17 August 2015

நியூஸ் ரீடர்னா அழகாய் இருக்கணுமா :)

 -----------------------------------------------------------------------

ஸ்ரீ தேவியை தெரியும் ,லேவா தேவி ?             

             ''பெண் சகவாசமே வேண்டாம்னு சொல்ற உங்க பையன் ,பரம்பரைத் தொழிலும்  வேண்டாம்னு சொல்றானா ,என்ன தொழில் ?''

                      ''லேவாதேவி  தொழில்தான் !''
Image result for ஸ்ரீ தேவி
                                               
நியூஸ் ரீடர்னா அழகாய் இருக்கணுமா  :)
                ''நம்ம டிவி நேயர் ஒருவர் ,நியூஸ் ரீடரை உடனே  மாற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறாரா ,ஏன் ?''
                 '' விஷுவல் எதுவும் இல்லைன்னாலும் நியூஸ் ரீடராவது பார்க்கிற மாதிரி இருக்க வேண்டாமான்னு கேட்டு இருக்கார் !''வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு !

               ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
              ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

'குடி'மகன்களுக்குப் பிடித்த ஆத்திச்சூடி !

அரசுப் பேருந்துகளில் திருக்குறளை 
எழுதியிருப்பதைப் போல ...
டாஸ்மாக் கடைகளில் ....
ஊக்க'மது 'கைவிடேல் என 
எழுதப்பட்டாலும் வியப்பதற்கில்லை !

  1. வலிப் போக்கன்Sun Aug 17, 12:46:00 ஆமாமா...செய்தியா..கேட்கிறோம்..செய்தி ரீடரைத்தானே கவனிக்கிறோம்.
   நாம பரவாயில்லை ,உடையையும் ,நகையையும் மட்டுமே பார்ப்பவர்களை விட !


27 comments:

 1. கனவுக் கன்னி ‘16 வயதினிலே’ ஸ்ரீ தேவியை தெரியும் , லேவா தேவி.... ஓ...லேவாதேவி தொழில்தான் ? இதுலயாவது பையன் சொல்றத கேட்க வேண்டியதுதானே...?


  விஷுவல் கம்னிகேசன்னா இதுதானா...? விஷால் மாதரி அழகாய்ச் சொன்னீங்க போங்க...!


  கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமான்னா ...வயசுக் கோளாறுன்னும் சொல்லலாம்... இல்லாட்டி வயசுக்கு வந்ததுனால கோளாறுன்னும் சொல்லாம்...!


  ‘ஊக்கமா அது... கைவிடு! இல்லாட்டி...ஊக்க'மது 'கைவிடேல்’ ன்னா...நீடு துயில்தான்...கட்டையில போக வேண்டியதுதான்...!


  த.ம.2
  ReplyDelete
  Replies
  1. தொழிலின் பெயரில் கூட பெண் பெயர் வரக் கூடாது என்று நினைக்கும் அளவிற்கு அவனுக்கு என்ன நடந்ததோ :)

   நடிகர் சங்க விவகாரத்தில் கலக்கிக் கொண்டிருந்தாரே ,அந்த விஷாலா :)

   டூ இன் ஒன் கோளாறா :)

   நீடு துயிலுக்கு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறாரோ :)

   Delete
 2. ஜி! எனக்கு தமிழில் பிடித்த நடிகைகள்..லக்ஷ்மி, ஸ்ரீ ப்ரியா. ஆம்! ஸ்ரீ தேவி இல்லை.
  லக்ஷ்மியின் நடிப்பு பிரமாதம்---அதுவும், "சில நேரங்களில் சில மிருகங்கள்".படத்தில் best!

  அதே மாதிரி நான் சொல்வது அப்போ உள்ள ஸ்ரீ ப்ரியாவை;
  இளமை ஊஞ்சலாடுகிறது டைம்-எங்களுக்கு கண்ணாலம் ஆகாத டைம். லஷ்மி ஸ்ரீ பிரியா இருவருக்கும் நடிப்பில் நல்ல போட்டி (அவன், அவள், அது).

  நான் சொல்வது இப்போ உள்ள ஸ்ரீ ப்ரியாவை அல்ல.
  ஒரு முறை இந்தியா வந்த போது, தொலைக்காட்சியில் "சின்ன பீப்பா பெரியா பீப்பா" என்ற சீரியலில் சில காட்சிகள் பார்த்து பயந்து விட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்க ஏஜ் குருப்புக்கு லக்ஷ்மி சீனியர் நடிகையாச்சே ..ஸ்ரீ பிரியா ,ஓடி விளையாடு தாத்தா என்று கிறங்கடிததை மறக்க முடியுமா ?

