10 July 2015

புருஷன் டாஸ்மாக் அடிமை என்றால் ,இப்படித்தானாகும் :)

        ''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''

              ''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''

மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு !

               '' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி விழுந்துட்டாங்களே 

டாக்டருக்கு  போன் பண்ணி  வரச்  சொல்லிட்டியா  ?''

             ''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லி இருக்கேங்க !''

 அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் !
கோழி மிதித்து குஞ்சு சாகுமானால் ...
நிச்சயமாய்  நாம் நம்பலாம் ...
மிதித்தது தாய்க் கோழியாக இருக்காது !
,
கடந்த  வருடம் (7.7.14) அன்று ,'ஜோக்காளி 'தமிழ் மண ரேங்கில் முதலிடம் பெற்ற போது,வந்த கருத்துக்களில் மறக்க முடியாதது >>>

 பால கணேஷ்Wed Jul 09, 07:42:00 a.m.
 1. நிறைய நண்பர்களை இந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளின் மூலம் நீங்கள் பெற்றிருப்பதே உண்மையில் சாதனை. இந்த முதலிடம் அல்ல.. இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவும். இந்த முதல் இடம் பெற்றதால் உங்களுக்கு எதும் ப்ளாட் அலாட் ஆகிருக்கா... இல்ல பாங்க பாலன்ஸ்ல பல லட்சம் ஏறிருக்கா...? ஆகவே.... பைசாக்கு பிரயோஜனம் இல்லாத இந்த முதல் இடப் பெருமையை விட்டுவிட்டு இன்னும் நிறைய நிறைய நல்ல நகைச்சுவைகளை வழங்கி, நிறைய நிறைய நண்பர்களைப் பெற மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.
  1. சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல் உள்ளது உங்களின் கருத்து ...நாம் எழுதுவதே,அது பல்லாயிரம் பேரை போய் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் தானே ?ப்ளாட்டோ,லட்சமோ கிடைக்கவில்லை என்றாலும் ,என் பதிவுகள் இன்னும் பலபேரை சென்று அடைய இந்த முதலிடம் உதவி செய்யும்!
   பதிவர்கள் அத்தனைப் பேருக்கும் தமிழ் மண ரேங்க் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது .அதற்கு சாட்சி.. பலரும் சொல்லி இருக்கும் வாழ்த்துக்கள்தான் .
   முதல் இடம் என்பதற்காக நான் பெருமைப் படவில்லை ,இந்த முதல் இடத்தின் அளவீடு என்பது ,ஜோக்காளிக்கு வந்து சேரும் 'ஹிட்' டின் அடிப்படையில்தானே ..அதற்கு நான் சந்தோசப் படாமல் இருக்க முடியுமா ?
   பெரியவர் திரு .G.M.B அவர்கள் கூட தமிழ் மணத்தில் முதலிடம் பெறுவது எப்படி என்று ஒரு பதிவு போடலாமே என்று கருத்து கூறியுள்ளார் .அவர் கண்ணோட்டம் தவறா ,பாலகணேஷ் ஜி ?
   இந்த சந்தோசம் போலியானது என்று தாங்கள் நினைத்தால் ...தமிழ் மண வாக்குப் பெட்டி எதற்கு ?வாசகர் தரும் பரிந்துரை எதற்கு ?அது சூட்டும் மகுடம் எதற்கு ?எடுத்து விடலாமே ?
   #இன்னும் நிறைய நிறைய நல்ல நகைச்சுவைகளை வழங்கி, நிறைய நிறைய நண்பர்களைப் பெற மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.#
   அவ்வ்வ்,இதுவரை எழுதி இருப்பதெல்லாம் அரைவேக்காடுதானா ?
   கடமையைத் தொடர்கிறேன் ,பலன் இல்லாமலா போய்விடும் என்ற நம்பிக்கையில் !
   தங்களின் வாழ்த்துக்கு நன்றி !
  2. பால கணேஷ்Wed Jul 09, 09:12:00 a.m.
   இன்னும் நிறையன்னு சொன்னா இதுவரை எழுதினது மோசமானதுன்னு அர்த்தப்படுத்திக்கிட்டா எப்படி,,,? இப்ப மாதிரி இன்னும் நிறையன்னு அர்த்தம்ங்க.

