14 August 2015

இது மனைவியின் சந்தேகமா ,முன் எச்சரிக்கையா :)

                 
 உங்களுக்கும் மண்டையைப் பிய்ச்சிக்கத் தோணுதா :)          
                 ''என் பையனை அரைக் கிறுக்கன்னு  சொல்ற , நீ நாசமா போயிடுவே !''
                ''ஹிஹி ''
               ''சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கு ?''
                 ''முழுக் கிறுக்கன் யாரென்று சொன்னால் ,இன்னும்  எப்படி கோபம் வரும்னு நினைச்சேன்!''ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா?

          ''கர்நாடகாவிலே  எல்லா ஊர் பெயரும்  'ஹள்ளி'ன்னுதான்  முடியுமோ ?''
            ''ஊரை மட்டுமல்ல ,நம்ம ஊரு அல்லி ராணியைக் கூட   , அவங்க ஹள்ளி ராணின்னு தான் சொல்வாங்களோ ?''

இது மனைவியின் சந்தேகமா ,முன் எச்சரிக்கையா ?

                 ''வேலைக்காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
           ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தவளை..நான்னு நினைச்சு   நீங்க  கட்டிப் பிடிச்சதை  மறந்துட்டீங்களா ?''


முரண்பாடுகள் நிறைந்தது சினிமா உலகம் !

எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாட்டியவர்கள் 
சிலநாள் அழகு ஹீரோயின்களாக   ...
இயற்கையாகவே அழகாய் இருப்பவர்கள் 
காலமெல்லாம் எக்ஸ்ட்ரா நடிகைகளாக ...

28 comments:

 1. 01. மகனை சொன்னதுக்கு அப்பனையே சொல்லியிருக்கலாம்
  02. ஜியெம்பி ஐயாவை கேளுங்களேன்
  03. அவ மறந்து போயி புருஷனு நினைச்சுடாமல் இருந்தால் சரிதான்
  04. 100க்கு100 உண்மைதான் ஜி

  ReplyDelete
  Replies
  1. 1.அப்பனைத்தான் முழுக் கிறுக்கன் என்றே சொல்லி விட்டாரே :)
   2.ஜி எம் பி ஸார்,நோட் த பாயின்ட்:)
   3.அது அடைந்தால் புருஷன் பாடு திண்டாட்டம்தான் :)
   4.அபுதாபியில் சினமா உலகம் உண்டா :)

   Delete
 2. “நீ என்ன மெண்டலாப்பான்னு கேட்டாலும்... எனக்கு கோபமே வராது...உண்மை எங்கிருந்து வந்தாலும் ஒத்துக்கனுமுண்ணு என்ன பெத்த அப்பா சொல்லிட்டு போயிட்டாரு...என் பையனை அரைக் கிறுக்கன்னு சொல்ற ... இன்னும் கொஞ்ச நாள்ல்ல அவன முழுசா புரிஞ்சுக்கவா... அப்ப சொல்லுவா... அப்பத்தான் நல்ல நா சிரிப்பேன்... சிரித்து வாழ வேண்டும்...!“


  “ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதிங்க...டி.வி.யில ஓடிக்கிட்டு இருக்கிற பாட்டப் பாருங்க...அவங்க ஹள்ளி ராணின்னு தான் சொல்வாங்களோன்னுட்டு என்ன சும்மா சும்மா கிள்ளற வேலையை இத்தோட விடுங்க...!''


  “அத மறக்க முடியுமா என்ன...? ஏதோ தெரியாம ஒரு சின்ன தப்பு நடந்திடுச்சு...! இதுக்கு போயி அலட்டிக்கலாமா...? ஆமா... இதுக்காகவா...வேலைக்காரிக்கு என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு வர்றப்ப நீ... அவள நான்தான் நெனச்சா... கட்டிப் பிடிச்சு முத்தம் எதுக்கு கொடுத்தாய்...? நா பாத்தேன்...! இதெல்லாம் நீ செய்யக் கூடாது... எனக்கு கெட்ட கோபம் வரும்... வேலைக்காரி என்னப்பத்தி என்ன நினப்பா...?


