10 August 2015

நடிகையின் பிறப்புரிமையா அது ?

----------------------------------------------------------------------------

கரெண்ட் பில் எப்படி குறையும் !

உடனே குப்பையில் எறியவேண்டியதை
நான்கு நாட்கள் கழித்து  தூக்கி  எறியவும் 
நமக்குத் தேவையாய் இருக்கிறது 'பிரிட்ஜ் '!


                                                 

 

குடிகாரன் பேச்சு காலில் விழுந்தாலே போச்சு :)                     

               ''இனிமேல் குடிக்க மாட்டேன்னு உன் கால்லே விழுந்து சொன்ன , புருஷனை மன்னிக்க முடியாதுன்னு ஏன் சொல்றே ?''

                      ''என் கொலுசைக் காணாமே!''


இலவச சினிமா இந்த தியேட்டரில் ?

           '' அடப் பாவி ,மயக்க மருந்து கொடுத்து  ஒரு மணி நேரமாச்சே, உனக்கு மயக்கம் வரலையா ?''
                  ''நர்ஸோட நீங்க இப்படி சில்மிஷம் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி வரும் ,டாக்டர் ?''
டிகையின் பிறப்புரிமையா அது ?
          ''அட பரவாயில்லையே,புருஷன் டைவர்ஸ் கேட்டாலும் அந்த நடிகை கொடுக்க முடியாது  சொல்றாங்களாமே ?''
                ''டைவர்ஸ் நீங்க என்ன கேட்கிறது ,நான்தான் பண்ணுவேன்னு சொல்றாங்களாம் !''


 1. பிரிட்ஜ் ற்கு இப்படியும் ஒரு பயன் இருக்கிறதா?
  1. உடனே வீச மனமுமின்றி,அடுத்த நாளே அதைப் புசிக்க மனமுமின்றி..பெரும்பாலான வீடுகளில் இப்படித்தான் பயன்படுத்துகிறார்கள் !

25 comments:

 1. 01. தியேட்டரில் இதுவுமா நடக்குது
  02. அதான் நாமதான் வள்ளல் பரம்பரையாச்சே நாமதான் கொடுக்கனும்
  03. ஆமாமா எதுக்கும் அவசரப் படக்கூடாதுதான்.

  ReplyDelete
  Replies
  1. 1.சினமா தியேட்டரில் மட்டும்தான் நடக்குமா,டாக்டர் ரிலாக்ஸ் பண்ணிக்க்கூடாதா :)
   2.அதனால்தானே மின் கட்டணம் ஏறிட்டே இருக்கு :)
   3.நடிகைக்கு எப்போ தோதோ அப்ப கிடைக்கும் :)

   Delete
 2. ஒவ்வொருத்தருக்கு ஒரு பிறப்புரிமை இருக்கிறது மாதிரி,..டைவர்ஸ்-ம் நடிகைகளுக்கும் பிறப்புரிமை யாச்சு போல...

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்,நமக்கென்ன இருக்கு,தாலி ஒண்ணைக் கட்டிட்டு இருக்கிறதையும் இழந்துட்டோமே :)

   Delete
 3. அனைத்தும் அருமை. தியேட்டர் நகைச்சுவை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் இந்த நினைப்பில் அறுத்தால் நோயாளி தேறுவானா:)

   Delete
 4. இன்னும் என்னென்ன காணாமல் போய் இருக்கோ...?

  ReplyDelete
  Replies
  1. தாலி மஞ்சக்கயிராய் இருப்பதால் தப்பித்தது:)

   Delete
 5. என்ன சத்தம் இந்த நேரம்...? கொலுசின் ஒலியா...? காலின் மிதியா...?


  மயக்க மருந்த எனக்கு கொஞ்சம் கொடுத்திட்டு... நர்சுக்கு கொஞ்ச...அதான் கொஞ்சுரதுக்கு கூடக் மருந்த கொடுத்திட்டா... எனக்கு எப்படி மயக்கம் வரும்...? நர்சுக்கு வாந்தி வருது... மொதல்ல அதப் பாருங்க டாக்டர்...!


