28 June 2015

பொண்ணோட முடி முழங்கால் வரை ,வாய் ?

                     ''நீதானே முடி நீளமா இருக்கிற பொண்ணு வேணும்னு கட்டிகிட்டே ,இப்போ ஏன் வருத்தப் படுறே ?''

                       ''வாயும் நீளம்னு இப்போதானே தெரியுது ?''
மனைவியிடம்  'கடி 'வாங்கியதால் வந்த மறதியோ ?
         '' ஆயிரம் கொசு கடித்தாலும் கடிக்கிற உணர்வே தெரியமாட்டேங்குதா..எப்போ இருந்து இப்படி ?'' 
         ''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல் தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''


ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !

          '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
          ''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''


இது ஒரு தந்தையின் சுயநலம் மட்டுமில்லை !

என் ஆதர்ச குருவும் பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகாநந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  சந்நியாசம் வாங்கியதால் !
Chokkan SubramanianSat Jun 28, 06:51:00 p.m.
        அந்த மூன்றாவது பஞ்ச் வசனத்தை யாராவது சினிமாக்காரங்க சுட்டுடப்போறாங்க!!!!!
            Bagawanjee KASat Jun 28, 08:44:00 p.m.
       சுட்டு பார்க்கட்டும் ,உங்களையே சாட்சியா வைத்து வழக்கு போட்டு விடுகிறேன் !

22 comments:

 1. குருவை வெறுத்தது உண்மையிலேயே இங்கு ஒருமுறை நடந்தது
  தம +

  ReplyDelete
  Replies
  1. இதென்ன மனநிலை ,தன் இரத்தத்தை தவிர யார் வேண்டுமானாலும் விவேகானந்தர் ஆகட்டும் என்பது ?
   விவேகானந்தர் மீது வைத்திருக்கும் மரியாதை போலிதானே :)

   Delete
 2. 1) ஹா..ஹா...ஹா...

  2) ஹா...ஹா....ஹா... பாவம்!

  3) நல்லவேளை, அதோடு நிறுத்திக் கொண்டாரே! ஹா...ஹா...ஹா....

  4) ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. 3) நீங்க சொல்றதும் சரிதான் :)

   Delete
 3. Replies
  1. என்ன கில்லர்ஜி,செல் மூலமா குதிரையை விரட்டுறீங்க :)

   Delete
 4. Replies
  1. ஆயுசு நூறு ஜி உங்களுக்கு ,நோய் விட்டு போகும்படியா வாய் விட்டு சிரிக்கிறீங்களே :)

   Delete
 5. Replies
  1. நீளமா இருக்கணும் ஒண்ணு,இன்னொன்னு நீளம் இருக்கக்கூடாதாம் ,இது நியாயமா :)

   Delete
 6. என்ன ஜி இன்று ஒரே "வாய்" பேசுது...ஹஹஹ

  1. ஹஹஹ்ஹ்

  2. என்ன ஜி தலைப்பு அருமையா கொடுத்துட்டு உள்ள கவுத்துட்டீங்க....புவ்வா நினைவு வந்துருச்சோ.....ஹஹஹஹஹ்

  3. பேஸ்ட் பேச்சு அருமை உவமை....ரசித்தோம்

  4. ஐயோ அத ஏன் கேக்கறீங்க....இப்படி நிறைய அப்பாக்கள் புலம்புவதாகக் கேள்வி...அதுவும் அவங்க பொண்ணுங்களையும் நினைத்து....புரிந்து இருக்குமே உங்களுக்கு...ஹஹ்ஹ்

  ReplyDelete
  Replies
  1. ஓஅதுவா ?நரம்பில்லா நாக்குதானே அதான் விதம் விதமா பேசுது :)

   2,சை சொல்லி விடுகிறேனே வாய் ,காத்து வரைக்குமா :)

   4.பையன் போனாலே தாங்க முடியலே அவரால் மட்டுமில்லே என்னாலும் முடியலே :)

   Delete
 7. ''வாயும் நீளம்னு தெரிந்து என்ன பன்ன, வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்..!!!!

  ReplyDelete
  Replies
  1. வெளியே பார்வைக்கு தெரிந்ததில் மயங்கி விட்டார்,பழகி பார்த்திருக்கணுமோ:)

   Delete
 8. Replies
  1. நீளமான கூந்தலை ரொம்ப நாள் ரசிக்க முடியாதா ஜி ?:)

   Delete
 9. ஹாஹாஹா! சிரித்து மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சிரித்து மகிழ்ந்ததற்கும் ,மகிழ்ந்து சிரித்ததற்கும் நன்றி :)

   Delete
 10. வணக்கம்
  ஜி

  இரசித்தேன் அனைத்தும் அருமை பகிர்வுக்கு நன்றி த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. காலடி வணங்கும் கூந்தலின் நிழலை என்று பாடத் தோணலையா ஜி :)

   Delete
 11. Replies
  1. தர வரிசைப் படுத்தி சொல்லுங்க குமார் ஜி :)

   Delete