18 July 2015

காட்டன் சேலைக்கும் ஆசைப்படக் கூடாதா :)

-------------------------------------------------------------------------------

எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகம்தான் :)        
           ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வீட்டுக்கு வருதே !''
            ''மருந்து சாப்பிட நோயைக் கொடுத்த ஃபாஸ்ட் புட் ,ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''

 காட்டன் சேலைக்கும் ஆசைப்படக் கூடாதா :)              

            ''கஞ்சி இல்லேன்னா காஞ்சிபுரம் பட்டுசேலைக்கு ஆசைப் படக்கூடாது...சரிதான் ,காட்டன் புடவைக்கும்  ஆசைப் படக்கூடாதா,ஏன் ?''

          ''கஞ்சி போடாத  காட்டன் புடவையை கட்டிக்கிட்டா நல்லா இருக்காதே !''


தலைக்கு வந்தது தலை சாயத்தோட போச்சு !

          ''அவனை தலைமுடி விசயத்திலே ராசியில்லாதவன்னு ஏன் சொல்றே ?''
          ''வழுக்கை விழுந்ததுன்னு விக்கு வாங்கினான் ,இப்போ விக்கும் நரைச்சுப் போச்சாம் !''


மலிவு விலை மருந்தகம் வந்தா தேவலை !

சர்க்கரை வியாதிக்காரனுக்கு எரிச்சல் தரும் விஷயம்  ...
ரேசன் கடையில் மாதம் முழுவதும்  சீனி மட்டும் ஸ்டாக் இருப்பது !

34 comments:

 1. ஜீன்சுக்கு மாறுவதே சரி நானும் ஆமோதிக்கிறேன்:)

  ReplyDelete
  Replies
  1. முதலில் வந்து 'வேக ' நரி என்பதை நிரூபித்த உங்க கருத்தை ஆமோதிக்கிறேன் :)

   Delete
 2. எல்லாமே ஃபாஸ்ட்டா வீடு தேடி வர்ரது வேடிக்கையென்றாலும் நிஜம்தான்.

  அப்புறம் இந்த சக்கரை ஸ்டாக் தத்துவம் அனுபவித்தவர்களுக்கு தெரியும் அது எத்துனை உண்மையென்று.

  பட்டைய கிளப்புங்க ஜீ,,,

  God Bless YOu

  ReplyDelete
  Replies
  1. ஃபாஸ்ட் ஃபுட் பாய்சன் நூடுல்ஸ் விஷயத்தில் மட்டும்தான் வெளியே வந்திருக்கு ,வர வேண்டியது நிறைய இருக்கு :)

   வீட்டுக்கு சர்க்கரை தேவைதான் ,உடம்பில் கூடினால் வம்புதான் :)

   Delete
 3. என்னது விக்கும் நரைக்குதா...? ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. நேரம் சரியில்லேன்னா ,நம்மைத் தூக்கி சுமந்த செருப்பை , நாம தூக்கி சுமக்கிறது இல்லையா,அது மாதிரிதான் இதுவும் :)

   Delete
 4. விக்குதே
  நகைப்பணி தொடர்க
  தம +

  ReplyDelete
  Replies
  1. விக்கத்தானே செய்யும் ,பலருக்கும் தேவைப் படுதே:)

   Delete
 5. அட விக்கும் நரைத்துப் போனதா..... :(

  ரசித்தேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. இயற்கையான நிறம்தான் பொருத்தமாய் இருக்கும் என்பதால் இப்படியாகி விட்டதோ :)

   Delete
 6. தங்களுக்கு இப்பதான் தெரியுமா?,,
  அனைத்தும் அருமை ஜீ,,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சேலைத் துவைக்கிற வேலையை ஆரம்பித்து விட்டீர்களா என்று கேட்காமல் விட்டீர்களே ,சந்தோசம் :)

   Delete
 7. Replies
  1. கஞ்சி போட்ட காட்டன் புடவையில் தேவதைகளைக் காட்டினாரே பாலு மகேந்திரா ,அதுவும் சூப்பர்தானே :)

   Delete
 8. Replies
  1. சூப்பர் சூப்பர்ன்னு தான் சொல்றீங்க ,எது சூப்பர்ன்னு சொல்ல மாட்டீங்களா, ஜி ?:)

   Delete
 9. வணக்கம்
  ஜி

  அருமையாக உள்ளது இரசித்தேன். த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தலைக்கு வந்தது தலை சாயத்தோட போனதையும் ரசீத்தீர்களா :)

   Delete
 10. அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மலிவு விலை மருந்தகம் வந்தா தேவலை என்று சென்ற வருடமே நான் தீர்க்க தரிசனமாய் சொல்லியிருப்பதை பார்த்தீர்களா :)

   Delete
 11. எல்லாமே அருமை...
  ரசிக்க வைத்தது ஜி.

  ReplyDelete
  Replies
  1. அரிசியை குக்கரில் வேக வைத்தால் கஞ்சிக்கு எங்கே போறது :)

   Delete
 12. ஹஹஹஹ விக்கும் கூடவா நரை....ரேஷன்ல சர்க்கரை மட்டும் ஸ்டாக்....ஹஹ்ஹ் ஆமாம் நாங்களும் ரொம்ப இனிப்பானவங்கதன....

  .அனைத்தும் அருமை ஜி!

  ReplyDelete
  Replies
  1. 'வாக்கிங்'கை மறந்து, பதிவை போடுவதில் குறியாய் இருக்கும் பதிவர்கள் பெரும்பாலோர் இனிப்பானவங்களாய் இருக்கக் கூடும் :)

   Delete
 13. அனைத்தும் அருமை
  பாஸ்ட் புட் ஜோக் சிந்திக்கவைத்தது

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்க வைத்தாலும் நாக்கு அந்த ருசியை சந்திக்கத் துடிக்குதே :)

   Delete
 14. அனைத்தும் அருமை
  பாஸ்ட் புட் ஜோக் சிந்திக்கவைத்தது

  ReplyDelete
 15. சக்கரை எப்போதும் தீராது போல ரசித்தேன் ஜீ!

  ReplyDelete
  Replies
  1. உலகத்தின் தலைநகரமான இந்தியாவில் எப்படி சர்க்கரை (நோய் )தீரும் :)

   Delete
 16. ஐந்துக்கு ஆசை பட்டால்
  பத்து பறந்தே வரும்!
  அப்படித்தானே பகவான் ஜி!
  த ம 10
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வாகனம் நூறில் போனால் ,நூற்று எட்டு வாகனம் தேடி வருவதைப் போலத்தான் இதுவும் :)

   Delete
 17. வேகமாக ஆக்கிய உணவுகளை உண்டு
  வேகமாகத் தேக்கிய நோய்களைக் கண்டு
  மனிதன் மாறவில்லை!

  ReplyDelete
  Replies
  1. வேகமாகத் தாக்கிய நோய்களைக் கண்டு மனிதன் மாறணும்னா மரத்தில் ஏறி இயற்கை காய் கனிகளை சாப்பிட்டால்தான் உண்டு :)

   Delete