3 May 2015

தின மலர் பத்திரிக்கையின் தொழில் தர்மம் இதுதானா ?

 அன்பார்ந்த வலையுலக உறவுகளே ,
                
           இன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது .

கடந்த 22.03.15அன்று ,நான் என் 'ஜோக்காளி 'தளத்தில் எழுதியுள்ள ...
          
                   ''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
        
            ''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் 

போறாங்களாம் !''
           
       இந்த ஜோக் .இன்றைய மதுரை தினமலர் சண்டே ஸ்பெசல் 

இணைப்பில் 'வலை வீசி 'பக்கத்தில் ,ராமு ,சோமு பேசிக்கொள்வதைப் 

போல் பிரசுரமாகியுள்ளது .ஆனால் ,எங்கேயும் என் பெயரோ ,என் 

தளத்தின் பெயரோ குறிப்பிடப் படவில்லை 
         
இதுவும் ,அந்த பத்திரிக்கையின் சு'தந்திரம்' தானா ?எழுத்தாளர்களின் 

படைப்பு மட்டும் வேண்டும் ,பெயர் தேவையில்லை என்பதுதான் 

தினமலரின் தொழில் தர்மமா ?
          
இதற்கு தின மலர் நிர்வாகத்தின் விளக்கம் என்ன ?
         


40 comments:

 1. Cool Ji.

  தினமலர் வட்டத்தில் கூட உங்களுக்கு திருட்டு ரசிகர்கள் உள்ளார்கள் ஜி...

  ReplyDelete
  Replies
  1. தின மலர் மட்டுமல்ல ,பல இணைய தளங்களிலும் என் பேரைக் குறிப்பிடாமல் எடுத்தாள்வதைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன் ,சமீபத்திய பதிவு ,எழுத்து .காமில் வந்துள்ளது கண்டு அதிர்ந்தேன் !

   Delete
 2. பகவான்ஜியின் ஜோக்கை திருடிய தினமலருக்கு கண்டணங்கள்.

  ReplyDelete
  Replies
  1. பழம் தின்று கொட்டைப் போட்ட தினமலர் ,நம் கண்டனத்திற்கு பதில் சொல்லுமா ?பொறுத்திருந்து பார்ப்போம் :)

   Delete
 3. விடுங்கஜி.... ஒரிஜினாலிட்டி இல்லாதவர்கள்.... நேர்மையும், பெருந்தன்மையும் இல்லாதவர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தினமலர் ,நேர்மையான நடுநிலை நாளேடு என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்வதில் உண்மை இல்லையா :)

   Delete
 4. நன்றி! திரு பகவான் ஜி
  தங்களது சிரிப்பு சிந்தனை
  சிறகடித்து பறந்து வந்து
  பார்வையாளர்களை மேலும்
  சென்றடைந்து விட்டதே!
  படைப்பாளருக்கு பெருமைதான் நண்பரே!
  அது வேறு ஒருவர் பெயரில் வெளி வராத வரையில்!
  தினமலரின் பார்வைக்கு கொண்டு செல்கிறேன்!
  நன்றி!
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. நேர்மையான நாளேடு என்று சொல்லிக் கொள்ளும் தின மலர் இப்படி செய்கிறதே என்ற வருத்தம்தான் எனக்கு !

   .இன்று எனக்கு ஏற்பட்டது நாளை நம் வலையுலக எழுத்தாளர்கள் யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதால் இந்த பதிவு .நானும் தினமலர் நிர்வாகத்தின் பார்வைக்கு இதனை அனுப்பியுள்ளேன் ,இதுவரை எந்த பதிலும் வரவில்லை .

   Delete
 5. த ம 3
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாக்கு எனக்கு திகட்டுகிறது ....தினமலரின் பார்வைக்கு கொண்டு செல்கிறேன்என்று நீங்கள் கூறியிருப்பதே எனக்கு டானிக் (?) குடிச்ச தெம்பைத் தருதே :)

   Delete
 6. தங்களுடைய பெயரை மறைத்து வெளியிட்டது தவறுதான்!..

  ReplyDelete
  Replies
  1. தவறை உணருமா ,தினமலர் ?பொறுத்திருந்து பார்ப்போம் :)

   Delete
 7. அட இப்படியெல்லாம் கூட செய்கிறதா தினமலர்? கவனத்தில் கொள்ள வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. உங்களாலும் நம்ப முடியவில்லைதானே :)

   Delete
 8. லோக்கல் எடிட்டர்களின் வேலையாக இருக்கும். பெயரை கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும். எதற்கும் கண்டனம் தெரிவித்து ஆசிரியருக்கு கடிதம் எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. லோகல் எடிட்டருக்கு மெயில் அனுப்பியுள்ளேன் ,பதில் சொல்வார்களா ,பார்ப்போம் :)

   Delete
 9. தெரிந்தது ஒன்று. தெரியாமல் எத்தனையோ? பத்திரிகை உலக நண்பர்கள் பலர் வலைப் பதிவாளர்களாக உள்ளனர். அவர்கள் இதுபற்றி சொல்லலாம். சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்கள் சொன்னதைப் போல “கண்டனம் தெரிவித்து ஆசிரியருக்கு கடிதம் எழுதுங்கள்” .
  த.ம.7

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவையே அவர்களுக்கு மெயில் செய்து விட்டேன் :)

   Delete
 10. ஒரு வேளை
  இதுதான்
  பத்திரிக்கை
  சூது ச்சீச்சீ சு'தந்திரம்' னு புரிஞ்சுக்கிட்டாங்க போல
  எப்படியோ உங்க பக்கத்திலிருந்து திருடி
  முதல் முதலா
  உங்களை சிரிப்பு இல்லாமல்
  சீரியசாக பதிவிட செஞ்ச அவங்க பெரிய ஆளுங்கதான்.

