22 July 2015

மாமனார் கொடாக்கண்டன் ,மாப்பிள்ளை விடாக்கண்டன் :)

---------------------------------------------------------------------------------------

ஆத்திரப் படுவதிலும் நியாயம் இருக்கே :)
           ''பரோல்லெ  வெளியே போய் ,யாரைக் கொலைப் பண்ணிட்டு  உள்ளே வந்திருக்கே ?''
             ''நல்லா வருவேன்னு எனக்கு நேமாலஜிப் படி பெயர் வைத்தவரைத்தான் போட்டு தள்ளிட்டுவந்தேன் !''

காதலியின் கெடுவுக்கு காரணம் ,எதுவா இருக்கும் ?

          ''என்னடா  சோகமா இருக்கே ,உன் காதலி  என்ன சொல்லிட்டு போறா ?''
         ''நாளைக்கே ஓடிப் போறோம் ...தாலிக் கயிறு என்  கழுத்துலே தொங்கணும்...இல்லேன்னா ..கயிறிலே என் கழுத்து  தொங்கும்னு மிரட்டிட்டு போறாடா!''

மாமனார் கொடாக்கண்டன் ,மாப்பிள்ளை விடாக்கண்டன் :)

          ''மாசக்கணக்கா டேரா போட்டிருக்கிற மாப்பிள்ளைக்கு நாசூக்கா புரியவைக்க SMSஅனுப்பினது வம்பாப் போச்சா ,ஏன் ?''
        ''விருந்தும் மருந்தும் மூன்று நாள்னு SMS அனுப்பினது யார்ன்னு தெரிஞ்சுக்காமே வீட்டை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே !''

பேதை தந்த போதையினால் மிதப்பா ?

விமானம் தரை இறங்கிய பின்பும் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறேன் ...
விமானப் பணிப்பெண்ணாய் என்னவள் !


 1. உலகளந்த நம்பிTue Jul 22, 07:51:00 a.m.
  #''நாளைக்கே ஓடிப் போறோம் ...தாலிக் கயிறு என் கழுத்துலே தொங்கணும்...இல்லேன்னா ..கயிறிலே என் கழுத்து தொங்கும்னு மிரட்டிட்டு போறாடா!''#

  நல்ல வேளை, “கயிறு உன் கழுத்தை இறுக்கும்”னு சொல்லலை!
  1. புதுமைப் பெண் என்றால் அப்படி சொல்லி இருப்பாள் ,இந்த பதுமைப் பெண்ணுக்கு அப்படி சொல்லத் தோன்றவில்லை !

 2. KILLERGEE DevakottaiTue Jul 22, 08:05:00 a.m.
  தாலிக்கயிறுல எத்தனை பவுன் செயின் போடுவாங்க பகவான்ஜி ?
  சோத்தை உப்பு போடாமல் வடிச்சா சரியாப்போச்சு எதுக்கு எஸ்.எம்.எஸ் தெண்டச்செலவு ?
  நிறையப்பேரு தரையில இறங்கிய பிறகும் மிதக்கிறான் (போதையில)
  1. பவுனா , 50கிராம் மஞ்சள்தான் தேறும் !
   அப்படியும் ரோசப்பட்டு போற ஆளில்லை அவர் !
   அதுக்குதானே ஊத்துறது ?எப்படியோ வீடு போய் சேர்ந்தா சரி !

   1. புலவர் இராமாநுசம்Tue Jul 22, 10:23:00 p.m.
    மசக்கை!
    1. மசக்கைக்கு மாங்காய் தேடிக்கிட்டு இருக்காமே ,மாங்கல்யத்தை தேடுறாளே...பொண்ணு பொழச்சிக்குவா!

32 comments:

 1. \\''நல்லா வருவேன்னு எனக்கு நேமாலஜிப் படி பெயர் வைத்தவரைத்தான் போட்டு தள்ளிட்டுவந்தேன் !''\\ Good thing, all fake fellows!!