  நடிகைய கல்யாணம் பண்ணிக்க நாலு வெயிட்டிங்காம்... அவங்கள்ல்ல ஒருத்தர செலக்சன் பண்ணிட்டு... இந்தப் பக்கம் வந்து அவுங்களே டைவர்ஸ் பண்ணுவேன்னு சுமூகமா சொல்றாங்களாம்...!


  இதுக்குத்தான் ரிப்பேர் ஆன 'பிரிட்ஜ் ' வீட்டல வைக்காதிங்கன்னு சொன்னேன்...! இப்ப பாருங்க கரெண்ட் பில் மட்டும் எகிறிகிட்டு இருக்கு...! வெறும் மோட்டார் மட்டும் ஓடிகிட்டு இருக்கு...?! பாக்கிறவங்க வீட்ல பிரிட்ஜ் இருக்குன்னு நினைக்கிறாங்க,,, அவுங்க கண்ணு வேற பட்டுடுச்சுன்னு நெனக்கிறேன்...!

  நன்றி.
  ReplyDelete
  Replies
  1. போதையில் இருக்கையில் மிதிக்கிற மாதிரி இல்லையாம் மிதக்கிற மாதிரி இருக்காம் :)
   வாந்திக்கு காரணம் :)
   நாலுக்கும் எத்தனை நாள் வாழ்வோ:)
   அதயும் ஆப் பண்ணி வச்சிக்க வேண்டியதுதானே :)

   Delete
 6. ஆஹா கொலுச அடிச்சிட்டாரா! :) அப்ப நிச்சயம் கடைக்குப் போயிருப்பார்!

  ReplyDelete
  Replies
  1. வீட்டுக்கு வரட்டும் ,பூஜை இருக்கு :)

   Delete
 7. ஹஹஹஹ் கொலுசு போச்சு.....பாட்டில் வந்துச்சு கதை...

  டைவர்ஸிலும் உரிமை கொண்டாட்டம் ஹஹஹ்ஹ்...

  ReplyDelete
  Replies
  1. நடிகையை டைவர்ஸ் செய்த கணவன் என்று தலைப்பு செய்தி வந்தாலே அவமானமாச்சே :)

   Delete
 8. தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... (waiting for tamilmanam.net) காரணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நம் தளத்தில் சரி செய்யலாம்... வாசகர்களுக்கு பதிவை வாசிக்க, கருத்துரை இட உதவும்...

  வழிமுறை : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html

  ReplyDelete
  Replies
  1. ஹையா ,தமிழ் மணம் சரியாகி விட்டதே :)

   Delete
 9. Replies
  1. கஷ்டப்பட்டு வாக்களித்ததற்கு நன்றி !இனி வாக்குரிமை உள்ளவர்கள் வரிசையாக வரலாம் :)

   Delete
 10. இலவச சினிமா சூப்பர்ஜி

  ReplyDelete
  Replies
  1. கிளைமாக்ஸ் என்னாச்சோ :)

   Delete
 11. அனைத்தும் அருமையான நகைச்சுவைகள்! வாழ்த்துக்கள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. அன்பான உங்கள் கருத்துக்கு நன்றி :)

   Delete
 12. * முதல் ஜோக் வறுமையின் நிறம் சிவப்புப் படத்தின் ஒரு விரல் கிருஷ்ணாராவை நினைவு படுத்துகிறது!

  ** இலவசக் காட்சி...!

  *** ..ஹா.ஹா....ஹா...

  **
  ** உண்மை..... உண்மை...

  ReplyDelete
  Replies
  1. ஒ வி கி ராவ் அந்த படத்தில் என்ன செய்தார் ,எனக்கு நினைவுக்கு வரவில்லை ,நீங்களே சொல்லலாமே :)

   Delete
  2. இரவில் நினைவுக்கு வந்து விட்டார் ஒ வி கி ராவ் .....தண்ணி அடிப்பதற்கு எந்த பொய்யையும் அவிழ்த்து விடுவார் ,அந்த கேரக்டர் தானே :)

   Delete