   நானும் ,அதில் பீப்பா இல்லே ,ரெண்டு பீப்பா கண்டு அரண்டு போனேன் :)

   Delete
  2. சீனியரா இருந்தா ஜொள்ளு விடக்கூடாதா? நான் என்ன கல்யாணமா பண்ணிக்கணும் என்று சொன்னேன்?
   நடிப்பில் best; என்ன குரல்; என்ன body language! மிடில் கிளாஸ் அழகு!

   சில நேரங்களில் சில மனிதர்கள்--என்ன நடிப்பு!

   Delete
  3. கரெக்ட் ,ஜூலி உருவம் இன்னும் கண்ணிலேயே நிற்கிறதே :)

   பழம்பெரும் நடிகை கருப்பு சிலுக்கு டி ஆர் ராஜகுமாரியைப் பார்த்து கூட ஜொள்ளு விடலாம் ,வயசா முக்கியம் :)

   Delete
 3. பெயரை மாற்றித் தொழில் செய்ய வேண்டியதுதானே?

  நல்ல கோரிக்கை..

  அடப்பாவிப் பொண்ணே....

  அவன் அதை ஊக்க மாது கைவிடேல் என்று படித்து விட்டால்? :)

  ReplyDelete
  Replies
  1. அதானே ,பைனான்ஸ் கம்பெனின்னு பெருமையாய் சொல்லிக்க வேண்டியதுதானே:)

   கோரிக்கை நிறைவேறும்வரை செய்தியை பார்க்காமல் இருக்கட்டும் :)

   பிள்ளை வரம் இவ்வளவு சீக்கிரமா :)

   இவன் விடலேன்னா, வீட்டுக்கார அம்மா கை விட்டுட்டு போயிடுவாங்க :)

   Delete
 4. Replies
  1. லேவாதேவி நம்ம ஊர் (சொல்)கிடையாது ,அப்படித்தானே :)

   Delete
 5. Replies
  1. அதான் பிரம்மச்சாரி ஆயிட்டார் :)

   Delete
 6. ஊக்கமது கைவிடேல் சிறந்த நகைச்சுவை.

  ReplyDelete
  Replies
  1. ஔவையார் இதை அறிந்தால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார் :)

   Delete
 7. 01. எவ அவ ?
  02. ஆமாமா நகையைவும், நட்டையும் கவனிக்கிறவங்கதான் நிறையபேர்...
  03. டாக்டர் நகைச்சுவையாளரா இருப்பாரோ ? இந்த நேரத்திலும் இந்த மா3யா ?
  04. அப்படி எழுதிப்போட்டால் குடி மக்(கு)கள் ‘’கை’’ விட்டுருவாங்களா ?

  ReplyDelete
  Replies
  1. 1.பெரிய லௌடா தேவி :)
   2.மெஜாரிட்டி அவங்கதானா :)
   3.குடும்ப ஹாஸ்ய டாக்டராய் இருப்பாரோ :)
   4.இன்னும் ஊக்கமா குடிப்பாங்க :)

   Delete
 8. Replies
  1. தமிழ் மணம் மக்கர் பண்ணிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பின் வந்ததற்கு நன்றி :)

   Delete
 9. எல்லாமே சூப்பர் ஜோக்ஸ்! வயசுக்கோளாறும் லேவாதேவியும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது!

  ReplyDelete
  Replies
  1. இரண்டுமே தேவை இல்லாதவை என்றாலும் சிரித்ததற்கு நன்றி :)

   Delete
 10. ஊக்கமது கைவிடேல்... எழுதினாலும் எழுதுவாங்க! :(

  ReplyDelete
  Replies
  1. என்னதான் எழுதினாலும் நீங்களும் நானும் அங்கே போகவா போகிறோம் :)

   Delete
 11. கேக்கற செய்தி நல்லா இல்லாட்டாலும் பாக்கரதுக்கு நல்லா இருக்கத் தாவலே?

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக ,மோசமான செய்தி சொல்றவங்க பார்க்கவும் மோசமா இருக்கணும்னு அர்த்தமில்லே :)

   Delete
 12. ஊக்க மது கைவிடேல்...ஹ்ஹ்ஹஹஹ் செம வார்த்தை ஆடல்..ஜி

  ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆடலுக்கும் போதைக்கும் சம்பந்தமில்லை :)

   Delete