9 May 2015

ராத்திரி தூக்கத்தைக் கணவன் இப்படியா கெடுப்பது :)

----------------------------------------------------------------------------

வயதானால் இப்படியெல்லாம் ஆகுமோ :)

           ''என்னடா சொல்றே ,உங்க அப்பாவுக்கு கண்ணும் மூக்கும் அவுட்டா ?''

           ''ஆமாம்மா ,பற்பசைக்குப் பதிலா கொசு விரட்டிக் கிரீமினால் பல் தேய்ச்சிட்டு ,நுரையும் வரலே வாசனையும் இல்லேன்னு சொல்றாரே !''

ராத்திரி தூக்கத்தை,கணவன் இப்படியா  கெடுப்பது  :)

         ''என்னங்க ,இந்த ராத்திரி நேரத்திலே திடீர்னு பீரோ  கண்ணாடி 
நொறுங்கி விழுதே...அய்யய்யோ...அய்யய்யோ ....!''
       ''சும்மா கத்தாதே ,நாய் துரத்திகிட்டு வர்ற மாதிரி கனவு வந்தது ,நான்தான் கையிலே கிடைச்சதை தூக்கி எறிஞ்சேன் !''

உள்ளே போறது  அரை லிட்டர் ,வெளியே வர்றது ஒரு லிட்டரா  ?
         ''தாகம் அடங்கலைன்னு சொன்னதுக்கா அவரை 

ICU ல் அட்மிட் பண்ணிட்டாங்க ?''


             ''அட நீங்க வேற !தண்ணி குடிச்ச நொடியிலேயே 

ஒரு சொட்டுகூட உள்ளே தங்காம  
வெளியே வந்திடுதாம் !''

இல்லாததை விளக்க ஆயிரம் பாடல் ?


நம்ம ஊர் கட்சிகளின் 
கொள்கை விளக்கப் பாடல்களைக் கேட்கையில் 
சந்தேகம் பிறக்கிறது ...
இவர்கள் கொள்கை என்ன நானூறு பக்கங்களில் ,
விளக்க முடியாத அளவிற்கு  ,
கொடுங்தமிழிலா இருக்கிறது ?
 1. Thulasidharan V ThillaiakathuFri May 09, 12:44:00 a.m.
  நல்ல காலம் மனைவியை அடிக்காமல் இருந்தாரே !!
   1. Bagawanjee KAFri May 09, 08:00:00 a.m.
   2. அந்த தைரியம் தூக்கத்தில் கூட அவருக்கு வராதே !
 2. நல்லவேளை
  திருடன் பக்கத்தில் படுத்திருப்பதைப்போல
  கனவு காணாமல் இருந்தார்
  1. Bagawanjee KAFri May 09, 08:02:00 a.m.
  2. இதுவும் நடக்கக் கூடும்,எதுக்கும் அவர் மனைவி தள்ளிப் படுப்பதே நல்லது !
  3. திண்டுக்கல் தனபாலன்Fri May 09, 07:06:00 a.m.
  4. கனவிற்கே இப்படியா...?
  5. நிஜத்தில் நாய் துரத்தினால் பீரோவில் நுழைந்து பூட்டிக்குவாரோ ?
  6. Chokkan SubramanianFri May 09, 07:13:00 a.m.
  7. மனைவி துரத்திய மாதிரி கனவு கண்டிருந்தால், பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை, இது தான் சாக்கு என்று மொத்து மொத்துன்னு மொத்தியிருப்பார்.
  8. இவர் மொத்தினால் மனைவி வாங்கிக் கொண்டாயிருப்பார் ?தலையணையால் முகத்தை பொத்தி விடுவாரே !
  9. ஜெ பாண்டியன்Fri May 09, 09:31:00 a.m.
  10. கண்ணாடியில மனைவியத்தான் பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்.
  11. துரை செல்வராஜூFri May 09, 10:00:00 a.m.
  12. அடேயப்பா!?..
  13. Bagawanjee KAFri May 09, 06:58:00 p.m.
  14. மனைவியை நேரில் பார்க்க தைரியம் இல்லைதான் ..அதற்காக கனவிலே வர்ற கண்ணாடியில் பார்த்தார் என்பது 'டூ மச் ' !
26 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. சரி சரி... அந்தக் கழுத பத்திப் பேசி நேரத்த வீணாக்கதாதே...! எனக்கு கெட்ட கோபம் வரும்... கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

  என்னங்க... என்னயவே தூக்க மாட்டிங்க... எப்படிங்க பிரோவ...?

  ‘தாகம் அடங்கவில்லை தங்கமே... மோகம் தீரவில்லை இன்னுமே’ -ன்னு அதுக்கா இப்ப இந்தப் பாட்ட பாடக்கூடாது!

  பரவாயில்லையே... பாட்டைக் கேட்டா... கொள்கை இருந்தா ஒரு பாட்டுவருமுன்னு தெரியுதா... இல்ல ஒரு பாட்டு வந்தா கொள்கை தானா வந்திட்டு போவுது... விடுங்க... இதுக்கு போயி அலட்டிக்கலாமா?

  த.ம. +1

  ReplyDelete
 3. பற்பசையை ஷேவிங் க்ரீமா யூஸ் பண்ற ஜோக் படிச்சிருக்கேன். தண்ணி ஜோக் சரியாகப் புரியவில்லை.

