5 May 2015

மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா:)

 --------------------------------------------------------------

கருவறையிலுமா இரட்டை அர்த்தம் :)

               ''பூசாரியை காதலிப்பதால் எனக்கொரு வசதி,கருவறையில்கூட நுழைய முடியுது !''

               ''என்னால் அந்த பூசாரியை நம்ப முடியலே ,'கருவறை 'விசயத்தில் ஜாக்கிரதையாய் இருந்துக்கோடி !''

மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா ?

            ''உங்க பெர்சனல் உதவியாளரா என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி பாஸ் ...
என் பெயரை ஏன்  சாந்தின்னு மாற்றிக்கச் சொல்றீங்க ?''
         ''அது என் மனைவி பெயர் ,நான் தூக்கத்திலே உளறினாலும் அவளுக்கு சந்தேகம் வரக் கூடாதுன்னுதான் !''
லட்சங்கள் போனாலும் லட்சியம் ஸ்டாராய் மின்னுவதே !

            ''இவ்வளவு கேஸ்கள்,பவர் ஸ்டார் என்ன ஆவாரோ ?''


          ''கஞ்சிக்கு வழி  இல்லைன்னாலும் 'புவர்ஸ்டார் 'ன்னு 

 போட்டுக்க மாட்டார் !''

ரெகுலராய் சந்தித்தால் PICKUP தானா ?

 PICKUP என்பது அவசியம் 
பஸ்களுக்கு இருக்கவேண்டியது ,ஆனால் ..
அடிக்கடி முன் இருக்கையில் பயணிக்கும் பெண்ணுக்கும் டிரைவருக்கும் உண்டாகி விடுகிறதே !

 பால கணேஷ்Mon May 05, 06:50:00 a.m.
செக்ரட்டரிக்கும் பேர் மாற்றும் புத்திசாலி சிரிக்க வைத்தார்.


  1. Bagawanjee KAMon May 05, 03:49:00 p.m.
   பேர் மாத்திக்கச் சொல்பவரிடம் எப்படி வேலைப் பார்க்கிறதுன்னு அந்த பொண்ணு யோசிப்பதாக கேள்வி !
  2. திண்டுக்கல் தனபாலன்Mon May 05, 08:11:00 a.m.
   உளறுவது நிஜமாகாமல் இருந்தால் சரி... 

    1. நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கும் ?இப்படி முன் கூட்டி யோசிப்பவரிடம் நிஜமாகாமல் போகாதே !

22 comments:

 1. எந்தக் கருவறையில் என்ன செயல்?
  மனைவி பெயரில் உதவியாளரா?
  பவர் ஸ்டார் புவர் ஸ்டார் ஆகமாட்டாரா?
  முன் இருக்கையில் பயணிக்கும் பெண்ணுக்கும் டிரைவருக்கும் என்னதான் உண்டாகி விடுகிறது?
  என்றவாறு சிந்திக்க வைப்பதால்
  நம்மாளுகளுக்கு
  மூளை கொஞ்சம் வேலை செய்யுமே!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சமா ,நிறையவே வேலை செய்யும் :)

   Delete
 2. 1. சிலேடை! ஹா..ஹா..ஹா..

  2) புத்திசாலியான பாஸ்!

  3) அவர் எவர்ஸ்டார்! எவர்னு கேட்டுட மாட்டீங்களே!

  4) ம்......

  அதென்ன முதலிரண்டு கமெண்ட்ஸ் மட்டும் பதிவிலேயே போட்டு விடுவீர்களா!

  ReplyDelete
  Replies
  1. 1.இதுக்கு'அந்த கருவறை பூஜாரிக்கு'தான் நன்றி சொல்லணும் :)

   2.இந்த புத்திசாலித்தனம் எங்கே பொய் விடுமோ :)

   3.டவர் ஸ்டார்ன்னு சொல்லிக்கட்டும் :)

   4.நடக்கட்டும் நடக்கட்டும்ம்ம்ம் :)

   Delete
 3. நகைச்சுவையில் கருவறையின் ஒப்புமை வித்தியாசமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு கருவறையிலும் இருட்டுதானோ :)

   Delete
 4. Replies
  1. அந்த நல்ல வழியில் அவரே போகட்டும் :)

   Delete
 5. கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையப்பார்க்கிறாய்...! கருவறையிலிருந்து கல்லரைக்கு அனுப்பிவிடப்போகிறார்...?

  ‘அமைதிக்கு பெயர்தான் சாந்தி,
  அந்த அலையினில் ஏதடி சாந்தி
  உன் பிரிவினில் ஏதடி சாந்தி
  உன் உறவினில் தானடி சாந்தி’
  “சரி...பேர மாத்திக்கிறேன்.... எப்ப எ பேருக்கு இந்த கம்பனிய எழுதுவக்கப் போறீங்க பாஸ்...?!

  Twinkle, twinkle, little star,
  How I wonder what you are!
  Up above the world so high,
  Like a diamond in the sky.
  -பாடிப்பாடிப் பிழைச்சுக்க மாட்டார்.

  பஸ் சீக்கிரமா பாஸ் பண்ணி போய் சேரனுமுல்ல... !

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. காரியம் முடிந்ததும் தானே :)

   ஐயோ,இன்னும் ஆனா போடலே .அதுக்குள்ளேயா :)

   லிட்டில் ஸ்டார் எப்பவுமா :)

   இப்படித்தான் பாஸ் பண்ணி போகுதா :)

   Delete
 6. மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா ??...இவர்தான் உத்தம கனவராக தெரிகிறார்...

  ReplyDelete
  Replies
  1. உத்தம வில்லனாச்சே அவர் :)

   Delete
 7. கருவறை மாறி போனது இப்ப தான் தெரியுமா?
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. கருவறையைக் கூட படுக்கை அறையாக்கிய பூசாரியைச் சொல்கிறீர்களா :)

   Delete
 8. Replies
  1. ஏற்கனவே செமத்தியாய் வாங்கி இருப்பாரோ :)

   Delete
 9. அனைத்தும் ரசனை ஜி!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பகவானே என்று ஆரம்பிப்பதை விட ஜி என்று முடிப்பதே எனக்கும் ரசனை :)

   Delete
 10. சாந்தி ஹஹஹஹ் பாஸ் செம கில்லாடி போல...

  ReplyDelete
  Replies
  1. இல்லாட்டி இப்படி யோசிப்பாரா :)

   Delete