  “திரைப்படம் என்றாலே எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் இருக்கத்தானே செய்யுங்கிறாரு...இதையெல்லாம் திரைச்சீலை போட்டு மறைக்க முடியாது... இயற்கையாகவே அழகாய் இருக்கிற என்ன எங்கே மதிக்கிறாரு...இருங்க நானும் எக்ஸ்ட்ரா நடிகரோட சேர்ந்து... சேர்ந்து... சொல்ல விடுங்க... சேர்ந்து நடிக்கப் போறேன்...!“

  த.ம.2.


  ReplyDelete
  Replies
  1. மெண்டல் என்றாலும் , சிரித்து வாழ வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் வாழும் அவர் வாழ்க அவர் குளம் வாழ்க :)

   ஹள்ளி ராணிகளும் கோலிவுட்டில் கலக்கத்தானே செய்கிறார்கள் :)

   அடச்சே ,அதுவும் நடந்துடுச்சா :)

   நடித்தாலும் சரி ,..................................சரி ,ஆளவிடுங்க :)

   Delete
 3. Replies
  1. ஜீன்ஸ் பேன்ட்உங்களுக்கு பிடித்ததா :)

   Delete
 4. அப்ப, அப்பா முழு கிறுக்கா!!!!!?

  ReplyDelete
  Replies
  1. அப்ப மட்டுமில்லே எப்பவுமே :)

   Delete
 5. நான்கையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஜாக்கி ஷான் போல் மண்டையை பிய்ச்சுக்க தோணலையா:)

   Delete
 6. அடடா..ஜீன்ஸ் போட்ட வேலைக்காரியா.....ஆ....ஆ.... நா......

  ReplyDelete
  Replies
  1. அடடா மயங்கி விழுந்த மாதிரி இருக்கே ,இருங்க சோடா வாங்கிட்டு வாறேன்:)

   Delete
 7. வணக்கம்,
  முழு கிறுக்கு அப்பன,,,,,,,,,
  அனைத்தும் அருமை ஜீ,,,,

  ReplyDelete
  Replies
  1. அப்பன நீங்க பார்த்ததுண்டா :)

   Delete
 8. அரைக் கிறுக்கன் நகைச்சுவையை அரையாக அல்ல முழுமையாக ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அரைகுறையாக ரசிப்பீர்களோ என்கிற சந்தேகம் தீர்ந்தது ,நன்றி :)

   Delete
 9. கன்னடத்தில் ஹள்ளி என்றால் கிராமம்
  ஜீன்ஸ்போட்ட வேளைக்காரி . ஒரு நிமிஷம் ஜீன்ஸ் போட்ட வேலைக் காரனும் வீட்டம்மாவும் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அரைக் கிறுக்கன் என்றதும் அறையாமல் விட்டாரே.

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊர்லே பட்டின்னு சொல்ற மாதிரியா :)
   முடியலே ,தாய்க்குலத்தின் மீது தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது :)
   அப்படி செய்திருந்தால் முழுக் கிறுக்கன் என்று சொல்லியிருப்பானா :)

   Delete
 10. அருமையான ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஹள்ளி ராணி உங்களுக்கு பிடித்ததா :)

   Delete
 11. முழுக் கிறுக்கு அந்த அரைக்கிறுக்கைப் பெற்றதா?

  ஜீன்ஸ் நல்ல சமயோசிதம்தான்.

  எக்ஸ்ட்ரா தத்துவம் சூப்பர் ஜீ..


  God Bless You

  ReplyDelete
  Replies
  1. பாதிக்கு பாதி லாபம்தானே :)

   இல்லைன்னா,முதலுக்கே மோசமாயிடும் போலிருக்கே :)

   நான் எதுவுமே எக்ஸ்ட்ராவா சொல்லலே :)

   Delete
 12. வணக்கம்
  ஜி
  அந்த முழுக் கிறுக்கன் யார் ஜி.. அதையும் சொல்லியிருக்கலாமே.....
  கர்நாடாகவின் சிறப்பை அறிந்தேன்... ...
  மற்றவைகளை இரசித்தேன் த.ம 11

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அது நான் சொல்லியா தெரியணும்:)

   Delete
 13. Replies
  1. நீங்கள் ஹள்ளி ராணியைப் பார்த்து இருக்கிறீர்களா :)

   Delete
 14. உங்கள் தளம் வந்து இப்படித் தனியே சிரித்துக் கொண்டிருக்கும் எங்களையும் அப்படி நினைத்துவிடப் போகிறார்கள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. எந்த அரை மெண்டல் அப்படி நினைக்கப் போறான் :)

   Delete