20 May 2015

கணவன் ,மாத்திரை மூலமா மனைவிக்கு சொல்லவருவது :)

-------------------------------------------------------------------------------------------
  சேர்த்து வைச்சு என்ன புண்ணியம் :)           
                 ''செத்தும் கொடுத்த சீதக்காதி மாதிரிதான் உங்க அப்பாவுமா ,எப்படி ?''
                          ''அவரோட உயில் அமுலுக்கு வர ,விஷ மருந்து குடிச்சு உதவி இருக்காரே !''

கணவன் மாத்திரை மூலமா மனைவிக்கு சொல்லவருவது .....!

          ''நான் மாத்திரையைச் சாப்பிடலாமான்னு  என்கிட்டே ஏன் 
கேட்கிறீங்க ?''
        ''அரை மணி நேரத்திலே டிபன் ரெடி ஆயிடுமான்னு கேட்டா 
கோவிச்சுக்கிறீயே!''

 மனுஷன் சாப்பிடலாமா நாய் பிஸ்கட்டை ?

     ''உங்க நாயே  ,பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்களை  ஏன் கடிச்சது ?''
           ''அதோட பிஸ்கட்டை நான் டேஸ்ட் பண்ணிப் பார்த்தது ...அதுக்கு பிடிக்கலைப் போலிருக்கே !''புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை !

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை !

 1. ஓஹோ நாசூக்காக இப்படியும்
  சொல்லலாமா ?
  அனைவருக்கும் பயன்படும் சூட்சுமம்
  1. சூட்சுமத்தின் மறைவாய் இருக்கும் சுயநலத்தை தெரிந்து கொண்டு மனைவி சண்டை பிடித்தால் ஜோக்காளி பொறுப்பல்ல !

   1. டிபிஆர்.ஜோசப்Tue May 20, 10:18:00 a.m.
    நானும் ஷுகர் மாத்திரையை சாப்பிடுவதற்கு முன்பு மனைவியிடம் கேட்டுவிட்டுத்தான் சாப்பிடுவேன். நல்ல மூடில் இருந்தால் சரி என்பார். இல்லையென்றால் இப்ப என்ன அவசரம் என்பார் :(
    1. சில நேரங்களில் மாத்திரையை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் ,வயிற்றுக்குள் தள்ள எதுவும் கிடைக்கவில்லை என்றால் படும் அவதி இருக்கே ...அது தனி கதை !
    2. இந்த ஜோக்கை, சீரிஸான ஒரு விசயமாக்கிவிட்டார் ( :( ) , திரு ஜோஸப்!

     அவர், :( க்கு பதிலா :) போட்டு இருக்கலாம்! :-)
    3. சீரியஸ் ஜோக் ஆவதும்,ஜோக் சீரியஸ் ஆவதும் சகஜம்தானே ?

32 comments:

 1. மனைவியிடம் இப்படியும் கேட்கலாம்...ம்..
  நாய்க்கு கோபம் வராம என்ன செய்யும்...
  புத்தராலும் திருந்தவில்லை....நல்லா சொன்னீங்க....
  ரசனை...
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தின்னு தொலைங்க :)
   நன்றி கெட்ட நாயோ :)
   அவர்கள் வருந்தவில்லை ,மனம் திருந்தவில்லை :)

   Delete
 2. Replies
  1. முதலில் வந்து மணம் பரப்பியதற்கு நன்றி :)

   Delete
 3. நான் ஸ்டாப் நகைச்சுவை கலாட்டா... தொடரட்டும்
  தம +

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஸ்டாப்புன்னு சொல்லும்வரை தொடர்கிறேன் :)

   Delete
 4. 1. உயில்ல பார்க்கச் சொல்லுங்க, அவர் கடனை எல்லாம் யார் அடைக்கணும்னு எழுதி வச்சிருக்கப் போறார்!

  2. என்னா டெக்னிக்கு!

  3. பாவம் நாய்! அதையும் ஏமாத்த ஆரம்பிச்சுட்டான் மனுஷன்!

  4. பொன் ஆசையை விட்டுட்டாங்களாக்கும்?

  ReplyDelete
  Replies
  1. 1.செத்தும் கொடுப்பாரா அப்படி பேதி :)
   2.ஒரு சாண் வயிறுக்கு எல்லா டெக்னிக்கும் வரத்தானே செய்யும் :)
   3.ருசி கண்ட மனுசனோ :)
   4.அதனால் நமக்கொன்றும் நட்டமில்லையே :)

   Delete
 5. மாத்திரை போல பலவற்றை மறை"முகமாக " செய்யணும் ஜி...!

  ReplyDelete
  Replies
  1. மாத்திரையும் செய்யுமா மாயாஜாலம்:)

   Delete
 6. சமயோஜிதமா கேட்க வேண்டியிருக்கே! :) நல்ல டெக்னிக்!

