26 May 2015

கண்ணுக்கு மட்டும் அழகாய் இருந்தால் போதுமா :)

 -----------------------------------------------------------------------------------
 சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்காதுதான் :)
                ''கூலாய் இருக்கிறதை கைப்பிடி கிளாஸிலும்,சூடாய் இருப்பதை  சாதா கிளாஸிலும் குடிப்பது எனக்கு பிடிக்கலே ,உனக்கு  ?''
                  ''உடம்பை முழுக்க மூடுற சுடிதாரை  வெளிநாட்டு உடை ,இடுப்பை மறைக்காத சேலையே நமது பாரம்பரிய உடை என்று சொல்றது எனக்கு பிடிக்கலே !''

கண்ணுக்கு மட்டும் அழகாய் இருந்தால் போதுமா :)         
           ''என்னங்க ,TVல் 'செய்து பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டிய சமையலை 
பண்ணியிருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
            ''விளங்கலே ,இனிமே 'செய்து சாப்பிடுவோம் 'னு நிகழ்ச்சி வந்தா 
பாரு !''

டெலிவரியில் மட்டும் பிரச்சினை வரவேகூடாது !

             ''மகளிர் பேங்க் ,மகளிர் காவல் நிலையம் 

மாதிரி அனைத்து மகளிர் போஸ்ட் ஆபீஸ் திறந்தா 

என்னாகும் ?''
          
        ''எல்லோரும் டெலிவரி லீவிலே போயிட்டா 

,தபால் டெலிவரி ஆகாதே !''

உதடுகள் செய்யும் நல்ல காரியம் ?


ஜோக்காளிப் பய பாடினான் ...
'ஆரிய உதடுகள் உன்னது '
சேட்டுப் பொண்ணுவின்  எதிர்ப்பாட்டு ...
'திராவிட உதடுகள் உன்னதா ?'
'இல்லை ..நல்ல காரிய உதடுகள் என்னது !'


 1. Chokkan SubramanianMon May 26, 08:19:00 a.m.
  அப்ப சீக்கிரம் நீங்க தொலைக்காட்சியில தலையை காட்டப்போறீங்கன்னு சொல்லுங்க..
  (செய்து சாப்பிடுவோம் நிகழ்ச்சியைத்தான் சொல்றேன்)
  1. தலைப்பை பார்த்தீங்களா பன்மையில் உள்ளது ,அதனாலே உதவிக்கு நீங்களும் வரீங்க ,சரியா ?

 2. துரை செல்வராஜூMon May 26, 08:53:00 a.m.
  ஆரிய உதடு - ஆறிய உதடு ஆகாம பாத்துக்கங்க..!?..
  இருந்தாலும் சூரிய உதடுகளாக மாறி சுட்டுடும்..!?
  1. இது இன்னொரு ஆர்ய பவன் ,எப்பவும் சுடச் சுட கிடைக்கும் ருசிப்போரைக் 'கண்டவுடன் சுட' உத்தரவு பறக்கும் !

24 comments:

 1. 'செய்து சாப்பிடுவோம்' நல்ல ஜோக்! வயிறு வலிக்க சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆயிரம் முறைப் பார்ப்பதை விட அரைக்கவளம் தின்றால் அல்லவா பசி அடங்கும் :)

   Delete
 2. வணக்கம்
  திருந்த ஒரு வாய்பு கொடுங்கள் ஜி....
  மிக விரைவில் தங்களின் நகைச்சுவை தாங்கிய கலாட்டா தொலைக்காட்சியில் வரப்போகிறது... ஆகா... ஆகா... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. 1. என்ன ஒரு ஒப்புமை!

   2. ஹா..ஹா..ஹா...

   3. ஹா...ஹா...ஹா...

   4. ம்ம்ம்....