  ReplyDelete
 4. அனைத்தையும் ரசித்தேன். கனவிலேயே இப்படியா? கனவில் மட்டும் இப்படியா என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

  ReplyDelete
 5. ஃப்ரிட்ஜில் இருந்த தேங்காய் எண்ணையை லெமன் ஜூஸ் என்று குடித்த ஒரு நண்பரின் தந்தை நினைவுக்கு வந்தார் தாகம் தண்ணீர் எந்த அர்த்தத்தில் சொன்னதோ. கொள்கைகள் விளங்குகிறதோ இல்லையோ ட்யூன் நன்றாக இருந்தால் நல்லது

  ReplyDelete
 6. பாட்டை யார் எழுதினதுங்கறது முக்கியம் இல்ல ?? அதுக்கு யார் டான்ஸ் ஆடப் போறாங்களோ:)) போன முறை பி.ஜே.பி.க்கு ஒரு நடிகை வாக்கு கேட்ட விதம் ஞாபகம் இருக்கா பாஸ்!! நம்ம நிலவன் அண்ணன் டென்சன் ஆகி, அதுக்கு ஒரு பதிவு போட்டிருந்தாரே:)))

  ReplyDelete
 7. வணக்கம்
  அப்பாவை.கீழ்பாகம் அனுப்ப வேண்டியதுதான்..இனி...
  மற்றவைகளை இரசித்தேன்.j.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. சகோ ,கில்லர்ஜி>>>
  1 நாற்பதிலேயே ஆரம்பமா,நம்ப முடியலே :)
  2.ஏன் இருக்ககூடாதா :)
  3.அந்த தண்ணியும் தான் :)
  4.கப்ஸா நூறு பாடல்கள் :)

  ReplyDelete
 9. மணவை ஜேம்ஸ் ஜி >>>
  அதுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை :)

  பீரோவை தூக்க வேண்டிய அவசியம் எழவில்லையே :)

  தாகம் கூட சில நாட்களில் அடங்கி விடும் :)

  பாடியது போல் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதாலா :)

  ReplyDelete
 10. ஸ்ரீ ராம் ஜி >>>
  சேவிங் கிரீம் போன தலைமுறையோட போச்சு :)
  DD ஜி யின் அடுத்த கமெண்டைப் படித்த பிறகு புரிஞ்சுதா :)

  ReplyDelete
 11. திண்டுக்கல் தனபாலன்ஜி ,>>
  ஒட்டகம் தண்ணீரைச் சேர்த்து வைத்துக்கும் ,இவர் ஓட்டை மனிதர் :)

  ReplyDelete
 12. கரந்தை ஜெயக்குமார்ஜி>>
  உடம்பில் தண்ணீர்கூட ஒட்டாத நோயும் வந்தால் ஆச்சரியமில்லை தானே :)

  ReplyDelete
 13. ஜம்புலிங்கம் ஜி >>
  கேள்வி பிறந்தது சரி ,பதில் கிடைத்ததா :)

  ReplyDelete
 14. பால சுப்ரமணியம் ஜி >>>
  தேங்காய் எண்ணெய் குடிச்சா நல்லதுதானே :)
  கொஞ்சமாவது தண்ணீர் குடல்லே இறங்கினாத்தானே தாகம் அடங்கும் :)
  கட்சிக்கு கொள்கையும் ,பாட்டுக்கு டியூனும் சரியில்லையே :)

  ReplyDelete
 15. மைதிலி ஜி >>>
  கொள்கை விளக்கப் பாடல்களுக்கும் கட்சியில் சேர்ந்திருக்கும் குத்து நடிகையை ஆட வைத்தாலும் ஆட வைப்பார்கள் :)

  ReplyDelete
 16. ரூபன் ஜி >>
  கீழ்ப்பாக்கத்தில் அடைக்கலம் ஆவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் , இடம் கிடைப்பதே இல்லையாமே :)

  ReplyDelete
 17. ஹ ஹ ஹா

  ரசனை...பகவான்ஜி.

  ReplyDelete
 18. விஜூ ஜி >>
  அழகின் சிரிப்பு ,ரசிக்கத்தானே :)

  ReplyDelete
 19. கொசு விரட்டி மருந்தினால் பல் துலக்கல் - அடக் கருமமே!

  நல்ல வேளை தூங்கற மனைவி மேலே போடாம இருந்தாரே!

  ReplyDelete
 20. கண்ணும் மூக்கும் அவுட்டா?
  இல்லைக் காணும்
  பற்பசை ஏராளம் - அதில்
  கைமாறிப் பாவித்து இருக்லாம்!
  கண்ணும் மூக்கும் அவுட்டாகாமல் இருக்க
  நல்லதொர் எச்சரிக்கை!

  ReplyDelete
 21. வெங்கட் ஜி >>
  பால்னு நினைச்சு பினாயில் குடித்த தலைவரைப் பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா :)

  அடுத்த கட்டமா அதுதான் நடக்கப் போவுது :)

  ReplyDelete
 22. காசிராஜலிங்கம் ஜி>>
  கண்ணுதான் தெரியலே ,மூக்குமா சதி பண்ணணும் ,யாராவது பார்த்து சொல்லி இருந்தாலும் காதும் 'அவுட்'டாகி இருக்குமோ )

  ReplyDelete
 23. ஹஹஹஹ.....

  அவரு பொய் சொல்றாருனு நினைக்கிறோம்...கனவுல மனைவி பூரிக்கட்டையுடன் துரத்துவது போல வந்துருக்கும் அதான் அதைத் தடுக்கத்தான்...ஹஹஹ் மதுரைத் தமிழனிடம் கேட்டால் இதற்கு சரியான பதில் கிடைக்கும்...ஹஹஹ்ஹ

  ReplyDelete
 24. மதுரைத் தமிழன் எங்கிருந்தாலும் உடன் மேடைக்கு அழைக்கப் படுகிறார் :)

  ReplyDelete