19 May 2015

வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் :)

--------------------------------------------------------

ரசித்துப் படித்தால் போதாது ,ருசித்துப் பாருங்கள் :)
               ''அந்த ஸ்வீட் கடைக் காரர் வித்தியாசமா  விளம்பரம் பண்ணி இருக்காரா ,எப்படி ?''
                ''பாலியல் பலாத்காரம் என்றால் யாருக்கும் பிடிக்காது ,எங்கள் கடை பாலியல் பலகாரம் யாருக்குத் தான் பிடிக்காதுன்னுதான் !''

                 

வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் ?

               ''அந்த படத்துக்கு ,விளம்பரம் பண்றவர் மொடாக் குடிகாரராய் 
இருப்பார் போலிருக்கா, ஏன்  ?''            
           ''வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் என்றே உச்சரிக்கிறாரே !''
A .R .ரகுமானுக்கு பிடிக்காத வார்த்தை !
       ''இவ்வளவு வருசமாகியும் நாடு முன்னேறலேங்கிற வருத்தம் உங்களுக்கு நிறைய இருக்கும் போலிருக்கே !''
        ''ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
         ''தாய் மண்ணே 'சுணக்கம் 'ன்னு அடிக்கடி பாடுறீங்களே !''
எங்குமுள்ள ஓட்டைகள் !
             ஒட்டடை சொல்லும் உண்மை ...
           ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்று !
          ஓட்டை மனம்தான் கேட்க மறுக்கிறது !

 1. அம்பாளடியாள் வலைத்தளம்Mon May 19, 12:42:00 a.m.
  ஓ ...அப்போ இது அந்தப் FULL லா ?...:)
  1. Bagawanjee KAMon May 19, 12:52:00 a.m.
   அதே fullதான் ,வல்லவனுக்கு புல்லுன்னா கோழைக்கு குவாட்டரும் ஆயுதமான்னு நீங்கதான் சொல்லணும் !
  2.  சைதை அஜீஸ்Mon May 19, 07:18:00 a.m.
  3. தேர்தல் முடிவுகளைப்பார்த்தால் 'கட்டிங்' கூட ஆயுதம்தான் என்பது "தெளிவாகிறதுஜி!
  4. 'கட்டிங் 'க்கே ஆயுதம் என்றால் half எல்லாம் பேரழிவு ஆயுதம் போலிருக்கே !
  5. இப்படி விளம்பரம் பண்ணினா, படம் ஓடாது; படுத்துரும்!!
  6. அப்படின்னு நமக்கு தோணுது ,டாஸ்மாக் ஆதரவாளர்கள் புண்ணியத்தால் படம் ஒடக்கூடுமே ?அவர்கள் எண்ணிக்கை மெஜாரிட்டி ஆச்சே !
  7. ஒட்டடை சொல்லும் உண்மை ...
  8. ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும்
  9. நல்லா ஓட்றீங்க பகவான்ஜீ ஸார்....
  10. சின்ன வயசுலே ...குறுக்கெழுத்து விளையாட்டில் அடைக்க பட வேண்டிய சதுரங்கள் என்பதை விரும்பி அடைத்ததுண்டு ,அதுதான் இப்பவும் அடைச்சுகிட்டு இருக்கேன் !


24 comments:

 1. 01. குழப்பமாக இருக்கிறதே பாலில் செய்த பலகாரமோ ?
  02. இந்தப்படம் ஹவுஸ் ஃபுல் ஆகுமா ?
  03. லேட்டானதாலே சுணக்கம்னு பாடிட்டாரோ... ?
  04. அடடே நம்மளையும் ஓட்டிட்டீங்க போலயே,,,,,

  ReplyDelete
 2. 1) எங்கிருந்து எதை யோசிக்கிறார் பாருங்க!

  2) ஹா...ஹா....ஹா... எதிரியை டாஸ்மாக்குக்கு அழைத்துச் சென்று கவிழ்ப்பவர் போலேருக்கு!

  3) அச்சச்சோ... அவர் ஏதோ ஏக்கத்தில் பாடறார் போல!

  4) ம்ம்ம்ம்ம்.....

  ReplyDelete
 3. நகைப்பணி தொடரட்டும்..

  எனது புல் சப்போர்ட் உங்களுக்குத்தான்..

  கொஞ்சம் விவகாரமான விளம்பரம்தான்..
  ஒரு புள்ளை வராது ஸவீட் வாங்க...

