30 June 2015

பெண்டாட்டியை தேடிக்கலாம் ,நகையை :)

---------------------------------------------------------------------------

  புத்திசாலிப் பசங்கதான் :)            
              ''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
                  ''முட்டாளோட கேள்விக்கெல்லாம்  பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''
நல்ல பிக் அப்தான் :)
             ''கூப்பிட்ட மறு நிமிஷமே கால் டாக்ஸிக்காரன்  வாசல்லே வந்து நிற்கிறான்னா நல்ல பிக் அப் தானே ?இதுக்கு ஏன் வருத்தப் படுறீங்க ?''
         ''என் பொண்ணையும்  பிக் அப் பண்ணிக்கிட்டு ஓடிட்டானே  !''


பெண்டாட்டியை தேடிக்கலாம் ,நகையை :)

  ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
''சரி நான் என்ன செய்யணும் ?''
          ''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க போதும் !''


பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?

பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !


 1. கரந்தை ஜெயக்குமார்Mon Jun 30, 06:18:00 a.m.
  ஆகா
  நகையை கண்டுபிடித்துக் கொடுத்தால் மட்டும் போதுமா
  1. ஆமாம் அவருக்கு இன்னும் பொன்னாசை விடவில்லை !
 2. பால கணேஷ்Mon Jun 30, 06:57:00 a.m.
  நல்ல கால் டாக்ஸி டிரைவர்...!
  1. மகளை கடத்திக்கிட்டு போனவனின் காலை வெட்டணும்னு இங்கே துடிச்சுகிட்டு இருக்கார் அப்பன்காரன் ,நீங்க என்னடான்னா ,நல்ல 'கால் 'டாக்ஸி டிரைவர்ன்னு சொல்றீங்க !
 3. திண்டுக்கல் தனபாலன்Mon Jun 30, 07:41:00 a.m.
  இதுவல்லவோ பிக்-அப்...!
  1. நல்ல வேளை,வயசுப் பயலா இருக்கப் போய் மகளை பிக் அப் பண்ணிக்கிட்டு போனான் ! இல்லைன்னா  அய்யா பாடு  திண்டாத்தம்தான் :)


25 comments:

 1. வணக்கம்
  ஜி
  ஆகா...ஆகா....ஆகா.. பெண்டாடிக்கும் நகைக்கும் உள்ள வித்தியாசத்தை பு ரிந்து கொண்டேன்...
  நல்ல வாத்தியார் நல்ல புத்திசாலி மாணவன்...... மற்றவைகனை இரசித்தேன் த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நகை இருந்தாலும் ஆயிரம் பொன் என்று தெரிஞ்சு வச்சுருக்கார் :)

   இப்படி போட்டு வாங்குவாங்கன்னு வாத்தியார் யோசிக்கலே:)

   Delete
 2. Replies
  1. செல் மூலம் நீங்கள் நுழைத்துள்ள கருத்துக்கு நன்றி :)

   Delete
 3. அவங்களுக்குப் புரிந்து விட்டது!

  அடப் பாவி!

  ஹா...ஹா...ஹா...


  ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. வாத்தியாருக்குதான் புரியலையோ :)

   இதுக்குத்தான் வெயிட்டிங்கில் இருந்தான் போலிருக்கு :)

   Delete
 4. அனைத்தும் அருமை. முட்டாள் கேள்விக்கான பதிலை அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த கால பசங்க ,கெட்டிக்கார பசங்க :)

   Delete
 5. ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம+1

  ReplyDelete
  Replies
  1. வாத்தியாரான நீங்களுமா :)

   Delete
 6. Replies
  1. நீங்க சொல்லும் போதே தேன் வந்து பாயுது காதினிலே :)

   Delete
 7. இன்னிக்கு நிலமக்கி....ஒருகிலோ நகைதானே முக்கியம்......வேலையில் இல்லாத பொண்டாட்டியைவிட...

  ReplyDelete
  Replies
  1. வேலைக்கு போற பெண்டாட்டியோட மதிப்பு ,ஒரு கிலோ தங்க மதிப்புதான் ,....இது தெரிஞ்சா புருஷனை மிதிச்சே கொன்னுடுவாளே பத்தினி :)

   Delete
 8. Replies
  1. முழுதையும் சுவைத்தற்கு நன்றி அய்யா :)

   Delete
 9. அடேடே... தாய்ப்பாலும் கண்ணீரும் ....

  அருமையாச் சொல்லியிருக்கீங்க ஜீ.

  ஒருவேளை (அழுதா பிள்ளை பால் குடிக்கும்..)இதைத்தான் "அழுத பிள்ளை பால் குடிக்கும் " எனச் சொல்லியிருப்பாங்களோ..?

  God Bless YOU

  ReplyDelete
  Replies
  1. அழுதுஅழுது காரியத்தை சாதித்துக் கொள்பவர்கள் குழந்தைகள் மட்டும் இல்லையே:)

   Delete
 10. வாத்தியார் ஜோக் முதல் நகை ஜோக் வரை அனைத்துமே நகையை வரவழைத்தன! அட்டகாசம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நகையை அணிந்து மகிழ்ந்ததற்கு நன்றி :)

   Delete
 11. வூட்ல கோவிச்சுக்க மாட்டாங்களாட்டிருக்குது!
  த ம கூட ஒண்ணு

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்தைப் படிச்சா ,கோவிச்சுக்குவாங்க :)

   Delete
 12. ரசித்தோம்....அனைத்தையும்...குறிப்பாக முட்டாப் பசங்க கேள்வி...

  ReplyDelete
  Replies
  1. இப்படி எல்லாம் கேட்டு பசங்ககிட்டே மாட்டிக்கக் கூடாது ,அப்படித்தானே :)

   Delete