Tuesday, 16 June 2015

சிகப்பா இருந்தாதான் அழகா ?

-----------------------------------------------

 மெண்டல் மனதில் என்னவோ :)

                 ''மன நல டாக்டரைப் பார்க்கும் 

அளவிற்கு என்னாச்சு ,உன் வீட்டுக் காரருக்கு ?''

                  ''ATMல் எடுத்த பணத்தைக் கிழித்து 

போட்டு விட்டு ,சிலிப்பை பத்திரமா  கொண்டு 

வந்திருக்காரே :)


புரிந்தது புருசனின் துரோகம் !

          ''ரொம்ப நாளைக்கு பிறகு ,என் வீட்டுக்காரர் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனார்டி ...ஐஸ் ,பாப்கார்ன்னு எதையும் வாங்கித் தரலே ...கஞ்சப் பிசினாறி !''
         ''அவரை  அப்படியெல்லாம் வையாதே ...என்னை கூட்டிட்டுபோனா தாராளமா செலவு செய்றாரே ! 





கருப்புக்கே உரிய தனிச்சிறப்பு !

சிகப்பு நிறம் என்ன ஓவியமா ,,,
ஓவிய மையின் பெயரே 'இந்தியன் இங்க்'தான் !


  1. அதானே இயவங்களை கூட்டிக்கொண்டுப்போனதே பெரிய விசயம் அல்(ல)வா?




    1. அதை புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறாரே மனைவி !

  2. KILLERGEE DevakottaiMon Jun 16, 05:37:00 p.m.
    இரண்டாவதாக வந்தவ ஒழருவாய் சிருக்கியோ ?




    1. உழறு வாயோ ,நாற வாயோ அந்த ஆள் பார்த்துக்குவார் !

24 comments:

  1. 01. உள்ளதுதானே கணக்கு கரைக்டா வச்சுக்கிறனும்.
    02. வாயைக் கொடுத்துட்டு..................
    03. சரிதான்

    ReplyDelete
    Replies
    1. ஓவ்வொரு நாளும் திக் திக் என்று இருக்கிறது ,REPLY பட்டன் வேலை செய்யுமோ செய்யாதோ என்று !இன்று OK!
      1.அதுக்காக பணத்தை எடுத்தா கிழிக்கிறது :)
      2.நீங்க சொன்னதே போதும் ,அடுத்த வார்த்தை புரியுது :)
      3.என்ன சரிதான் இந்தியன் என்றாலே கருப்பன்தானா:)

      Delete
  2. அவர் ஒரு உயர்ந்த மனநிலையை அடைந்து விட்டார். இனி அவருக்குப் பணம் குப்பைக்குச் சமானம்!

    அடப்பாவி புருஷா!

    அதானே!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்ச நாளில் இல்லறத்தையும் விட்டு போய் விடுவாரா :)

      புருஷன் மட்டுமா பாவி ,தோழியும்தான் :)

      கருப்பு மைக்கு உலகம் பூரா இதே பெயர் தானாமே :)

      Delete
  3. பணத்தின் மீது மோகம் குறைந்து விட்டதோ என்னமோ! :)

    ReplyDelete
    Replies
    1. குடும்பம் என்பது அவர் மட்டும் இல்லையே,போனால் போகட்டும் என்று விட :)

      Delete
  4. உள/மன நல டாக்டரைப் பார்க்குமளவுக்கு
    என்னாச்சு என்றால்
    ATMல் எடுத்த பணத்தைக் கிழித்துப் போட்டு விட்டு,
    சிலிப்பை பத்திரமா கொண்டு வந்திருப்பதே
    காரணம் என்றால்
    காசு போட்டாச்சு காசு போட்டாச்சு என்று
    வெளிநாட்டுக்காரர் சொல்ல
    நம்மாளுங்க
    அடிக்கடி ATM ஐப் பார்த்து ஏமாந்து
    சிலிப்பைக் கிழித்துப் போட்ட பட்டறிவே (அனுபவமே)
    பணத்தைக் கிழித்துப் போடும் செயல்!

    ReplyDelete
    Replies
    1. அடடா ,ஏமாற்றம் இப்படியும் செய்யுமோ :)

      Delete
  5. ஐஸ், பாப்கார்ன் நகைச்சவை ரசித்தேன், அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. இடைவேளை நேரத்தில் ஐஸ், பாப்கார்ன் என்று அவர்கள் ரசித்து சாப்பிட்டதை ,நீங்களும் ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  6. சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
  7. இரண்டு சிரிப்புகளுமே அட்டகாசம்!
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. இரட்டிப்பு நன்றி :)

      Delete
  8. கவனம் எங்கோ இருந்திருக்கும் ஒருவேளை மனைவியை சினிமாவுக்குக் கூட்டிப்பொகும் நினைப்பு வந்து விட்டதோ.?

    ReplyDelete
    Replies
    1. மனைவியை கூட்டிப்போனால் செலவு செய்ய வேண்டாமா ?அதுக்காகவாவது காசு வேண்டாமா :)

      Delete
  9. ஹ்ஹஹஹஹ் அனைத்துமே ரசித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,மன நல டாக்டரை பார்க்க வேண்டி வராது :)

      Delete
  10. சினிமாவுக்குச் செலவு பண்ண எடுத்த பணமதான் கிழிச்சுப் போட்டதோ? :)

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் ,சினிமாவுக்கு போயே தீரணும்னு பிடிவாதம் பிடித்தது மனைவியாச்சே :)

      Delete
  11. Replies
    1. கலக்கல்தானே பலருக்கும் பிடிக்குது :)

      Delete