2 May 2015

மடியிலே கணவன் ,மனதிலே காதலனா :)

  பெரிய தேவ ரகசியம் ,சொல்லப் போறார் :)        

            ''அம்மா தாயே ,சாப்பிட்டு நாலு நாளாச்சு ,ஏதாவது இருந்தா போடுங்க !''

            ''நாலு நாள் சாப்பிடாம தாக்குப் பிடிக்கிற அளவுக்கு  அப்படியென்ன  சாப்பிட்டே ,அதை முதல்லே சொல்லு !''


கரப்பான் பூச்சியிடம் உள்ள பயம் கூட கணவனிடம் ...?

          ''உங்க மீசையைப் பார்த்தா எனக்கு கரப்பான்பூச்சி ஞாபகம்தான் 
வருது !''
       ''உங்களுக்கு வருது சரி ,கரப்பான் பூச்சிக்குப் பயப்படுற என் 
மனைவிக்கு  வர்ற மாதிரி தெரியலையே ?'

 1. அப்படி ஐடியா பண்ணி கரப்பான் மீசை வைத்தும்
  பயப்படவில்லையென்றால் என்னதான் செய்வது ?
  1. இது ஐடியான்னு தெரிஞ்சா ...கரப்பான் பூச்சியை அடித்த துடைப்பத்தால் ,அவரும் அடி வாங்க வேண்டியிருக்கும் !


மாப்பிள்ளை 'CHEF 'ப்பா இருப்பாரோ ?

           '' கல்யாணமான புதுசுல நான் அடிக்கடி  என்

பிறந்தகத்துக்கு போவேன் ,நீயேன் வரவே 

மாட்டேங்கிறே ?''

             ''நான் என்னம்மா  செய்றது ?அப்பா சமையலைவிட 

அவர் சமையல் அருமையா இருக்கே !''

மடியிலே கணவன் ,மனதிலே காதலனா ?

'ஒன் பை டூ 'டீ கூட 

எனக்கு பிடிக்காதாகையால் ...

என்னை ...என்னை மட்டுமே 

விரும்பும் பெண் தேவை !


26 comments:

 1. 01. இப்படிக் கேட்டா(ள்)ல் மறுநாள் இந்த ஏரியாவுக்கே வரமாட்டானே...
  02. இவண் புடிச்சுப்பார்த்தில்லையே அதனாலதான்.
  03. இரண்டு இடத்திலும் மதுரை ஆட்சியா ?
  04. இந்தக்காலத்திலயா ?

  ReplyDelete
  Replies
  1. 1.தெரியாத்தனமா வாசல் படியை மிதிச்சிட்டேன் ,மன்னிச்சுங்க தாயேன்னு ஓடி விட்டதா தகவல் :)
   2.ஒரு நல்ல நாளா பார்த்து புடிக்கப் பார்க்க சொல்லிடலாமா:)
   3.இல்லை ,நள பாக ஆட்சி :)
   4.ஒண்ணுமே தேறாதா :)

   Delete
 2. ஒன் பை ஒன் - சந்நியாசி தான்...

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட பொண்ணு அமைந்தால் வேறு வழியில்லை :)

   Delete
 3. நாலு நாள் பசிதாங்கக் கூடிய உணவு சிரிக்க வைத்தது.

  த ம 5

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒரு உணவு கிடைத்தால் வேண்டாம் என்பார் யாராவது உண்டா :)

   Delete
 4. பரவாயில்ல... ஒனக்கு நாலு நாளாச்சு... எனக்கோ ஆறு நாளாச்சு... வா ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்...!

  அந்தக் கரப்பான் பூச்சிக்கு மீச இல்லாம இருந்திருக்கும்... நல்லா பாருங்க...!

  பரவாயில்லை... நா அப்பவே சொன்னேன்... எனக்கும் சமையக்கார மாப்பிள்ளைதான் வேணுமுன்னு... எங்க அப்பாதான் வாங்கிக் கொடுக்கமாட்டேன்ட்டாரு.... நீ கொடுத்து வச்சவடி...!

  நீயும் ஒரு பெண்ணா இருந்திட்டு... இப்படி பேசப்படாது... பெண் புத்தி பின் புத்தின்னு சொல்லுவாங்க.... அப்புயம் குத்திக் காண்பிக்கக் கூடாது...!

  த.ம. 6.

