30 May 2015

ஸ்ரீ* தேவி ரசிகராய் இருப்பாரோ ?

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் :)

            ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவனை எதுக்கு 
செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
                ''அவனுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆவுது ?''

மனைவிகிட்டே என்ன கேட்டிருப்பார் ,இப்படி கோபம் வர ?

       '' மூக்குக்கு மேலே கோபம்  வரும்,உங்க மனைவிக்கு உச்சபட்ச 
கோபம் வருதா ,எப்படி ?''
        ''நெற்றி மஞ்சள் ஸ்டிக்கர்  பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர்  !''


ஸ்ரீ தேவி ரசிகராய் இருப்பாரோ ?

            '' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக்  

கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப்  போறீங்க ?''

''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் போறேன்  !''

பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMS நினைவுக்கு வருகிறாரோ ?

'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான 
 பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன 
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !

 1. காமக்கிழத்தன்Fri May 30, 07:36:00 a.m.
  அவர் மனைவிக்கு நெற்றிக்குள்ள ஒரு கண் இருக்கு, சிவபெருமான் மாதிரி!!!  1. கோபத்தைக் கிளறி விட்டால் எரித்து விடுவாரோ 

   1. KILLERGEE DevakottaiFri May 30, 02:55:00 p.m.
    அப்படீனாக்கா......சிவப்புகலர் பொட்டு வச்சா ?    1. அரக்கு கலர் ஆகலாம் ,மனைவி அரக்கியும் ஆகலாம் !அது உங்க யோகத்தைப் பொருத்தது !


        1.                      


14 comments:

 1. 3. ஒரு வேளை தீபா ரசிகராய்க் கூட இருப்பார்!

  1. நல்ல முதலாளி!

  2. ஐயோ.... கேட்கவே பயங்கரமா இருக்கே! (காதலிக்க நேரமில்லை பாலையா குரலில் படிக்கவும்)

  4. உண்மை, உண்மை, உண்மை!

  ReplyDelete
  Replies
  1. 3.ஒருவேளை மட்டுமில்லை ,எல்லா வேளையிலும் தான் :)

   1.அனுபவம் பேசுதோ :)

   2.எதுக்கும் அவரை ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுன்னு என்று பாலையா மாடுலேசனில் கேட்டால்கூட நன்றாயிருக்கும் :)

   4.பொன் மகள் வந்தால் ரீமிக்ஸ் பாடலில் கூட ,உச்ச ஸ்தாயியில் TMS பாடி உள்ளதை மட்டும் இணைத்துள்ளார்கள் ..இன்றைய பாடகருக்கு அந்த அளவுக்கு பாட வரவில்லை போலிருக்கே :)

   Delete
 2. Replies
  1. அந்த கோ 'கிள்ளு 'வை நீங்களும் மறந்து இருக்க மாட்டீர்களே :)

   Delete
 3. 'புண்ணியம்' செய்தவர்கள் - உண்மை...

  ReplyDelete
  Replies
  1. கொலைவெறிக்கு முன் ,கொலைவெறிக்கு பின் என்று தமிழிசைக் காலத்தைக் குறிப்பிடலாமா,ஜி :)

   Delete
 4. 01. அவன்பாடு அவனுத்தான் தெரியும்.
  02. ஸ்டிக்கர் பொட்டுல ஏதும் கெமிக்கல் சமாச்சாரம் இருக்குமோ ?
  03. முதல்ல இவண் பொட்டாட்டி பெயர் என்ன ?
  04. உண்மையே....

  ReplyDelete
  Replies
  1. 1.அதானே ,மோகம் முப்பது நாள் ,ஆசை அறுபது நாள் முடிப்பதற்கே கஷ்டப் பட்டிருப்பானோ :) (மீன் பிடி தடை காலம் இன்றோடு முடிந்தது என்று செய்தி !)
   2..இருந்தாலும் கோபம் வரும் போது கலர் மாறுமா :)
   3.ஏன் கோகிலான்னு இருக்கக் கூடாதா :)
   4.நானும் நீங்களும் 'புண்ணியவான்கள் ',அப்படித்தானே :)

   Delete
 5. ஸ்ரீ தேவி ரசிகராய் இருப்பார் பகவான்ஜி மாதிரி ;)

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீதேவிக்கு மட்டுமா :)

   Delete
 6. கண்டிப்பா பழசை மறக்காத ரசிகர்தான்.............

  ReplyDelete
  Replies
  1. அவனவன் கொந்தளிச்சுப் போய் போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கான் ,இவருக்கு இன்னும் கோகிலா வேணும்னு கேட்கிறது நியாயமா ,தோழரே :)

   Delete
 7. அனைத்தும் நன்று! மீண்டும் கோகிலா அசத்தல்!

  ReplyDelete
  Replies
  1. கோகிலா என்று இப்போ யாரும் பேர் வைக்கிறதா தெரியலே :)

   Delete