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,என்னோட சீரியஸ் கதையை நீங்க படிக்கவில்லை போலிருக்கே :)

   Delete
 11. 7.7.14 to 26.01.15 வரை 'தம 'முதல்வனாய் இருந்தவன் ,இப்போ :)
  அடடே இதை இத்தனை நாள் கவனிக்காமல் எப்படி விட்டேன்
  போகட்டும்
  வரும் 7.7.2015 க்குள் நீங்க
  மீண்டும்
  தம முதல்வராய் வர வாழ்த்துகிறேன்.
  (பின்குறிப்பு வழிபாடு, வேண்டுதல், நேர்த்திக்கடன் போன்ற செலவுகள் நிறைய இருப்பதால் ஒரு நல்ல அமவுண்டை தந்து அனுப்பவும்.)
  இப்பதான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்
  அந்த 7.7. இருக்கே அன்னைக்குத்தான் என் வீட்டில் மூத்தவரோட பிறந்த நாள்.

  ReplyDelete
  Replies
  1. ஏழாவது மாதமாகுமா?வாராவாரம் தம முதலிடம் வந்து கொண்டிருப்பது ஜோக்காளிதான் ,உச்சாணிக் கொம்பைப் பிடிக்கும் நாள் தொலைவில் இல்லை :)
   எனக்காக தீச்சட்டி தூக்கி நீங்கள் ஏன் சுட்டுக்கணும்?
   பிறந்த நாளுக்கு அவசியம் வந்துடுறேன் :)

   Delete
 12. காய்ச்ச மாங்காய்தான் கல்லடி படும் ஜி எதற்க்கும் உள்ளூர்தானே நேரடியாகவே போய் ஆதாரத்துடன் விளக்கம் கேளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. விளக்கமா ,நல்லா தருவாங்களே ..மெயிலுக்கு பதிலைக் காணோம் :)

   Delete
 13. இதெல்லாம் இன்று சகஜம் நண்பரே
  கவலையை விடுங்கள்
  தங்களின் நகைச்சுவையைக் கண்டு பலர் சிரித்திருப்பார்கள், பலர் சிந்தித்திருப்பார்கள்
  அது போதும் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. என் தளத்தை அறிந்தவர்கள் நிச்சயம் சிந்தித்து இருப்பார்கள் :)இதென்ன கொடுமை என்று ::)

   Delete
 14. வணக்கம்
  ஜி
  செய்தது தவறு..... கவலைவேண்டாம்.. த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நான் ஏன் கவலைப் படணும்,திருட்டுத் தனம் செய்தவர்கள் அல்லவா கவலைப் படணும்:)

   Delete
 15. எழுத்துப் பொறுக்கிகள்
  எத்தனை நாள்களுக்கு
  பொறுக்கி எழுதும் வேலையை
  தொடரப் போகிறார்கள்?

  ReplyDelete
  Replies
  1. நம்மை யார் என்ன செய்து விட முடியும் என்பது பத்திரிக்கை சுதந்திரம் ஆகுமா :)

   Delete
 16. எனக்கும் இந்த அனுபவம் உண்டு நண்பரே,
  நான் பதிவிட்ட விவசாயம் சமந்தமான பதிவை படங்கள் முதற்கொண்டு அப்படியே வெளியிட்டிருந்தார்கள். அவர்களும் எனது நண்பர்கள் என்பதால் தகவல் தெரிவித்ததோடு நிறுத்திக்கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் எழுத்தை உங்களுக்கு தெரியாமல் காசாக்குபவர்கள் நண்பர்களா :)

   Delete
 17. இதெல்லாம் எழுத்த்லகில் சகஜம் என்பார்கள் பெற்றவளுக்குத் தானே பிரசவ வலி தெரியும்

  ReplyDelete
  Replies
  1. சகஜம் என்றாலும் தவறுதானே ,தினமலர் இதை செய்யலாமா :)

   Delete
 18. வன்மையாகக் கண்டிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா ,உங்கள் கண்டனம் தினமலருக்கு உறைக்குமானால் நல்லது ?

   Delete
 19. அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்றாற் போல் பத்திரிக்கைகளில் இது வெகு இயல்பாகிவிட்டது வருத்தத்திற்குரியது.

  ReplyDelete
  Replies
  1. ஜனநாயகத்தின் நான்காம் தூண் ,இப்படி நாலாந்தர தூண் ஆகலாமா :)

   Delete
 20. கூல்ஜி! கூல்! பகவான் ஜி என்பதால் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பார் இருக்கட்டும் என்று போட்டிருப்பார்கள்...சாமி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பேரில் இருப்பதைப் போல......ஜோக்ஸ் அபார்ட்...

  பத்திரிகை தர்மம் என்ற ஒன்று இருந்தால்தானே! ஜி?!! தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்கின்றனர். ஹூம் அவங்களுக்கு எங்க இந்த அசிங்கம் எல்லாம் துடைச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க ஜி...சுயமாகச் சிந்திக்கத் தெரியாத .......

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் ,ஒரு வார்த்தை பதிலாவது சொல்லணுமே ?ஊஹும் ,திருடன் எப்படி ஒப்புக்குவான் ?

   Delete