3 June 2015

ம'னை 'வி என்றாலே சந்தேகம்தானா :)

இன்றைய அதிசயம் ,ஜோக்காளி தமிழ்மணத்தில் ஒரு படி முன்னேற்றம் !அதிசயம் நடக்க காரணமான அனைவருக்கும்  நன்றி :)

---------------------------------------------------------

உள்குத்து வைத்துப் பேசுகிறாரோ தலைவர் :)

               ''கண்ணகி பரம்பரையில் வந்தவர்கள் நாம்னு தலைவர் அடிக்கடி சொல்றாரே ,ஏன் ?''
                ''தன்னைக் கைது செய்தால் ஊரே எரியும்னு மறைமுகமா சொல்றாரோ ?''

ம'னை 'வி என்றாலே சந்தேகம்தானா :) 

         " மனைவிக்கு எத்தனை சுழி'ன' போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சா ,ஏன் ! "
        " முதல் மனைவியா,  இரண்டாவது மனைவியான்னு  கேட்கிறாரே  !
படிக்காவிட்டால் காசு போய்விடும் :)

          ''புத்தகத்திலே  செல்லுபடி தேதின்னு புதுசா 

போட்டு இருக்காங்களே ,ஏன் ?''
         
        ''மேஜிக் மாஸ்டர் எழுதிய அந்த புக்கை பத்து 

நாள்லே படிக்கலேன்னா , எழுத்துக்கள் மாயமா 


மறைங்சுடுமாம் !''


ஆணின் ஆசைக்கும் எல்லை உண்டா?

தான் விரும்பும் ...
பெண்ணின் மனதில் உள்ளதை படமாய் பார்க்க நினைக்கிறது ...
அவள் கனவினை 'வீடியோ 'வாய்  பார்க்க நினைக்கிறது !

 1. கரந்தை ஜெயக்குமார்Tue Jun 03, 06:06:00 a.m.
  முதல் மனைவிக்கு ஒரு சுழி
  இரண்டாம் மனைவிக்கு இரண்டு சுழியா
  பலே


  1. இப்படி கேட்ட மனுஷனுக்கு தலையில் ரெட்டைச் சுழி இருக்குமோ ?


   1. Chokkan SubramanianTue Jun 03, 04:59:00 p.m.
    அப்ப தலையில ஒருத்தருக்கு இரண்டு சுழி, மூன்று சுழி எல்லாம் இருக்கிறதே, அதற்கு என்ன அர்த்தம்?


    1. ஏற்கனவே வாழை மரத்திற்கோ,கழுதைக்கோ தாலி கட்டியிருக்கார்னு எடுத்துக்கலாமே ?
   2. KILLERGEE DevakottaiTue Jun 03, 05:35:00 p.m.
    பொண்டாட்டி னு எழுதினா சுழி பிரட்சினை வராதே பகவான்ஜி.


    1. அதிலே வர்ற ண் னுக்கு எத்தனை சுழி என்ற கேள்வி வருமே ?


     1. Mythily kasthuri renganThu Jun 05, 11:27:00 p.m.
      சோ மனைவியை வைச்சு காமெடி பண்றீங்க :) வீட்ல அண்ணிகிட்ட போட்டுக்கொடுக்கவா பாஸ்:)


      1. சோ மனைவியை வைச்சு நான் எப்போ காமெடி பண்ணினேன் ? 

26 comments:

 1. 01. இவங்கெளையெல்லாம் கல்லாலே எறியனும்.
  02. பொஞ்சாதினு சொல்லிட்டா...
  03. நீங்க சொல்றதை பார்த்தால் இந்தப்பதிவை எல்லோரும் இன்றைக்கே படிக்கனும்னு சூசகமா சொல்றீங்களோ...
  04. அடடே... அருமை.

  ReplyDelete

 2. செம உள்குத்து! தலைவருக்கான தகுதி பரிபூரணம்!

  அப்போ மூன்றாவது, நான்காவதுக்கு எல்லாம் எப்படிக் குறிப்பார்?

  ஐயோ... அப்போ அதுபோலப் புத்தகங்களை யார் காசு கொடுத்து வாங்குவார்கள்?

  அது சரி!

  ReplyDelete
 3. மாஜிக் மாஸ்டர் நகைச்சுவையை அதிகம் ரசித்தேன். திரும்பத்திரும்பப் படித்தேன், படிப்பதற்குள் அழிந்துவிடுமோ என்ற ஐயத்தில்.

  ReplyDelete
 4. இவரே இப்படி என்றால் தொண்டர்கள்...!?

