21 July 2015

மனைவி 'மை லார்ட் 'டிற்கும் மேல்!

---------------------------------------------------------------------------------

 மந்திரின்னா  பொது அறிவு வேணாமா :)
                    ''இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்ததுக்கா மந்திரி டிஸ்மிஸ் ஆனார்  ?''
        ''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் வரிசையை 
ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவிச்சாராம் !''

கடிபட விரும்பும் நல்ல உள்ளம் !

''உங்க கடையிலே  வாங்கிய செருப்பு ,புது செருப்புங்கிற திருப்தியைத் தரலே !'' 
''பழகின செருப்பு மாதிரியே இருக்கா ?''
''இல்லே ,கொஞ்சம் கூட கடிக்க மாடேங்குதே !''


காதல் கடிதங்களை அக்னியிலே போட்டு எரிச்சுடணும் !

            ''காதலிக்கிறப்போ நான் எழுதிய கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
           ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''


மனைவி 'மை லார்ட் 'டிற்கும் மேல்!

வாய்தா ...
கோர்ட்டில் கேட்க முடிந்த வக்கீலாலும்
வீட்டில் மனைவியிடம் கேட்க முடிவதில்லை !
 1. கடிக்காத செருப்பால கடைக்காரனை அடிக்காம விட்டானே..
  மொக்கைக்கு பிறந்தவன் இப்படித்தான் இருப்பான்..
  நீதிபதி வீட்லயே நீலம்பரி ஆட்சியாயிருக்கும்போது...
  வக்கீல் வீட்ல வனஜா ஆட்சி செய்யக்கூடாதா ?
  1. அடிக்கவில்லை என்றாலும் கடிக்கவாவது செய்திருக்கலாம் !
   மினி மொக்கை ?
   யார் அந்த வனஜா ,நான் பார்க்கணுமே
   !

34 comments:

 1. உங்களுக்கு தெரியாதா ?!
  வாய்தா கேட்டல் வாய்கிழுக்கென்று வள்ளுவர் ஏதோ ஒரு அதிகாரத்தில் வாசுகி
  'அம்மையாரின்' அதிகாரத்திற்குட்பட்டு குரல் (அதாங்க சவுண்டு) கொடுத்திருக்காராமே !

  ReplyDelete
  Replies
  1. சவுண்டை அடக்கியே வாசிக்க வேண்டும் ,இல்லையென்றால் 'வா சுகி ' என்ற அழைப்பே இல்லாமல் போய்விடுமே :)
   ஜி ,உங்க சவுண்டை உங்க தளத்தில் ஆரம்பிக்கலாமே :)

   Delete
 2. மிகவும் இரசித்துப் படித்துச் சிரித்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
  குறிப்பாக கியூ பிராஞ்ச்

  ReplyDelete
  Replies
  1. கியூ பிராஞ்ச் போலீஸ் மந்திரியை ஜெயிலில் நன்றாக கவனித்து இருப்பார்களோ :)

   Delete
 3. Replies
  1. நீண்ட இடைவெளிக்கு பின் விழுந்திருக்கும் உங்கள் பொன்னான வாக்குக்கு நன்றி :)

   Delete
 4. ஹா.....ஹா...ஹா... மந்திரியின் அறிவு வியக்க வைக்கிறது!

  இப்படி ஒரு பார்வையா! ஹா...ஹா...ஹா...

  அதை இன்னுமா வச்சிருப்பான் பாவி அப்பன்! ஹா...ஹா...ஹா...

  ஹா...ஹா... மனைவிக்கு வாய்தான்!

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட மந்திரிகள் பெற்று இருக்கும் நாம் பேறு பெற்றவர்கள் :)

   கடிக்களைன்னா அதென்ன புது செருப்பு :)

   அதான் மொக்கைன்னு தெரிஞ்சு போச்சே :)

   வக்கீலுக்கு வாய்தாதான் பலம் என்றால் ,மனைவிக்கு ......அதே :)

   Delete
 5. Replies
  1. உங்களை சந்தித்ததை இப்போதான் சொன்னார் அன்பே சிவம் அவர்கள் ,நான்தான் உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது :)

   Delete
 6. Replies
  1. எரிச்சுடணும்,சரிதானே ஜி :)

   Delete
 7. நல்ல பிள்ளை,,,,,,,,,, என்னப் பன்றது,,,,,,
  அனைத்தும் அருமை,
  நன்றி,

  ReplyDelete
  Replies
  1. இவன் நல்லா வருவான்னு தோணுது :)

   Delete
 8. நல்ல சிந்தனை ஓட்டம்...தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நான் ஓடிக்கொண்டே இருப்பேன் ,உலகம் சுழல்வது நிற்கும் வரை :)

   Delete
 9. அப்பாடா ஜி அண்ணாச்சீ.! தயவால் இனி கவலை இல்லை அண்ணாச்சீ .

  ReplyDelete
  Replies
  1. கவலைத் தீர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே :)

   Delete
 10. சர்தார்ஜிக்கள் ஜோக் போல மந்திரிகள்ஜோக்ஸ் போடலாமே. கடிக்காத புதுச் செருப்பும் செருப்பா.?மனைவியிடம் எதற்கு வாய்தா என்று சொல்லவில்லையே.

  ReplyDelete
  Replies
  1. மந்திரிகள் ஜோக்ஸ் மொத்தமாய் போடத்தான் தளிர் சுரேஷ் ஜி இருக்காரே :)

   அதானே ,காசு போட்டு வாங்கின செருப்பு கொஞ்சமாவது கடிக்க வேண்டாமா :)

   தெரியாத மாதிரி கேட்குறீங்களே,சரிதானா :)

   Delete
 11. புது செருப்பு கடிக்க மாடேங்குதே!
  அப்ப - அது
  பழகின செருப்பு இல்லைங்க
  பழஞ் செருப்பு

  ReplyDelete
  Replies
  1. இதுக்குத்தான் பழக விடணும்னு சொல்றாங்களா :)

   Delete
 12. ஹாஹாஹா! கியு பிரிவு போலீசார் ஜோக் அருமையிலும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. இன்றைய என் பதிவில் (22.7.15) உங்களுக்கு ஒரு கோரிக்கை, படித்து நிறைவேற்றி வைங்க ,சுரேஷ் ஜி :)

   Delete
 13. மொக்கைன்னு தெரிஞ்சும்!..... :))) ஹா ஹா... செம கேள்வி!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா அந்த மொக்கை நானில்லை :)

   Delete
 14. கியூ பிரிவும், வாய்தா வக்கீலும் ஜோர் ஜீ..

  ஆமா கடிச்சாத்தான் செருப்பா?

  God Bless You

  ReplyDelete
  Replies
  1. பிரிக்க முடியாதது வக்கீலும் வாய்தாவும்:)

   புதுசுலே கடிக்கத்தானே செய்யும் :)

   Delete
 15. மிகவும் ரசிக்க வைத்தது ஜி.

  ReplyDelete
 16. ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''\\

  நமக்கு நாமே ஆப்பு வச்சிகிறதா?

  ReplyDelete
  Replies
  1. சொந்த காசிலே சூனியம் வச்சுக்கிறது என்றும் சொல்லலாம் :)

   Delete
 17. அதானே!கியூவுக்குன்னு விசேட பிரிவா இருந்த்துக்கிட்டு அந்த வேலையைச் சரியாச் செய்யலன்னனா எப்படி?:)
  சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தலைவருக்கு இந்த அறிவுகூடவா இல்லாமல் போகும் :)

   Delete