  ReplyDelete
  Replies
  1. இப்போ வேண்டாம் ரெண்டு நாள் கழிச்சு வர்றேன் :)

   கரப்பானுக்கு அழகு மீசைதானா:)

   கொடுத்து வச்சவ பெயர் என்ன ,தமயந்தியா :)

   குத்திக் காண்பிக்கக் கூடாது...!போதும்,இந்த பயம் இருந்தால் :)

   Delete
 5. Replies
  1. ஓன் பை டூ ,நல்லாவா இருக்கும் :)

   Delete
 6. 1. அந்த ரகசியம் இன்னும் தெரியாதா!..
  2. அப்படி..ன்னா இவங்க யாரு!?..
  3. மாமனாரும் மருமகனும் ரொம்பவே கொடுத்து வெச்சவங்க!..
  4. ஒன் பை டூ.. எங்கேயோ கேட்ட மாதிரியில்ல இருக்கு!..

  ReplyDelete
  Replies
  1. 1.தெரியும் ,ரகசியம் வெளியே சொல்வதற்கில்லை :)
   2.அவருக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்தான் :)
   3.பெண்டாட்டிங்களை கெடுத்து வச்சவங்கள்னு சொல்லப் படாதோ :)
   4.நம்ம நாயர் கடையில்தான் :)

   Delete
 7. Replies
  1. உண்டால் ,நாலு நாள் பசியெடுக்காத உணவு எதுவென்று உங்களுக்குத் தெரியுமா :)

   Delete
 8. என்னை என்னை மட்டுமே விரும்பும் பெந்தேவை. ஆனால் எனக்கு லவ் ஆல் என்பதுதான் பிடிக்கும் கரப்பான் பூச்சிடைப்பார்த்து வருவது பயம் அல்ல அருவருப்பு. உங்களைப் பார்த்தும் அது வரவேண்டுமா.?

  ReplyDelete
  Replies
  1. லவ் ஆலை விளையாட்டில் வைத்துக் கொண்டால் பாதகமில்லை :)
   கரப்பான் பூச்சி மேலே ஊர்ந்தால் 'ஆ ஊ'ன்னு பேயைக் கண்டது போல் கத்தினால் பயம் இல்லையா:)

   Delete
 9. கரப்பான் பூச்சியும்
  கணவன் மீசையும்
  பெண்ணுக்குத் தொல்லையா?

  ReplyDelete
  Replies
  1. கரப்பானை துரத்தி விடலாம்,ஆனால் .......?:)

   Delete
 10. வணக்கம்
  அருமையாக உள்ளது படித்து இரசித்தேன் ஜி பகிர்வுக்கு நன்றி த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ரசனைக்கும் ,கருத்துக்கும் நன்றி :)

   Delete
 11. மடியிலே கணவன் ,மனதிலே காதலனா ?----வஞ்சகம் இல்லதாவுக....ன்னு காட்டிக்கிறாங்க....

  ReplyDelete
  Replies
  1. காட்டிக்கிறாங்க சரி ,ஒரு நாள் மாட்டிக்காமலா போயிடுவாங்க :)

   Delete
 12. //கரப்பான் பூச்சியிடம் உள்ள பயம் கூட கணவனிடம் ...?
  ''உங்க மீசையைப் பார்த்தா எனக்கு கரப்பான்பூச்சி ஞாபகம்தான்
  வருது !''
  ''உங்களுக்கு வருது சரி ,கரப்பான் பூச்சிக்குப் பயப்படுற என்
  மனைவிக்கு வர்ற மாதிரி தெரியலையே ?'//

  ஒரு வேளை அவங்க Hit லர் ஆக இருப்பாங்களோ :)

  தமிழ் மணக் கணக்கில் பிரச்சினை உள்ளது பகவானே!

  வாக்களிக்க முடியவில்லை :(

  ReplyDelete
  Replies
  1. HITலர் கரப்பான்பூச்சியை ஹிட் பண்ண தயங்குகிறது ,ஆனால் ,கணவனை ஹிட் பண்ண யோசிப்பதில்லை :)

   இதென்ன மதுரை (ஜோக்காளி)க்கு வந்த சோதனை ?திடீர் திடீரென்று வோட்டுப் பெட்டி பூட்டிக் கொள்கிறது ,இன்றும் வாக்களிக்க முடியவில்லை என்று புலவர் ராமா நுஜம் அய்யா கூட சொல்லி இருக்கிறார் .தமிழ்மண நிர்வாகத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்கிறேன் .
   தகவலுக்கும் ,கருத்துக்கும் நன்றி :)

   Delete
 13. ஹஹஹஹ் எல்லாமே அதுவும் பிறந்தகம் வராத பெண் காரணம் செம...எல்லா வீட்டுலயும் இப்படித்தான் போல...

  ReplyDelete
  Replies
  1. தலை முறை மாற மாற சுவையும் கூடும் போலிருக்கு :)

   Delete