30 July 2015

யாருக்கு வரும் இவர் வேகம் :)

------------------------------------------------------------------------------

திருஷ்டிப் பூசணிக் காய்க்கு பதிலாய் ?
               ''புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,முதலில் எங்க அம்மாவைப் போட்டோ  எடுத்து 'லாக் ஸ்க்ரீன் போட்டோவாய்  'வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

 இவர் வேகம் யாருக்கு வரும் ?         

                    ''பரவாயில்லையே, ஒரு வார வேலையை  ஒரேநேரத்தில் செய்தீங்களா ,அப்படியென்ன செய்தீங்க ?''
                       ''காலண்டர் தாளை  தினசரி கிழிக்கிறதுக்கு பதில் ,வாரம் 
ஒரு தடவைக் கிழிப்பேன் ! ''

உபயம் எனும் பேரில் வரும் அபாயம் !

            'கோவிலில் உள்ளஎல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
            ''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிற பயம்தான் !''போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!

சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !


  1. புலவர் இராமாநுசம்Wed Aug 27, 11:01:00 a.m.
 1. அவராவது பரவாயில்லை! சிலபேர் கிழிப்பதே இல்லையே!
  1. கிழிக்கக் கூட நேரம் இல்லாத மனிதர்களுக்கு ,குளிக்க கூட நேரமிருக்காதே ?

18 comments:

 1. ''...சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
  இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !..''' இதைக் கணவருக்கு உரக்க வாசித்துக் காட்டினேன்
  ஒரு நண்பர் எழுதியுள்ளார் என்று. ஏனென்றால்
  நாமும் காதல் திருமணம் தான் என்று.
  கணவரும் விழுந்து விழுந்து சிரித்து
  எங்கோ நல்லா அனுபவப் பட்டிருக்கிறார் போல என்று சிரித்தார்.

  ReplyDelete
  Replies
  1. சிரிங்க சிரிங்க ,உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கத்தானே போவுது ,அன்னைக்கு தெரியும் ,என் தீர்க்க்கதரிசனம் :)

   Delete
 2. 'சொந்தக் காசில'...ரொம்ப பயமுறுத்திட்டா அப்புறம் பல பேர் உஷாராயிடப் போறாங்க ஜீ..

  உண்டியலுக்கு பூட்டு நிஜமாலுமே இப்படி நடக்க வாய்ப்பு உண்டோ..?

  ReplyDelete
  Replies
  1. #உஷாராயிடப் போறாங்க ஜீ..#
   ஏதோ என்னால் செய்ய முடிந்த விழிப்புணர்வு:)

   வாய்ப்புண்டு ...இதுவும் ,என்னால் செய்ய முடிந்த விழிப்புணர்வு:)

   Delete
 3. ஹா...ஹா....ஹா.... மாமியாரின் மதிப்பு! திருஷ்டிப் பூசணி என்றால் உடைக்கணும் என்று சொல்லி மனைவி செல்லை வாங்கிக் கீஹெ போட்டு உடைக்காமல் இருந்தாரே!

  மாசத்துக்கு ஒரு தடவைக் கூடக் கிழிக்கலாம் பாஸ்!

  ஹா...ஹா...ஹா... நியாயமான பயம்!

  ம்ம்ம்... சில சமயம் உண்மை. எனக்கு அப்படி இல்லை!


  ReplyDelete
  Replies
  1. புருஷன் 'அம்மாகோண்டு 'ஆகி வருவதைப் பார்த்தால் ,நீங்கள் சொல்வது போல் சீக்கிரம் நடக்கும் என்றே படுகிறது :)

   மாத காலண்டரை வருஷம் ஒரு முறை என்றும் வைத்துக் கொள்ளலாம் :)

   அந்த பயம் இருக்கணும் :)

   அனுபவம் இல்லை என்றால் எப்படி உண்மையாகும் :)

   Delete
 4. அடிக்கடி செல்போன் வாங்கணும்...! ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. மனைவிக்கு கோபம் வந்தால் தூக்கி எறியக் கூடுமா :)

   Delete
 5. இனி ஒரு புள்ள கூட கை நீட்டி நீ என்னத்த கிழிச்சன்னு கேட்குமா?? சூப்பர் பாஸ்:)))))

  ReplyDelete
  Replies
  1. கேட்கிற கையை ஒடிச்சிப்பிட மாட்டோம் :)

   Delete
 6. அருமை. உபயம் என்றாலும்கூட எச்சரிக்கையாக இருக்கவேண்டுமோ?

  ReplyDelete
  Replies
  1. டைம் பீஸ் உபயம் என்று டைம் பாம் கூடக் கொடுக்கக் கூடும் ,காலம் அப்படி கெட்டுக் கிடக்கே :)

   Delete
 7. ரசித்தேன் நண்பரே....

  த.ம. 6

  ReplyDelete
  Replies
  1. 900 பதிவுகள் கண்ட உங்களின் ,khevar இனிப்பையும் ருசித்து மகிழ்ந்தேன் ,வாழ்த்துகள்

   Delete
 8. “திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தியா... இல்ல திருஷ்டி கழியட்டுமுன்னு சொல்ல வந்தியா... உண்மையச் சொல்லுடி...“
  “இருந்தாலும் நீங்க சமத்துங்க... எப்படீங்க கண்டுபுடுச்சீங்க...?”


  அதானே பார்ததேன்... வேற ஏதும் எனக்குத் தெரியம... செஞ்சு கிழிச்சிங்களோன்னு பாத்தேன்,,,“


  இதுக்கு போயி அலட்டிக்கலாமா...? நம்மள்ளட்டதான் ஒரிஜினல் சாவி இருக்கே... நம்ம கை என்ன பூ பறிக்குமா...?
  பந்திக்கு முந்திரமாதரி... உண்டிக்கு முந்திக்க வேண்டியதுதான்...!


  ''நம்ம திருமணம் என்ன காதல் திருமணமா...சும்ம பொய் பேசாதிங்க,,,”
  “அத சொல்லல...நம்ப புள்ள கல்யாணத்த சொன்னேன்... நான்தான் எப்பவோ சூன்யமாயிட்டனே...!

  த.ம.7


  ReplyDelete
  Replies
  1. உங்க சமத்து மருமகளை நானும் ரசித்தேன் :)

   கிழிச்சாதான், கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு சொல்லி விடலாமே :)

   உண்டியலை உடைக்க ஏகப்பட்ட போட்டி இருக்கும் போலிருக்கே :)

   சூனியமாகியும் தெளிவா பேசுறீங்களே :)

   Delete
 9. ஹ ஹ ஹா

  என் பதிவிற்கான உங்கள் மறுமொழியைப் படித்துச் சிரித்த சிரிப்பு இன்னம் ஓயவில்லை பகவானே..!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கச் சொன்னதுக்கா இந்த சிரிப்பு :)

   Delete