   சீச்சி இந்தப் பழம் புளிக்கும்னு சொல்றதுக்கு நான் சீரியஸா ட்ரை பண்ணி முடியாமப் போனதால இப்டி சொல்றேன்னு அழகா சொல்றீங்க. இதை எந்த ட்ரையும் பண்ணாமயே நான் மேல வந்துட்டு இப்ப நெட்ல வெறியா எழுதாம எப்பாவவது எழுதறதால கீழ இருக்கேன். டவுட்டா இருந்தா உங்க ஊர் ரமணி ஸாரை கேட்டுப் பாருங்க.

   தமிழ் மண வாக்குப் பெட்டி எதற்கு ?வாசகர் தரும் பரிந்துரை எதற்கு ?அது சூட்டும் மகுடம் எதற்கு ?எடுத்து விடலாமே ? ////நல்லாச் சொன்னீங்கய்யா... சினிமா தியேட்டர் இருக்குன்னா எப்பவும் படமே பாத்துட்டிருந்தா... டாஸ்மாக் இருக்குன்னு எப்பவும் குடிச்சுட்டிருந்தா வௌங்கிரும் லைஃப்.

   நல்ல எண்ணத்தோட நான் சொன்னதை நீங்க இப்படித்தான் அர்த்தப்படுத்திப்பீங்கன்னா... வெல்... இதப்பத்தி இனி யார் என்ன கிண்டல் பண்ணாலும் ஒரு வரி பேச மாட்டேன். விடுங்க...
  3. கோபித்துக் கொள்ளாதீர்கள் Take it easy !
   மோசமில்லேன்னு நீங்கள் சொன்னதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,,உங்கள் எண்ணப்படி இன்னும் நிறைய எழுதுகிறேன் !

   பதிவர்கள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் தமிழ்மணம் திரட்டி !
   அது தரும் ரேங்க்கை மட்டும் மட்டமாய் சொல்வதை ,என்னால் ஜீரணிக்க முடியவில்லை !
   உங்களைப்பற்றி இன்னொருவரிடமா கேட்டு தெரிஞ்சுக்கணும்?பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம் ?

   #டாஸ்மாக் இருக்குன்னு எப்பவும் குடிச்சுட்டிருந்தா வௌங்கிரும் லைஃப்.#
   டாஸ்மாக் பக்கம் போனாலே வெளங்காது லைப் என்பது என் எண்ணம் !

   தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுங்க தலைவரே ,வழக்கம் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் !
  4. பால கணேஷ்Wed Jul 09, 11:01:00 a.m.
   என்னைச் சேர்ந்தவங்ககிட்ட மட்டும்தான் என் கருத்துக்களை பகிர்ந்துப்பேன். அட்வைஸ் பண்ணா யாருக்கும் பிடிக்காதுங்கறதால சொல்லுவேன். அவ்ளவ்தான். அதவிடுங்க... ஆதரவு நிச்சயம் எப்பவும் உண்டுய்யா...நீரும் நம்ம ஆளுல்லா...?
  5. அந்த உரிமை உங்களுக்கு உண்டு பாஸ் !28 comments:

 1. Replies
  1. சே ...இந்த நேரம் பார்த்து சிஸ்டம் உங்களிடம் இல்லாமப் போச்சே :)

   Delete
 2. பால கணேஷ்Wed Jul 09, 07:42:00 a.m.
  //இந்த முதல் இடம் பெற்றதால் உங்களுக்கு எதும் ப்ளாட் அலாட் ஆகிருக்கா... இல்ல பாங்க பாலன்ஸ்ல பல லட்சம் ஏறிருக்கா...? //

  ஐயையோ, அப்ப தமிழ்மணத்தில முதலிடம் வாங்கினா ப்ளாட் கிடைக்காதா? அப்ப நான் ஓடறதெல்லாம் வேஸ்ட்டுத்தானா? என்னங்க இதை மொதல்லயே சொல்லியிருந்தா நான் ஜாலியாத் தூங்கியிருப்பேனே? இப்ப என்னங்க பண்றது?

  ReplyDelete
  Replies
  1. ஓடுறதை நிறுத்தாதீங்க அய்யா ,வருகிற பதிவர்கள் சந்திப்பில் , பிளாட் ,பண முடிப்பை உடனே தர வேண்டுமென்று தீர்மானம் போட்டு விடலாம் :)

   Delete
 3. ஹா...ஹா...ஹா....

