22 May 2015

உண்மைக் காதலன் கூட செய்யாத (சூரசம்ஹார) லீலைகள் :)

மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிச்சுக்கும் ?

           ''காக்காகிட்டே  இருந்து கத்துக்கணும்னு  சொல்வீங்களே ,இப்ப அதுங்களும் தனித்தனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
        ''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''

மல்லிகைப் பூ கண்ணில் விழலாமா ?

        ''அவர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
         ''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா ,
பிச்சிப் பூவான்னு கேக்கிறாரே !''
வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை ?                          

           ''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
        ''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
        ''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
       ''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

உண்மைக் காதலன் கூட செய்யாத (சூரசம்ஹார )லீலைகள் !
       'நான் எல்லாத்தையும் யமுனாவுக்காக மட்டும்தான் செஞ்சேன் ,ஆனா அவளே என்னைப் புரிஞ்சுக்கலேன்னு வேதனையா இருக்கு ...நிச்சயம் ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவா '
'வர்மக்கலை கற்று  தந்த என் குருவுக்கு துரோகம் செய்ஞ்சுட்டோமேன்னு வேதனையா இருக்கு ...
இப்படி இவ்வளோ பீல் பண்றது ...
திருச்சி  சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ...
நம்ம அஞ்சு கொலை ஆறுமுகம் அல்ல ...
டாங் லீ கண்ணன் என்றழைக்கபடும் சாமியார் (?)தான் !
யமுனாவுக்காக இந்தக் கள்ளக் காதலர் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல ...
யமுனாவின் கணவரை ...
கணவரின் நண்பரை ...
நண்பரின் கார் டிரைவரை ...
தான் கற்ற வர்மக் கலையை பயன் படுத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார் ...
 அப்பாவி பெண் யமுனாவின் வாழ்க்கையில் விளையாடிய பாவிகளைத்தான் கொன்றது கொலை அல்லவாம் ...சூரசம்ஹாரமாம் ...
இந்த கள்ளப் புருஷனின் சூரசம்ஹாரம் இத்தோடு முடியவில்லை ...
யமுனாவின் மகனை ,மகளைக் கொன்றதில் முடிந்துள்ளது ...
கராத்தே பயின்றதால் இவனுக்கு 'டாங் லீ 'கண்ணன் என்று பட்டப் பெயராம் ...
வாய் திறந்தால் பொய்யாகவே கொட்டுவதால் ...
டங் லை (Tongue lie ) கண்ணன் என்றே சொல்லலாம் !

 1. Chokkan SubramanianThu May 22, 04:56:00 a.m.
  ஜோக் - 2: அப்ப வீட்டுக்கே போயி நியாபகப்படுத்தினா எவ்வளவு பீஸாம்???


  1. ஊட்டி விட்டா எவ்வளவோ அதில் பாதி தானாம் !

   1. ஒருவேளை பூவின் சைசை புரிந்து கொள்ள ஜாடையாகக் கேட்கிறாரோ?
    நல்ல வேளை ,எத்தனை முழமென்று கேட்காமல் போனாரே!


22 comments:

 1. 01. ஐந்தறிவு ஆறறிவுக்கிட்டே படிச்சுக்கிருச்சோ... ?
  02. இதுக்கு முன்னாலே பூ வியாபாரியோ.... ?
  03. விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு வீழ்ச்சி 80 உண்மைதானோ ?
  4. அடடே காதல் காவியம் இம்பூட்டா.... ?

  ReplyDelete
  Replies
  1. 1.அனேகமா அதுக்கு ஏழாம் அறிவும் வரலாம் :)
   2,அதான் ,வெறும் கையிலே முழம் போடுறாரோ :)
   3.வீழ்ச்சியா ,கிளினிக் வருமானம் கூடுதே :)
   4.இது காவியம் இல்லை ,உண்மை நிகழ்வு ஜி :)

   Delete
 2. நல்ல மருத்துவர்.
  நல்ல காதலன்
  அத்துனையும் அருமை ஜீ,,,,,,,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே போலி மருத்துவர் ,கள்ளப் புருஷன் கதையா இருக்கே :)

   Delete
 3. மூன்றை ரசித்து, நான்காவதுக்கு மறுபடி வேதனைப் பட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வேதனை தந்த அந்த கேஸ் என்ன ஆச்சுன்னே தெரியலே :)

   Delete
 4. ஐயோ...! காக்காவும் கெட்டுப் போச்சா...!

  ReplyDelete
  Replies
  1. கெட்டுப்போனதை எல்லாம் தின்றதால் கெட்டுப் போச்சா :)

   Delete
 5. கண்ணில் விழுந்தது மல்லிகையா பிச்சிப் பூவா ஜோக் குபீர் சிரிப்பை வரவழைத்தது.

  வருங்கலத்தில் டாக்டர்கள் இப்படியும் பீஸ் கேட்பார்கள் என்பதை முன்னரே கணித்து சொன்னது அருமை.

  த ம 5

  ReplyDelete
  Replies
  1. இப்போதே யு எஸ் சில் இந்த முறை இருப்பதாக சொல்கிறார்களே :)

   Delete
 6. நாம் காக்காவைப் பார்த்து கற்பதற்குப் பதில் அவை நம்மைப் பார்த்து... அனைத்தையும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. கா ல/க ம் கெட்டுப் போச்சோ :)

   Delete
 7. மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிச்சுக்கும் ?--பாட்டியின் வடையை பிடிச்சுக்கும்...

  ReplyDelete
  Replies
  1. பாட்டியை ஏமாற்றிய காக்கையை ஏமாற்ற நரியும் காத்திருக்கும் :)

   Delete
 8. கொஞ்ச நாளாக உங்கள் தளத்திற்கு வராமல் இருந்தேன். இன்று வந்தேன். உடனே மேனி சிலிர்க்கிறது நண்பரே! ..

  ReplyDelete
  Replies
  1. உங்களின் மேனி சிலிர்க்க காரணம் .,டங் லை (Tongue lie ) கண்ணனின் லீலைகள் தானா :)

   Delete
 9. வணக்கம்
  ஜி
  மக்கள் கூட்டம் அதிகமாகினால் பங்கு கிடைக்காது அதனால் இப்படியான ஓட்டம்
  மற்றவைகளை இரசித்தேன் ஜி.. த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கூட்டத்திலே கட்டு சோறை அவிழ்க்காதே என்ற பழமொழி காக்கைக்கும் தெரிந்து இருக்குமோ :)

   Delete
 10. Replies
  1. குணம் மாறாமல் இருந்தால் :)

   Delete

 11. வேளா வேளைக்கு மருந்து கொடுக்க
  SMS அனுப்பினால் முன்னூறு ரூபாயா?
  கால் பண்ணினால் ஐநூறு ரூபாயா?
  இப்படியும் உழைக்கிறாங்களே....

  ReplyDelete
  Replies
  1. உழைப்பு நல்லதுதானே :)

   Delete