3 August 2015

என்றும் 16 தானா ந டி கை க்கு :)

பிரபலங்கள் பலரும் இப்படித்தான் :)                

             ''உங்க அருமை பெருமைகளை , மேடையில்  அறிமுகம் செய்தவருக்கு நீங்க ஒரு நன்றி சொல்லக் கூடாதா ?''

                  ''அதை எழுதிக் கொடுத்ததே நான்தானே 

,தற்பெருமை எனக்கு பிடிக்காதுங்க !''


நியாயமான போராட்டம்தானே :)               

             ' 'உத்தம வில்லன் 'பட ரிலீஸ் தேதியை மாற்றச் சொல்லி போராட்டமா ,ஏன் ?''

                         '' அக்டோபர்  2ல் ரிலீஸாம்,அது உத்தமர் காந்தி பிறந்த நாளாச்சே !''

என்றும் 16 தானா நடிகைக்கு ?

                   ' பேரன் பேத்தியைப் பார்த்த பிறகும் அந்த நடிகை ,இந்த வருஷம் தனக்கு பதினாறாவது பிறந்த நாள்தான் என்று அடிச்சுச் சொல்றாங்களே ,எப்படி ?''
            ''பிப்ரவரி 29லே பிறந்ததால் நாலு வருசத்துக்கு ஒருமுறைதானே பிறந்த நாள் வருது ?''


30 comments:

 1. 01. தன்னடக்கமானவரோ.....
  02. உத்தமனு பேரு வச்சது குத்தமா ?
  03. நல்லாப்பாருங்க ஜி 16 ஆ.... 61 ஆ,,,,
  04. கேட்க சகிச்சதா ?

  ReplyDelete
  Replies
  1. 1.அதனால்தான் ,தன் சாதனையை தானே சொல்லிக் கொள்கிறார் :)
   2.வாழாமல் போவதுதான் குற்றம் :)
   3.4.><16 சரிதானே :)
   4.பார்க்காமல் கேட்டால் சகிச்சது:)

   Delete
 2. வாசித்து ரசித்தேன் சகோதரா....

  ReplyDelete
  Replies
  1. சிரித்து ரசிக்க முடியவில்லை ,அப்படித்தானே :)

   Delete
 3. எ பெருமைய நானே சொல்வது... உண்மையச் சொல்றேன் சுய தம்பட்டம் எங்க பரம்பரைக்கே பிடிக்காது...!


  கர்மவீரர் அமரான அன்று கொண்டாட்டமா? உத்தம... வில்லன்?


  லீப் வருஷம்ன்னு பொய் சொல்லாதிங்க...‘16 வயதினிலே’ வெளியாகி இப்ப அவுங்க சின்ன பொன்னு பொறந்த நாளக் கொண்டாறுறாங்க...!


  கேக்க சகிக்கலன்னு சொன்னா ஒத்துக்கலாம்... 'பார்க்கச் சகிக்கலேன்ன ' அப்புறம் கெட்ட கோபம் வரும் ...மொதல்ல கண்ணாடி போடச் சொல்லுங்க...!


  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. பரம்பரைக்கேவா :)

   சிலர் அவரை அப்படியும் பார்க்கிறார்களே :)

   பேரன் பேத்தி பொறந்தாலும் மயிலுவை மறக்க முடியுமா :)

   தலவலிக்குத்தானே கண்ணாடி போடச் சொல்லுவாங்க :)

   Delete
 4. ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. உத்தமர் காந்தியைத் தானே :)

   Delete
 5. Replies
  1. குறையோ நிறையோ சொல்லச் சொல்லாமல் இப்படி எழுதிக் கொடுப்பவர் வி ஐ பி தான் :)

   Delete
 6. இதுதான் 16 வயதின் ரகசியமோ?