  வரட்டும், வரட்டும், டாக்டர் மெதுவா வரட்டும்!

  அப்படி நிச்சயமாய்ச் சொல்ல முடியாது! தவறிப்போய் மிதிச்சிருக்கும் தலைவரே... :))))

  ReplyDelete
  Replies
  1. உயிர் போயிடுச்சுன்னு சொல்லவாவது ,டாக்டர் வேணுமே .மெதுவா வரட்டும் :)

   Delete
 4. இன்று சிலவற்றை அறிந்தேன் ஜி...

  ReplyDelete
  Replies
  1. நானும் அறிய வேண்டியது நிறைய இருக்கு ஜி :)

   Delete
 5. வணக்கம் ஜீ,,,,,,,,,,
  வாழ்த்துக்கள்,
  அனைத்தும் அருமை,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ,வாழ்த்துக்கள்,அனைத்தும் அருமை,
   மூன்றுக்கும் நன்றி :)

   Delete
 6. ஜாக்கெட்டில் போனா நல்லதுதானே. ஜாக்பாட்டாக மாறி வரும் அம்மா வழுக்கி விழுந்தால் மனைவியிடம் போன் பண்ணச் சொன்னால் விளங்கிடும் தமிழ் மண ரேங்க் வர நீங்களும் பதிவு போடவில்லை. நானும் முயற்சிக்கலை.

  ReplyDelete
  Replies
  1. நான் விட்ட த ம முதல் இடத்தை கடுமையாய் முயற்சித்து,ஒரு வருடம் முடிந்த பின்பும் தொட முடியவில்லை ,இதுவும் பெர்முடாஸ் முக்கோணம் போல புரியாத புதிர் :)

   Delete
 7. ஹா... ஹா.... ரசிக்க வைத்தது என்றால்...
  பாலகணேஷ் அண்ணாவுடனான விவாதம்... சூடு பிடித்தது...

  ReplyDelete
  Replies
  1. சூடான விவாதம் ,ஒரு வருடம் போனாலும் ஆறவில்லையே:)

   Delete
 8. வணக்கம்
  ஜி
  இரசித்து சிரித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.j.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பால கணேஷ் ஜியின் கருத்துகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன ரூபன் ஜி :)

   Delete
 9. நீங்க ஒரு புரொபஷனல் ஜீ..

  God Bless You

  ReplyDelete
  Replies
  1. புரொபஷனல் என்பதைப் படித்ததும் தோன்றிய தத்துவம் ...
   தமிழ் மணம் ரேங்கில் ஒன்றாம் இடத்தில் வந்தாலும் எதுவும் கிடைக்கப் போவதில்லை ...
   போகும் போது எதையும் கொண்டு போகப் போவதில்லை என்பதற்காக சம்பாதிக்காமல் இருக்க முடியுமா :)

   Delete
 10. ஜோக்குகளும் அருமை! பாலகணேஷ், மற்றும் நீங்கள் கருத்துரையில் பரிமாறிய தகவல்களும் சரி அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இரண்டு எருமைக்கும் ...தப்பு தப்பு ...அருமைக்கும் நன்றி :)

   Delete
 11. கல்யாணம் ஆனதும் ஆன மாற்றம்
  மனைவி பையில பணம் நிரம்பிச்சாம்
  மாம்பிள்ளைக்குக் கைகடிக்குமே!

  ReplyDelete
  Replies
  1. போட்டது கால் கட்டு ,ஆனா கை கடிக்குதே :)

   Delete
 12. பதிவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் அறிவித்த கட்சி “அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம் ” ஒன்றுதான்

  ReplyDelete
  Replies
  1. அதன் தலைவர் நீங்கள்தான் என்பதும் பதியுலகம் அறிந்த செய்தியாச்சே :)

   Delete
 13. அருமை
  உங்கள் இருவருக்கும் இருந்த பின்னூட்ட கருத்துக்களும் அருமை ..
  தம +

  ReplyDelete
  Replies
  1. இந்த பின்னூட்டக் கருத்துக்களை ஒட்டி முத்துநிலவன் அய்யா ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாயிருக்கும் :)

   Delete
 14. Replies
  1. வீண்வாதம் செய்யவில்லை :)

   Delete