16 August 2015

நடிகைக்கு கோவில் என்றால் சிலை எப்படி:)

---------------------------------------------------------------------------------

 இவன் காதுலே தீயை வைக்க :)                        
                 ''தீக்குச்சி கேட்டீங்க ,லைட்டரே தந்தாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
                        ''காது குடைய லைட்டர் எதுக்கு ?''
                                     
                                        Image result for சிகரெட் லைட்டர்

அப்பன்காரன் இப்படியா பேர் எடுக்கிறது ?
             
           ''நிலாச் சோறுன்னா அம்மா ஞாபகம் வருது சரி ,அப்பா ஞாபகம் எப்போ வரும் ?''

            ''தண்டச் சோறுன்னா !''
நடிகைக்கு கோவில் என்றால் சிலை எப்படி ? 
               
              ''அடபரவாயில்லையே,அந்த நடிகை தனக்கு கோவில் கட்டவே 

கூடாதுன்னு ரசிகர்களை தடுத்து விட்டாராமே !''

     

       ''அடநீங்கவேற,நீச்சல்உடையிலேஇருக்கிறமாதிரி

சிலைன்னு சொன்னதும் அவங்களுக்கு பிடிக்கலையாம் !''
கணவர்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது !

பலகோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் எனக்குப் பொறாமை இல்லை ...
என் மனைவியை பயமுறுத்தும் வித்தையை அது  கற்று வைத்திருக்கிறதே ! 1. Chokkan SubramanianSat Aug 16, 07:20:00 p.m.
  அப்பாக்கள் மகனை செல்லமாக அழைப்பதை எல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ள கூடாது.

  எப்படியெல்லாம் மனைவியை பயமுறுத்த வேண்டியதாக இருக்கிறது.


  1. நீங்கதான் நல்ல தந்தை ,நல்ல கணவனும்கூட !

37 comments:

 1. ஒரு வேளை ஈர சேலையில் இருப்பதுபோல் இருந்தால் பிடிக்குமோ?
  ஆனால் தண்ணிர் சொட்ட வேண்டும் அப்படித்தானே?
  த ம 2
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் எண்ணத்தை அப்படியே கல்லில் கொண்டு வரும் திறமையுடைய ஸ்தபதி யாரென்று சொல்லுங்கள் ஜி :)

   Delete
 2. ஹா.... ஹா... ஹா.... என்று ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நம்பி ஜி மாதிரி கற்பனை செய்து பார்த்து ரசிக்கலை,அப்படித்தானே :)

   Delete
 3. நல்லா வைச்சீங்க தீயை...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. இன்று நீங்க தீயாய் போட்டிருக்கும் வலைப்பதிவர் திருவிழா பதிவை விடவா இது பெரிய தீ :)

   Delete
 4. புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

  http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் ,விட்ஜெட்டை உடனே என் தளத்தில் போட்டாச்சு,ஜி :)

   Delete
 5. Replies
  1. கரப்பான், உண்மை.. அதிசயம் தானே :)

   Delete
 6. லைட்டா எது கொடுத்தாலும் எனக்கு பிடிக்காது....தீயா வேலை செய்யனும் தீக்குச்சி...! ஆஹா மறந்து போச்சே...காதல்லயா... காதுலையா...?


  சும்மாவே வீட்டல ஒக்காந்திக்கிட்டு தண்டச் சோறு அப்பா திங்கிறான்னு சும்மா சும்மா சொல்லிக் காட்டதம்மா...! எனக்கு அப்பா பாவமா இருக்கு...! அப்பாவையே அப்படி சொல்றியே... என்ன என்னம்மா சொல்லுவா?


  நீச்சல்உடையிலேஇருக்கிறமாதிரி சிலைன்னு சொன்னா அவங்களுக்கு எப்படிப் பிடிக்கும்... உடைன்னாலே அவுங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா...?


  “கரப்பான்பூச்சிய கண்டு மனைவி பயப்புடுறது இருக்கட்டும்...நீங்க மனைவியப் பாத்த உடனேயே ஏ பயப்படுறீங்க...? ஒங்க மனைவி அப்படியா தெரியிறாங்க...! எனக்கென்னமோ அப்படி தெரியல...! நீங்களே பாருங்க ஒங்க மனைவிய பாக்கிறப்ப எனக்கு பயமே இல்லை...!”
  “ஆமா... நீ யாரு...?”