  ReplyDelete
 5. கண்ணகி பரம்பரையினா இதுதான் அர்த்தமா?
  தம +

  ReplyDelete
 6. கண்ணகி பரம்பரையினா இதுதான் அர்த்தமா?
  தம +

  ReplyDelete
 7. KILLERGEE>>
  அவங்களை மட்டுமல்ல ,என் தளத்திற்கு எதிராக நிறைய இடையூறுகள் சமீப காலமாய் செய்கிறார்கள் (உதாரணம் ,என் தள ரிப்ளை பட்டனை முடக்கியது )அவர்களையும் கல்லால் அடித்துக் கொல்லணும்:)

  மனைவி பொஞ்சாதி கணவன் ஆஞ்சாதியா:)
  எனக்கு அந்த மந்திர வித்தை எல்லாம் தெரியாதே :)
  அப்படி கண்ணில் தெரிந்தால் நிறைய விபரீதமாகி விடுமே :)

  ReplyDelete
 8. சரிதான் நல்ல தலைவர் போங்க.....ம்ம்ம்ம் என்னத்த சொல்ல...

  மனைவி...ஹஹஹஹ்

  மாஜிக்....ரசித்தோம்.....

  ReplyDelete
 9. அந்த அதிசியம் என்னவென்று சொன்னால் அதிரசமாக இருக்கும் தலைவரே....

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ஜி!
  த ம 8

  ReplyDelete
 11. கண்ணகி கைதானதால் மதுரையை எரித்தாரா.?மூன்றாவது மனைவியாய் இருந்தால்.....?ஆணின் ஆசை நியாய மானதுதானே.

  ReplyDelete
 12. கண்ணகி எப்போ கைதானார். ஓ கன்னகியா? அப்ப சரி.

  ReplyDelete
 13. ஸ்ரீராம்ஜி>>
  என்னைக்கு ஊரை எரிக்கணும்னு
  துணிஞ்சிட்டாரோ ,அப்பவே தலைவர் ஆயிட்டார் :)

  அவங்கவங்க ஊர் பெயரை சேர்த்து' வச்சுக்குவார் ' :)

  ஆன்லைனில் வாங்கி ஏமாற ஒரு கூட்டமே இருக்கே :)

  அதுவும் HD தரத்தில் தெரியணும்,சரிதானே :)

  ReplyDelete
 14. Dr B Jambulingam ஜி >>
  மிகவும் நன்றி ,என்னை பபூன் ஆக்காமல் மேஜிக் மாஸ்டர் ஆக்கினீர்கள் :)

  ReplyDelete
 15. திண்டுக்கல் தனபாலன்ஜி >>
  தலைவர் கொண்டு வா என்பதற்குள் கொன்றுவர தொண்டர்கள் தயாராய் இருக்கிறார்களே :)

  ReplyDelete
 16. மது ஜி >>
  அந்த தலைவரின் கோணத்தில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது :)

  ReplyDelete
 17. மது ஜி >>
  கமெண்ட் இரு முறை வருவது போல் ,த ம வாக்கும் இருமுறை விழுந்தால் நன்றாயிருக்கும் :)

  ReplyDelete
 18. துளசிதரன் ஜி >>>
  இந்த குணாம்சம் கொண்ட தலைவர்களுக்கு இங்கே பஞ்சமே இல்லையே:)

  ReplyDelete
 19. வலிப்போக்கன்>>
  என் தமிழ் மண ரேங்கைப் பாருங்கள் ,அங்கே உள்ளது அதிரசம் :)

  ReplyDelete
 20. செந்தில் குமார் ஜி >>.
  நூறாவது பதிவைத் தொட்டுவிட்ட உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 21. பால சுப்ரமணியம் ஜி >>
  தலைவருக்கு சரித்திரமா முக்கியம் :)
  பெண்டாட்டின்னு சொல்லுவார் :)
  ஆணின் ஆசை எல்லாம் ரொம்ப நியாயம்தான் :)

  ReplyDelete
 22. மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி >>.
  அதே 'கண் நஹி 'தான் :)

  ReplyDelete
 23. அவருக்கு சுழி சரியில்லை போல :)

  ReplyDelete
 24. மேஜிக் நல்ல ஜோக்.

  தமிழ்த் தலைவர்கள் கண்ணகிக்கு சிலை வைப்பதன் அர்த்தம் இப்போதான் தெரியுது.

  சுழி முகம் சுழிக்காத ஜோக்.

  ReplyDelete
 25. ஊமைக்கனவுகள் விஜூ ஜி >>>
  யாருக்கு ,பதில் சொல்றவருக்கா :)

  ReplyDelete
 26. வெட்டிப்பேச்சு >>>
  எரித்த பின் கண்ணகி செய்த நல்ல காரியத்தை இவர்களால் செய்ய முடியுமா :)

  ReplyDelete