  ReplyDelete
  Replies
  1. பதினாறும் நிறையாத பருவ மங்கை என்றாலும் ரசிகர்கள் ஏற்றுத் தானே ஆகணும் :)

   Delete
 7. எண்ணத்தில் என்றும் பதினாறு ஆக இருப்பது தவறா, சங்கீதக் கச்சேரிக்குப் பார்க்கப் போறோமா கேட்கப் போறோமா.?பேசாமல் உத்தமன் என்றே பெயர் வைத்திருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. ரசிகர்கள் உள்ளத்திலும் பதினாறாகவே இருக்கத்தானே செய்கிறார்கள் :)
   லைவ் ரிலே என்று பெரிய ஸ்க்ரீனில் எக்ஸ்டீரீம் குளோசப் ஷாட்டில் காட்டுகிறார்களே:)
   அப்படியும் ஏற்கனவே படம் வந்து விட்டதே :)

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. பிப்ரவரி29 ஹிஹிஹி
  2016 பிப்ரவரி 29 லீப் ஆண்டு தான்
  16*4=64

  ReplyDelete
  Replies
  1. கணக்கிலே புலியா இருக்கீங்களே ,வாழ்த்துகள் Rmn ஜி :)

   Delete
 10. ஆம்பள வருமானததையும்.பொம்பள வயசையும் கேட்கக்கூடாதுன்னு ஒரு சொல்லு இருக்காம். அதன்படி நடிகையின் வயதை கேட்கக்கூடாதுங்க.....

  ReplyDelete
  Replies
  1. இப்போ யாரு கேட்டா ,அவங்கதானே சொல்றாங்க :)

   Delete
 11. ஓ... நிஜத்திலும் நடப்பதுதானே!

  உத்தமவில்லன் பெட்டிக்குள் சுருண்டு நாளாச்சே....!!

  இது நல்ல டெக்னிக்!!!

  கேட்கச் சகிக்கவில்லை என்று சொல்லணுமோ!

  ReplyDelete
  Replies
  1. நடப்பது தான் ,சரிதானா ஜீரணிக்க முடிகிறதா :)

   ஆனாலும் மீம்ஸ் எனிக்கும் பொருந்துமே :)

   கன்னத்திலே டொக்கு விழுந்த பிறகு இந்த டெக்னிக் கை கொடுக்குமா :)

   பார்த்துக் கொண்டே கேட்கச் சகிக்கலே என்று வேணும்னா சொல்லலாம் :)

   Delete
 12. Replies
  1. ஜோக்காளியின் லட்சியமும் அதுதான் :)

   Delete
 13. Replies
  1. இன்றைய வருகைக்கும் நன்றி )

   Delete
 14. \\அதை எழுதிக் கொடுத்ததே நான்தானே \\ அண்ணா ஒரு முறை மேடையில் கடுனாநிதிக்கு தங்க மோதிரம் போட்டாராம். கண்ணதாசன் எனக்கும்
  தங்க மோதிரம்வேண்டுமென்றாராம். நீயும் வாங்கிக் கொடு போட்டு விடுகிறேன் என்றாராம் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை ,ரெண்டு வாங்கி வா , ஒண்ணு போடுவேன்னு சொல்லாமல் போனாரே :)

   Delete
 15. ஹஹஹ நடிகைகள் மட்டுமல்ல ஜி எல்லா பெண்களுமே மனதளவில் என்றும் 16 ஆக இருப்பதையே விரும்புபவர்கள்....என்பது கீதா அடிக்கடிச் சொல்லிக் கொள்வது..தன்னை ஸ்வீட் 16 என்று..ஹஹஹ்

  உலக நாயகன், உத்தம நாயகனாய் , உத்தமவில்லன் கொடுத்தாலும் அதென்னவோ அது வில்லனாகவே ஆகிவிட்டது...

  ReplyDelete
  Replies
  1. பெண்கள் மட்டும்தானா :)

   வில்லன்னா வில்லன்தான் அதென்ன உத்தம வில்லன் :)

   Delete