4 July 2015

தமிழ்மணம் முதலிடம் ,மூவரில் யாருக்கு :)

           

              அபுதாபியில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருக்கும் நண்பர் .கில்லர்ஜி அவர்கள்..கோவைக்கு வந்திருந்த போது அன்போடு உபசரித்து ,மருத மலைக்கு  அழைத்துச் சென்று  இருக்கிறார் அய்யா .பழனி .கந்தசாமி .அந்த சந்திப்பு சம்பந்தமாக 'இவரைத் தெரிகிறதா ?'என்று பதிவிட்டு இருக்கிறார் .அதில் #கில்லர்ஜியின் மகளும் மகனும் கோவையில் அவருடைய அண்ணார் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கில்லர்ஜி கோவைக்காரர்தான்.# என்று  எழுதி இருந்தார் .அது சம்பந்தமாக என் கருத்தையும் ,அவரின் மறு மொழியையும் ரசிக்க வலையுலக உறவுகள் அனைவரையும் அழைக்கிறேன் ...இது பதிவர்கள் இடையேயான ஒரு ஜாலி பதிவு ,நாட் சீரியஸ் :)
 1. கில்லர்ஜியை உங்க ஊர்க்காரராய் ஆக்கிக் கொள்ளுங்கள் ,எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை !
  இப்போ தெரிய வேண்டியது ,இரண்டு பேரும் சேர்ந்து செய்த சதி ஆலோசனை  விபரம் தான் :)
  பதிலளிநீக்கு

  பதில்கள்


  1. என்ன சதி பண்ண முடியும்? துபாய் பாலைவனத்தை சைட் போட்டு விக்கலாமா என்று பிளான் போட்டோம். தெரிஞ்சா துபாய்க்காரன் தலையை வெட்டுவானாமே? நமக்கெதுக்கு வம்புன்னு விட்டுட்டோம். நீங்க வேணா முயற்சி பண்ணுங்களேன்?
  2. தமிழ் மணத்தில் முதலிடம் பிடிக்க நீங்கள் இருவரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்,கடந்த வருடம் (7.7.14) நான் தொட்ட,(விட்ட) முதல் இடத்தை பிடிக்க நானும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் .இன்னும் மூன்றே நாட்கள்தான் பாக்கி , உங்களுக்கு ஏதாவது ஐடியா வந்திருந்தால் எனக்கும் சொல்லுங்களேன் :)
   நீக்கு
  3. ஒரு புளியமரம் தேடிக்கொண்டு இருக்கிறேன. முதல் ரேங்க் கிடைக்காவிட்டால் அதில் போய் தூக்குப் போட்டுக் கொள்ளப் போகிறேன்.
  4. நமக்குள் என்ன ஒரு பொருத்தம் ,நான் எடுத்த முடிவையே நீங்களும் எடுத்து இருக்கிறீர்கள் .அதுக்காக நான் ஒரு முருங்கை மரத்தை செலக்ட் செய்தாகி விட்டது:)
   நீக்கு
  5. ஆனாலும் நீங்க கில்லாடிதான். முருங்கை மரத்தில் தொங்க ஆரம்பித்தவுடனே அந்தக் கிளை சடசடவென்று முறிந்து உயிருக்கு ஒரு சேதாரமும் ஏற்படாது.

24 comments:

 1. Replies
  1. கில்லர்ஜி,செல் மூலம் கருத்தைச் சொல்வதால் உங்களால் கலாட்டாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன் ,மதுரைக்கு தங்களை அன்போடு அழைக்கிறேன் !

   Delete
 2. பதவி போட்டிஇங்கும்ஆரம்பித்துவிட்டதாகவே எனக்கு படுகிறது... கோடை காலத்தில் அவர், குளிர் காலத்தில் இவர். கோடையுமில்லாமல் குளிருமில்லா காலத்தில் அடுத்தவர். இப்படி பகிர்ந்து கொள்ளலாமா.....?????

  ReplyDelete
  Replies
  1. கால் அணாவுக்கு பிரயோசனம் இல்லாத இது ஒரு பதவியா ,அதுக்கு ஒரு போட்டியா :)
   அதான் ,முதலிலேயே சொல்லி விட்டேனே #இது பதிவர்கள் இடையேயான ஒரு ஜாலி பதிவு ,நாட் சீரியஸ் :)#என்று :)

   Delete
 3. சுவாரஸ்யமாய் இருக்கிறது.....ஹஹஹா....

  கலாட்டா மதுரையிலும்....தொடரும் என எதிர் பார்க்கிறேன்....

  தம +1

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜியின் உறவினர்கள் மதுரையில் இருக்கிறார்கள் ,எனவே அவர் மதுரைக் காரர் தான் :)

   Delete
 4. வணக்கம்
  ஜி

  அலாட்டா ஆரம்பித்து விட்டீர்களா.. தங்களின் கலாட்டாவை... பார்க்கலாம்... ஆகா...ஆகா. த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம்.பார்க்கலாம்.,பார்த்துக் கொண்டே இருக்கலாம் :)

   Delete
 5. Replies
  1. ஜெயிக்கப் போறது யாருன்னு பாடிகிட்டே இருக்க வேண்டியதுதான் :)

   Delete
  2. நீங்கள் உட்பட அனைவருக்கும் ஓட்டு போடும் அனைவருமே முதல்வன் தான் ஜி...

   Delete
  3. உண்மையிலும் உண்மை ,நாங்க ஒருநாள் முதல்வர்கள் :)

   Delete
 6. ஆகா
  இப்படி ஒரு போட்டி நடக்கிறதா?
  நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. நீறு பூத்த நெருப்பு மாதிரி ,இந்த போட்டி :)

   Delete
 7. தமிழ்மண தர வரிசையில் முதலிடம் உங்களுக்குத்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் முதல் வரிசைக்கு வர என்ன செய்யவேண்டும் பின்னூட்டமும் தமிழ்மண வாக்கும் என்று நீங்கள் சொன்ன நினைவு.

  ReplyDelete
  Replies
  1. முதலில் ,தமிழ் மணத்தில் ஞாயிறு தோறும் வெளியாகும் முன்னணி வலைப் பட்டியலில் தொடர்ந்து நான்கு வாரங்கள் முதலிடத்தைப் பிடித்தாலே போதும் ,அதுக்கு என்ன செய்யணும் ,யோசியுங்க :)

   Delete
 8. நடக்கட்டும்.. நல்லதெல்லாம் விரைந்து நடக்கட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. அதைதான் நானும் சொல்கிறேன் :)

   Delete
 9. தமிழ்மணம் நிலையில் (rank) இல்
  முதலிடம் யாருக்கா - அதில்
  எவரெவர் கைவண்ணம்
  வாசிப்போரைக் கட்டிப்போடுதோ
  அவருக்கே!

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் :)

   Delete
 10. தமிழ் மண ஓட்டு ஏழு வந்தால் போதும் எனக்கு! காரணம், என்பதிவை பலரும்படிக்க வாய்ப்பு ஏற்படுமே என்பதுதான்! மற்றபடி, தர வரிசை பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை!

  ReplyDelete
  Replies
  1. ஏழு என்ன ,எழுபது வரும் உங்களின் கவியெழுதும் திறமைக்கு :)

   Delete