  அது சரி காட்ஜெட்ஸ் ஏதும் இல்லை இருந்தாலும் சைட் லோடாவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறதே... ஏன்
  தம +

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை. முதல் நகைச்சுவை அதிகம் ஈர்த்தது.

  ReplyDelete
 5. வார்த்தை விளையாட்டை ரசித்தேன் ஜி...

  ReplyDelete
 6. காசுள்ள வல்லனுக்கு FULLலும் ஆயுதம்தான் அதிலென்ன சந்தேகம்...

  ReplyDelete
 7. பதிவு முழுவதும் வார்த்தை விளையாட்டு ரசித்தேன்

  ReplyDelete
 8. எப்படி ஜி,,,,,,,,, இவ்வளவும் முடியல, அத்துனையும் அருமை.

  ReplyDelete
 9. KILLERGEE>>>
  1 மில்க் ஸ்வீட் னா உடனே புரியுது ,என்ன கொடுமைடா சரவணா :)
  2.ரசிகர்கள் ,ரெண்டு Half பும் பார்த்து ரசித்தாலே போதும் :)
  3.தாமதம் கொஞ்சமா :)
  4.அன்று ஒட்டியதை நினைத்துப் பார்க்க வேண்டாமா :)

  ReplyDelete
 10. ஸ்ரீராம்ஜி >>
  1.சூடான செய்திகளைப் பரப்பி வியாபாரம் பண்ண நினைக்கிறாரோ :)
  2.இவர் கவிழும் நாளும் வரும் :)
  3.தூகாத்தில் பாடாம போனாரே :)
  4.மனசை துடைக்கும் ஒட்டடைக் குச்சி கிடைக்குமா ,ஜி :)

  ReplyDelete
 11. மது ஜி>>
  ருசியாய் இருப்பதால் எனக்கு சப்போர்ட்டா :)
  பிள்ளைங்களுக்கு வாங்கித் தர்றவங்க ,வருவாங்களே :)
  இதுவரை தாமதம் என புகார் வரவில்லையே ,கூகுள் ஆண்டவருக்கு நேர்ந்துக்குங்க ,சரியா போகும் :)
  நான் வேண்டிக்கிட்டும் ஒண்ணும் நடக்கலே ,இன்றும் ரீப்ளை பட்டன் வேலை செய்யலை ,இந்த மாதத்தில் இந்த மக்கர் என் தளத்தில் இது முன்றாவது முறை :)

  ReplyDelete
 12. ஜம்பு லிங்கம் ஜி >>
  பாலியல் பலகாரம் ஈர்க்கத்தானே செய்யும் :)

  ReplyDelete
 13. வணக்கம்
  ஜி

  fullஅடித்தால் ஒன்றும் விளங்காது... இரும்பும் கூட காகிதமாக தெரியும் மற்றவைகளை இரசித்தேன்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. திண்டுக்கல் தனபாலன் ஜி >>
  நான் எதிர் பார்க்காமலே மூன்றும் வார்த்தை விளையாட்டாய் போச்சு :)

  ReplyDelete
 15. வலிப்போக்கன் கணேசன் ஜி >>
  நீங்கள் சொல்வது உண்மையே ,முன்பு காசாலே அடித்தவர்கள் ,இப்போது Full லாலே அடிக்கத் தொடங்கி விட்டார்களே :)

  ReplyDelete
 16. GMB சார் >>
  இந்த விளையாட்டு கொஞ்சம் போரடித்தாலும் விளையாடாமல் இருக்க முடியவில்லை :)

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. மகி ஜி >>
  இவ்வளவும் முடியல என்றதால் தப்பித்தேன் ,முடியல என்றால் வேறு அர்த்தமாச்சே :)

  ReplyDelete
 19. புலவர் இராமாநுசம் அய்யா >>
  என் மறுமொழியும் உங்கள் கருத்துக்கு கீழே வந்தால் நன்றுதான் ,ஆனால் ,அடிக்கடி இப்படி ஆகிறதே :)

  ReplyDelete
 20. வெங்கட் நாகராஜ் ஜி >>
  Full அடிப்பதை விட இது நல்லதுதான் :)

  ReplyDelete
 21. பாலியல் பலகாரம் சுவை தேடி
  பாலியல் பலாத்காரம் பண்ண ஓடி
  மச்சான் தூக்கில மாட்டிட்டாரா?

  ReplyDelete
 22. யாழ் பாவாணன் ஜி >>
  நிறைய மச்சான்கள் தப்பித்து விடுறாங்களே :)

  ReplyDelete