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இதை விட நல்ல டெக்னிக் பதில் கிடைக்கும் ,அரை மணி நேரம் கழிச்சு எனக்கும் சேர்த்து டிபன் வாங்கி வந்துடுங்க என்று :)

   Delete
 7. நாய் பிஸ்கட் ஜோக்கும், மாத்திரை ஜோக்கும் அருமை!

  த ம 7

  ReplyDelete
  Replies
  1. நாய் பிஸ்கட்டை தொடர்ந்தால் மாத்திரையும் தொடர்ந்து சாப்பிட வேண்டி வருமோ :)

   Delete
 8. விஷ ஜந்துக்கள்ன்னு சொல்லறது இதத்தானோ...?

  அரை மணி நேரத்திலே டிபன் ரெடி ஆவுறதும் ஆகாததும் ஒங்க கையிலதான் இருக்கு...என்கிட்டே ஏன்
  கேட்கிறீங்க ?... எங்க கிளப்புல... பார்ட்டிக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்... எனக்கு ஒன்னும் டிபன் வேண்டாம்...பை...பை... வரட்டா... டா டா...

  மனுசன மாதிரி நாய் பொறுமையா இருக்காதுன்னு இப்பவாவது தெரிஞ்சுக்குங்க...!

  ‘மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை... மனிதன் மீது மண்ணுக்காசை’

  த.ம. 8.

  ReplyDelete
  Replies
  1. கிழம் எப்போ சாகும்னு காத்து இருந்ததாலா :)

   அடியே சீதே கிழவி ,இன்னுமா உனக்கு கிளப்பு கேக்குது :)

   மனுசனும் ரொம்ப பொறுமைதான் :)

   முதலில் ஜெயிப்பவன் மனிதன் தானே,அதுதானே முக்கியம் :)

   Delete
 9. அனைத்தும் ரசனை பகவானே!

  ReplyDelete
  Replies
  1. ரசனைக்கு ஒரு சாம்பிள் தரக்கூடாதா :)

   Delete
 10. கணவன் மாத்திரை மூலமா மனைவிக்கு சொல்லவருவது,
  எங்கோ சூடுவது போல் உள்ளது. அருமை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மல்லிகையை தலையில் சூடுவதா ,அல்லது சுடுவதா :)

   Delete
 11. கண்டேன்! இரசித்தேன்! விண்டேன்!

  ReplyDelete
  Replies
  1. நானும்தான் மறுமொழிகளை விண்டேன் ,ஆனால் தமிழ் மணத்தில் வர மாட்டேங்குதே,என்ன கோளாறோ :)

   Delete
 12. சொத்துக்காக விஷ மருந்து கொடுத்து சாகடித்திருக்கலாம் என்னும் சந்தேக வந்து விடப் போகிறது மனைவிக்கு அடங்கின கணவன் என்று காமித்துக் கொள்ளவாய் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. சந்தோசமாய் சாவதாக எழுதி வைத்திருக்கிறாரே :)
   காண்பித்துக் கொண்டாலும் மனைவி நம்பணுமே :)

   Delete
 13. 01. அப்படீனாக்கா ? நாட்டுல நிறைய சீதக்காதிகள் வந்துருவாங்களே....
  02. மனைவி ட்யூப் லைட்டோ ?
  03. நாய் இவணை டேஸ்ட் பார்த்து விடாமல் இருந்தால் சரிதான்.
  04. அருமையான சவுக்கடி ஜி எனக்குகூட வலிக்குது.

  ReplyDelete
  Replies
  1. 1.செத்தும் கெடுப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் :)
   2.இன்னும்அதிகம் தாமதமாகும் சோடியம் லைட் :)
   3.இப்போதானே டிரையல் பார்த்திருக்கு :)
   4.மறுபடியும் ,அறிவுக் கண் திறந்து விட்டதா :)

   Delete
 14. வணக்கம்
  ஜி
  சில மாத்திரைகளின் குணம் இப்படித்தான்... த.ம12

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அந்த குணம் தான் நம்மைக் குணப் படுத்துதோ :)

   Delete
 15. கோபம் இருக்கிற இடத்துலதான்... அடியும் உதையும் கிடைக்கும் என்பது அந்த கனவருக்கு தெரியல போலிருக்கு

  ReplyDelete
  Replies
  1. தெரிஞ்சனாலே தானே இப்படி ஜாடைமாடையா கேட்கிறார் :)

   Delete
 16. புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை!
  என்ற சிறந்த பதிவு - எனது
  கீழ்வரும் பதிவை ஆக்க உதவியது!
  தீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்
  http://eluththugal.blogspot.com/2015/05/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவை படித்தேன் ,ரசித்தேன் :)

   Delete