Saturday, 16 May 2015

வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா ?

-----------------------------------------------------------------------------------------

நல்ல பொருத்தம் தான் !
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு  
சொல்றீங்களே ஏன் ?''
     
               ''தூக்கத்திலே   கூட அந்த தம்பதிகள் ஜோடியா  வாக்கிங்  

போறாங்களே !''




' டிபன் ' கேரியரில் மனைவி 'சோறு' அனுப்பினால் வேண்டாம் என்பாரோ ?

            ''டிபன் பாக்சை தமிழில் ஓரடுக்கு என்று தாராளமா சொல்லலாமே ...இதிலே  உனக்கென்ன சந்தேகம் ?''
        ''அப்படின்னா ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''

வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா ?
      ''மறைக்காம என்கிட்டே சொல்லுங்க ...  எதுக்கு பூவா ,தலையா போட்டு 
பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
     ''உங்க பொண்ணு தலையில ரோஜாப்பூ  இன்னைக்கி  இருக்குமா                         இருக்காதான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''



மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் !

சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
சாதிமோதலை உண்டாக்கி மக்களை சாகடிக்கிறார்கள் !
    1. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் !சாதனையாளரைத் தொடர்வதில்பெருமிதம் கொள்கிறோம்




    1. ஐயோ ,அக்னி வெயில் நேரத்தில் இப்படி ஐஸை தூக்கி என் தலையில் வைக்கிறீர்களே ,ஜல்ப் பிடித்து விடும் போலிருக்கு !

28 comments:

  1. 01. இவங்களுக்கு கண்டிப்பாக பரிசு கொடுக்கனும்.?
    02. ஆஹா குழப்பமாகத்தான் இருக்கு.
    03. இப்படியுமா ?
    04. இது சாதனையே...

    ReplyDelete
    Replies
    1. 1.திறந்து கிடக்கிற வீட்டிலே திருடன் புகுந்து பரிசு கொடுத்துடப் போறான் :)
      2.அடுக்கடுக்கா குழப்பம் வருதா :)
      3.எது எதுக்கு பந்தயம் :)
      4.உண்மை மருத்துவர்களின் உலகச் சாதனை :)

      Delete
  2. தினம் ஒரு ஆப்பிள் மாதிரி தினம் ஒரு பகவன்ஜீ ஜோக்!!
    கலக்குங்க பாஸ்

    ReplyDelete
    Replies
    1. கடித்தாலும் சுவைதானா :)

      Delete
  3. Replies
    1. இருந்தாலும் அந்த அரசியல் பிராக்டீசை ரசிக்க முடியவில்லைதானே :)

      Delete
  4. சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. தூக்கத்தில் சேர்ந்து போகிறவர்கள் ,நனவில் சேர்ந்து போவதில்லை ?;)

      Delete
  5. ஒற்றுமையான தம்பதியினர் தூக்க வியாதியிலும் இதற்குத்தான் டிஃப்ன் காரியர் என்று அழகாகத் தமிழிலேயே சொல்லலாம் என்பது...!நல்ல காலம் பெண்ணைக் கேட்கலாமா என்று பூவாதலையா போடலை. .

    ReplyDelete
    Replies
    1. தூக்கத்தில் சரி ,நிஜத்தில் எப்படியோ :)
      இதுதான் சுத்தத் தமிழ் :)
      அதையும் கேட்பார்கள் ,அடுத்த முறை :)

      Delete
  6. Replies
    1. சொல் ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள் அய்யா :)

      Delete
  7. வயசு பயலுகா ..வாயைக் கிண்டினா...இப்படித்தான் ......வந்து விழும் ...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வயசுத் திமிரு :)

      Delete
  8. ரசித்தேன்...ஐயா

    தம +1

    ReplyDelete
    Replies
    1. http://lh5.googleusercontent.com/-403itXB8odI/AAAAAAAAAAI/AAAAAAAAEiQ/n69_nBcmbSg/s35-c/photo.jpg
      இதென்ன தெரிகிறதா ,மேலே ரசிக்க வைக்கும் குறும்புக் குழந்தையின் கூகுள் விலாசம் :)

      Delete
  9. கூடாதுதான் பகவானே :)

    ReplyDelete
    Replies
    1. பயபிள்ளைங்க வம்புக்கு அலையுறாங்களே :)

      Delete
  10. இப்படித்தான், ஆனாலும் தங்கள் கற்பனை அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. பூவா தலையா போட்டுப் பார்ப்பதை விடவா மோசம் :)

      Delete
  11. ரசித்து மகிழ்ந்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  12. Replies
    1. ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  13. தூக்கத்திலே கூட ஜோடியா வாக்கிங் போறாங்களா - அது
    உள (மன) நோய் ஆக இருக்கலாம் - அப்ப
    மருத்துவரை நாடத்தான் வேண்டுமே!

    ReplyDelete
    Replies
    1. சேர்ந்தே வருவார்கள் ,மருத்துவர் பார்த்துக்குவார் :)

      Delete
  14. வணக்கம்
    ஜி
    சாமியாரிடம் கொண்டு போகத்தான் வேண்டும். போல...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. யாரை ,எதுக்குன்னு புரியலியே :)

      Delete