  ReplyDelete
  Replies
  1. போலிகள் தானே இங்கே ஓஹோன்னு இருக்கு :)

   Delete
 2. அடேடே.. அவன் மிதப்பிலும் ஒரு நியாயம் இருக்குது ஜீ..

  ஆமா .. இந்த நேமாலஜிகாரங்க மேல இத்தனை கோபம் ஏன்?

  God bless You

  ReplyDelete
  Replies
  1. இது ,கோப்பையினால் வந்த போதை அல்ல :)

   99 உங்களுக்கு ராசி எண் என்று பெயர் வைத்தார் ,ஜெயிலில் செல் நம்பர் 99 என்றால் கோபம் வரத்தானே செய்யும் :)

   Delete
 3. ஹா...ஹா...ஹா... அப்படிப் போடு!

  அப்படி என்ன அவசரமோ... கையையும் காலையும் வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்க மாட்டார் இந்தக் காதலர்!

  ஏதோ ஒரு காரணம்... ஆகக் கூடி தொல்லை!

  ம்ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. FIR நம்பர் கூட அவர் கணித்த நம்பர் என்றால் ஆத்திரம் வரத்தானே செய்யும் :)

   ஊசி இடம் கொடுக்காம நூலு நுழையுமா :)

   மாப்பிள்ளை டேராவை தூக்க மாட்டார் போலிருக்கு :)

   ஆகாயக் கனவுகள் :)

   Delete
 4. என்ன ஜி... எல்லாம் கொலைக்களமா போச்சி...

  ReplyDelete
  Replies
  1. கொலைவெறிப் பாடலைக் கேட்டு யோசித்ததால் ,இப்படியாகி போச்சு :)

   Delete
  2. கில்லர் ஜி ,நீங்க எதுக்கு சிரீச்சீங்க ?

   Delete
 5. வணக்கம்
  ஜி
  வார்த்தை விளையாட்டு.. கலக்கல் .... த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. sms ல் வந்தது வார்த்தை விளையாட்டு அல்ல ,வினை :)

   Delete
 6. கொடாக்கண்டனுக்கும் விடாக்கண்டனனுக்கும் சரியான போட்டிதான்.

  ReplyDelete
  Replies
  1. ஜெயிக்க போறது யாரு :)

   Delete
 7. ஆத்திரப்படுவதும் சரி தான்.

  ReplyDelete
  Replies
  1. ஒன்பது ராசி என்றார் ,கைதி நம்பர் ஒன்பதாகி விட்டாரே !

   Delete
 8. இரசித்தேன்! கொடாக்கண்டன் விடாக்கண்டன்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப பொருத்தம்தானே :)

   Delete
 9. ஹஹஹஹ நேமாலஜி நோமாலஜி!

  காதிலியின் கெடுவுக்குக் காரணம்கொஞ்சநாள்ல தெரிஞ்சுகுமாயிருக்கும் அதான் ....ஹஹ்ஹ  ReplyDelete
  Replies
  1. மசக்கை வந்த பிறகா மஞ்சக் கயிறைத் தேடுவது :)

   Delete
 10. Replies
  1. இந்த போதையினால் பாதை மாறாமல் போனால் சரி :)

   Delete
 11. Replies
  1. த ம டஜனுக்கு நன்றி :)

   Delete
 12. அனைத்தும் சிரி(ற)ப்பு!

  ReplyDelete
  Replies
  1. உங்க அடைப்புக் குறியை ரசித்தேன் ,நன்றி :)

   Delete
 13. வணக்கம்,
  சரியான போட்டி,
  அவர் மிதப்பது அவளாலா?
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிதப்பதும் அவளாலே ,அமிழப் போவதும் அவளாலே :)

   Delete
 14. காதலனை மெரட்டறதுலயும் ஒரு ரைமிங் இருக்கு சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. என் கழுத்துலே கயிறு ஏறணும்,இல்லேன்னா ,உன் கழுத்துலே கயிறு இறுகும் என்று கூட மிரட்டியிருக்கலாம் :)

   Delete
 15. மனம் மகிழச் சிரித்தேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அதெப்படின்னு ஒரு பதிவைப் போடலாமே :)

   Delete