  த.ம.6.
  ReplyDelete
  Replies
  1. காதல் தீ பத்திகிச்சுன்னா அணைகிறது கஷ்டம்தான் :)

   தாய் பிள்ளையை என்றைக்கும் தண்டச்சோறுன்னு சொல்லாதே :)

   அம்மன் சிலை வைக்கலே ,அதுக்காக பயபிள்ளைங்க அம்மண சிலையையா வைப்பாங்க:)

   உங்க மனைவியைப் பார்த்தா பயம் வருதா :)

   Delete
 7. அனைத்தும் அருமை. கோயில் நகைச்சுவை மிக மிக.

  ReplyDelete
  Replies
  1. குஷ்பாம்பிகையை தரிசிக்கும் பேறு நமக்கு கிடைக்காமல் போச்சே :)

   Delete
 8. ரசிகர்கள் விருப்பப்படிதானே சிலை வடிக்க முடியும்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ரசிகர்கள் கலா ரசனை அதிகம் உள்ளவர்கள் ஆச்சே :)

   Delete
 9. சில கோவில் சிலைகளே நடிகைகள் மாதிரி இருக்கின்றதோ.? தண்டச் சோறு என்றால் தந்தை நினைவு வரக்கூடாது. பின் தந்தைகள் முதியோர் இல்லத்தில்தான் இருக்கோணம்

  ReplyDelete
  Replies
  1. இப்படி சொன்னா சாமி கண்ணை வந்து குத்திப் பிடாதோ :)
   உழைச்சு உழைச்சு ஓடா போன தந்தையை எப்படி தண்டச்சோறுன்னு சொல்ல முடியும் :)

   Delete
 10. வணக்கம்
  ஜி
  அனைத்தும் மிக அருமை இரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி த.ம9

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சிலைகளை ரசித்து பார்த்து இருக்கிறீர்களா :)

   Delete
 11. எல்லாமே சிக்சர்! சூப்பர் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஃபோர் என்று சொல்லாமல் சிக்ஸர் என்று சொன்ன உங்களுக்கு நன்றி :)

   Delete
 12. 01. விஞ்ஞானம் வளரும்போது அதற்க்கேற்றாப்போல் நடந்து ‘’கொல்ல’’வேண்டும் இது தெரியாதா ?
  02. பாச்சோறுனா ? என்ன ஞாபகம் வரும் ?
  03. அப்பவாவது முகத்தை பார்கக்கட்டும்னு நினைக்கிறது தப்பில்லையே...
  04. உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. லைட்டரால் என்ன செய்துக்க முடியுமோ அதை செய்துக்க வேண்டியதுதான் :)
   பா எழுதி சோறு சாப்பிடும் கவிஞர் ஞாபகம் வருவாரா :)
   நிஜத்தில் பார்ப்பதை தானே சிலையிலும் பார்க்க நினைக்கிறது,தப்பா :)
   அதுகிட்டே இருந்து வித்தையை மட்டும் கற்றுக்க முடியாதா :)

   Delete
 13. Replies
  1. முதல் தலைப்பு அருமைதானே :)

   Delete
 14. எல்லாமே சூப்பர்!! அதிலும் நிலாச்சோறு, தண்டச்சோறு.....கலக்கிடீங்க பாஸ்:)))

  ReplyDelete
  Replies
  1. வயசுக்கு வந்த பசங்களை திட்டினால் இப்படித்தான் வாங்கிகட்டிக்க வேண்டி வரும் :)

   Delete
 15. அதானே!லைட்டர்,தீக்குச்சி போல் ஆகுமா?ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. அதுக்குத்தானே காதுலே தீயை வச்சுக்கச் சொன்னேன் :)

   Delete
 16. மொய் வச்சாச்சுங்க!

  ReplyDelete
  Replies
  1. இதையுமா மைக் போட்டு சொல்றது :)

   Delete
 17. எல்லாமே சூப்பர் சகோ ! நன்றாக சிரிச்சேன்...! வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. உங்க நவீன குறள்போல சூப்பராய்தானே இருக்கும் ,நாம ஒரே டெம்பிளேட்டை வைத்துக் கொண்டிருக்கிறோமே :)

   Delete
 18. ஹஹஹ்ஹஹ்ஹ் அனைத்திற்கும்....

  ReplyDelete
  Replies
  1. gmb அய்யாவின் கருத்தையும் படித்து சிரித்தீர்கள்தானே:)

   Delete