11 June 2015

மனைவிக்கு கணவன் சொன்னா பிடிக்காதது :)

                   ''என் பையன் சொன்னா சந்தோசப் படுற என் மனைவி ,அதையே நான் சொன்னா மட்டும் எரிஞ்சு விழுறா !''

                 ''அப்படியென்ன சொன்னீங்க  ?''
            
               ''தாயில் சிறந்த கோவிலுமில்லைன்னு  தான் !''
         

வாயிலே என்ன கொழுக்கட்டையா  :)

           ''பீரோ புல்லிங் கொள்ளையர்கள்,ஜன்னல் ஓரமா பீரோவை இழுக்கிறதை பார்த்த  ,நீ ஏன் சத்தம் போடலே ?''
              ''ஆயில் புல்லிங் பண்ணிக்கிட்டு இருந்தேங்க !''


பலருக்கும் உண்டு பாட்டன் தந்த 'சொத்து '!

கருவிலே திரு உடையார் ...
இப்போது மிக அரிதாகி விட்டார்கள் !
ஜீனிலேயே சர்க்கரை நோய் உடையார்  
நம் ஊரிலே  பெருகி விட்டார்கள் ! 1. பீரோ புல்லிங்
  ஆயில் புல்லிங்
  ரைம் கில்லிங்கா ?
  1. இப்படியுமா  ஒரு ஒற்றுமை ?

24 comments:

 1. பாட்டன் தந்த சொத்து.. ரொம்ப இனிப்பானது..

  ReplyDelete
  Replies
  1. சொத்து வரவுக்கும் ,இனிப்புச் செலவுக்கும் சரியா இருக்கே :)

   Delete
 2. நண்பரே!
  பையனை பாடலின் அடுத்த வரியை பாடச் சொல்லுங்கள்
  மனைவியிடமிருந்து வரி வரியாய் முதுகில் பரிசு கிடைக்கும்!
  "தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை"
  இது எப்படி இருக்கு?
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு வம்பு ?அன்னை தந்தையே அன்பின் எல்லைன்னு அடுத்த வரியை பாடிட்டு போகட்டும் :)

   Delete
 3. இடம் பொருள் ஏவல்!

  நாடு ராத்திரியில ஆயில் புல்லிங்கா.....அடக் கடவுளே...

  ஆமாங்க... உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. அடக் கொடுமையே ,இதுக்குமா :)

   நடுராத்திரியில் அல்ல ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் :)

   ஜீனிலே உள்ள குறையை நீக்கும் காலம் வருமென்று நம்பலாம் :)

   Delete
 4. வணக்கம்
  ஜி
  பையன் சொன்னது சரிதானே...
  திருடு போவது வழமையானது... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அப்பன் சொன்னது மட்டும் தவறா :)

   வழமையா விழித்திருக்கும் போதே திருட்டு?:)

   Delete
 5. மாமியாரை கோவிலை விட சிறந்ததாக நினைக்கிறார்களாக்கும்...!

  ReplyDelete
  Replies
  1. சிதறு தேங்காய் போல் மண்டையை உடைக்க வேண்டும் என்று வேண்டுமானால் நினைக்கக்கூடும் :)

   Delete
 6. கூடவே”உன்” சேர்த்திருக்க வேண்டாமோ?அந்த நேரத்தில் வாயில் கொழுக்கட்டையோ ஆயிலோ சரியில்லையே. ஜீனிலேயே ஜீனி சேர்ந்துவிட்டது. ...!

  ReplyDelete
  Replies
  1. உன் சேர்த்து இருந்தால் கூன் விழும் அளவிற்கு கணவனுக்கு அடி விழுந்திருக்காதோ:)
   சரியில்லைதான் ,கண்ட நேரத்தில் ஆயில் புல்லிங் செய்வது :)
   அதான் ,பிரிய மறுக்கிறது :)

   Delete
 7. பின்ன ...... மனைவிக்கு மாமியால கோயில்னு சொன்னா கோபம் வராமா..பாசமா வரும்.....!!!

  ReplyDelete
  Replies
  1. கோபம் உள்ள இடத்தில் குணம் இருந்தால் சரி :)

   Delete
 8. ஜீனிலேயே என்று சொல்லும்போதே ‘ஜீனி’ வந்து விட்டதே!

  ReplyDelete
  Replies
  1. இதை இந்த ஜூனிலேயே கண்டு பிடிச்சதுதான் ,பெரிய அதிசயம் :)

   Delete
 9. 01. நாளைக்கு இவணும் பொண்டாட்டிக்கிட்டே சொல்லட்டும் பார்ப்போம்.
  02. அதானே... அது முடிஞ்சாத்தானே வர முடியும்.
  03. ஸூப்பர் உண்மை ஜி

  ReplyDelete
  Replies
  1. 1.அவன் பெண்டாட்டியும் சொல்ல விட மாட்டாளா :)
   2.எது முக்கியம்னு புருசனுக்கு நல்லா சொல்லுங்க :)
   3.கருவிலே குறையுடையார் என்று வேண்டுமானால் சொல்லலாமா :)

   Delete
 10. நகைபணி தொடரட்டும்
  தம +

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்தால்,வெற்றியை நாளை சரித்திரம் சொல்லுமோ :)

   Delete
 11. ஹாஹாஹா! ரசித்தேன் சிரித்தேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. 'ரசி'/ 'சிரி '/த்ததற்கும் நன்றி :)

   Delete
 12. ஹஹஹஹஹ் எல்லாமே சூப்பர்.....அது சரி அந்த மனைவியின் அம்மா? அவங்களும் தாய்? அப்போ மனைவி என்ன சொல்லுவாங்க?!!!

  இதற்கு நாங்கள் போட்ட கமென்ட் எங்கே போச்சு யாருப்பா இங்க கமென்ட் எல்லாம் காணாமப் போக வைக்கறது.....

  ReplyDelete
  Replies
  1. தாயும் மாமியாரும் ஒன்றா ?தாய் தாய்தான் ,மாமியார் மாமியார்தான் ,இரண்டையும் குழப்பிக்க மாட்டாங்க :)

   அப்படியா ,காக்கா வர்றதுக்கு முன்னாடியே போட்டீங்களா :)

   Delete