   Delete
  2. ரூபன் ஜி >>
   அவர்களாய் திருந்தா விட்டால் வாய்ப்பே இல்லை :)

   ஜோக்காளி நகைச்சுவைக் கலாட்டா ,என் பெயரில் இல்லாமல் வந்துக் கொண்டுதானே இருக்கிறது :)

   Delete
  3. ஸ்ரீராம் ஜி >>
   பெண்ணை எவ்வளவு கவர்ச்சியாய் காட்ட முடியுமோ அவ்வளவு காட்டுகிறது சேலை ,ஜாக்கெட் ..இதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்தானே :)

   Delete
 3. Replies
  1. காரிய உதடு கொஞ்சம் உதைக்கிறது ,அப்படித்தானே :)

   Delete
 4. பார்க்கும்படி தான் செய்வார்களோ...? ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ,ருசித்தபின் ,ரெடிமேட் டயலாக்கை சொல்வார்கள் ...சூபரா இருக்கு :)

   Delete
 5. செய்து சாப்பிடுவோம்.....ஹாஹாஹா....
  தம +1

  ReplyDelete
  Replies
  1. உங்க சமையல் குறிப்புகள் அப்படி இருக்காதுன்னு நம்புறேன் :)

   Delete
 6. த ம 7

  தமிழ் மனங்களைச் சிரிக்க வைக்கும் தமிழ் மனதிற்குத் தமிழ் மணத்தில் நுழைய.!

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேலை ,வாக்கு ஏழு ,அரையை சேர்க்காமல் விட்டீர்கள் :)
   (உங்கள் தளத்தில் நான் வாங்கிய 'அறை' வலியைத் தாங்க முடியலே )

   Delete
 7. உண்மையாலுமே செய்து பார்ப்போம் சமயலுக்கும், சாப்பிட்டுப் பார்ப்போம் சமையலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டுதான்.

  அது சரி ஏதேனும் 'ஜோக்காடமி' (ஜோக் அகாடமி..) ஆரம்பிக்கிற உத்தேசம் இருக்கா.. சும்மா பின்றீங்களே..!

  God Bless YOu

  ReplyDelete
  Replies
  1. அம்மா சமையலையும் ,ஆத்துக்காரி சமையலையும் ஒப்பிட முடியுமா :)

   நல்லா இருக்கு ஜோக்காடமி,வாசக்டமி ஆகாமல் போனால் சரி :)

   Delete
 8. அனைத்தும் அருமையாக உள்ளது. டெலிவரி க்கு இப்ப ஒரு லீவா? நன்றி.

  ReplyDelete
  Replies
  1. டெலிவரிக்கு முன் ,உள்ளே உள்ளதைப் பார்ப்பது சட்டப் படி தவறு இரண்டுக்கும் பொருத்தம்தானே :)

   Delete
 9. 01. எதுக்கோ எதுவோ சாக்குனு சொல்றது போல இருக்கே...
  02. சரிதானே...
  03. எல்லாச்சேனலும் ஒரே மா3 புடிக்காதே....
  04. கரிய உதடு ஆனாலும், காரியக்கார உதடுதான்.

  ReplyDelete
  Replies
  1. 1.சுடிதார் சாக்கு மாதிரி தெரிந்தாலும் பாதுகாப்பான உடைதானே :)
   2.டெலிவரி ,இரு உயிர் சம்பந்தப் பட்டதாச்சே :)
   3.அடுப்புதான் வேற வேற ,சமையல் ஒண்ணுதான் :)
   4.காரீயம் (lead) ஒரு மின் கடத்தி தனிமம் என்பது ஏனோ ஞாபகம் வருது :)

   Delete
 10. Replies
  1. எதை முரண்பாடுகளையா:)

   Delete
 11. சுடிதார் வெளி நாட்டு உடையா.? நமது பாரம்பரிய உடைகளைப் பழைய சிற்பங்களில் காணலாம் காரிய உதடுகள் ஆரிய உதடுகளில் காரியம் செய்யாதா.

  ReplyDelete
  Replies
  1. உலகத்திலேயே கவர்ச்சியான உடை சேலைன்னுதான் எனக்கு படுது:)
   சிலைகளில் ஜாக்கெட்கூட இருக்காதே ,அது இன்னும் மோசம் ,இதையா பாரம்பரிய உடை என்று
   கொண்டாடுவது ?காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற வேண்டாமா ?
   காரியம் செய்வதில் ஆரியமாவது .திராவிடமாவது :)

   Delete