டியதை ரசித்தீர்களா:)

  ReplyDelete
 12. நான்லியோனி அல்லது லியோன் பிரபலம் என்று சொன்னால் யார் நம்புவார்கள் அது சரி நவோமி யார்.?சாகும்போது ஜனகனமன பாடுவார்களா.?ரெண்டு மூணு மூக்குத்தி கூட விழுங்கலாமெதைப் பற்றி நினைக்கக் கூடாதோ அது பற்றித்தான் நினைக்கும் குரங்கு மனசு.

  ReplyDelete
 13. நீங்கள் சொல்ல வேண்டாம் ,நீங்கள் அறிந்தவரே அதிக பிரபலம்னு வச்சுக்க வேண்டியதுதான் :)
  நவோமி ?ஹாலிவுட்டின் பளபளா கறுப்பு நடிகை :)
  தேசீயக் கொடியை உடல் மேல் போற்றி ஜன கனமன என்றுதானே பாடி வழி அனுப்புகிறார்கள் :)
  எதை நினைக்கக்கூடாது என்பதும் ஒரு நினைப்பு தானே :)

  ReplyDelete
 14. லியோனியும் ,முத்து நிலவனும் இங்கும் இணை பிரியாமல் வந்திருப்பது பொருத்தம்தானே :)

  ReplyDelete
 15. இது லியோனால் வந்த சோதனை போலிருக்கு ,இப்போ சரியாகி விட்டது:)

  ReplyDelete
 16. அன்பு முஹம்மது நிஜாமுத்தின் ,
  உலகத்தை கதி கலக்கிய ஒசாமாவையே கதி கலக்கியவர் இந்த லியோன்தான்:)

  ReplyDelete
 17. அனைத்து ஜோக்குக்களும் அருமை!

  ReplyDelete
 18. அன்பு சுரேஷ் ஜி ,
  படித்து ரசித்ததுடன் நின்று விடாமல் கருத்துரையும் சொன்னதற்கு நன்றி :)

  ReplyDelete
 19. ஹஹ்ஹஹ் எல்லாமே! ரிமோட்டில் குரங்குமனம் ஹஹஹ் மிகச் சரியே.....

  ReplyDelete
 20. இந்த குரங்கை இயக்குற ரிமோட் யார் கையிலோ :)

  ReplyDelete
 21. KILLERGEE >>

  All OK இருந்தாலும் அடிக்கடி மறுமொழி பட்டன் மக்கர் பண்ணுதே ஜி :)

  ReplyDelete