21 August 2015

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

கணவன் கையாலே பாஸ்ட் புட் சாப்பிட ஆசை :)

                     ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவியே ,இப்ப எதுக்கு வரச் சொல்றே ?''
                   ''சமையல் கலை நிபுணர் வந்து பாஸ்ட் புட் ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறார்,நீங்க தெரிஞ்சுக்க வேணாமா ?''

இவருக்கு திட்டு வாங்கிறதே பொழப்பாப் போச்சு!


             ''ஏண்டா ,கிடைச்ச கண்டக்டர் வேலையே ராஜினாமா பண்ணிட்டே ?''

              
               ''பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம போனா வெளியே நிற்கிறவங்க திட்டுறாங்க 

,எல்லா ஸ்டாப்பிலும்  நிறுத்தினா உள்ளே இருக்கிறவங்க திட்டுறாங்களே !"

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

          ''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி  இருக்கீங்க  ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
           ''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் !

கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
அது அடைய வேண்டிய உயரத்தை 
வெங்காயம் தொட்டுவிட்டதாலா ?


 1. பஸ், ஏரோப்ளேன் , ராக்கெட் செம காம்பினேசன் பாஸ்! ஓட்டிகள் பாடு படு திண்டாட்டமா இருக்கே!
  ReplyDelete

  Replies


  1. அருமையான கண்டுபிடிப்போட கமெண்ட் போட்டு கிளப்பிட்டீங்க ,நன்றி !26 comments:

 1. சமையல் கலை நிபுணர் வந்து பாஸ்ட் புட் ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறாருன்னு சொல்லி இன்னைக்கு அவசரமா கூட்டிட்டு வந்திட்டா... இன்னக்கி எனக்கு பாஸ்டிங்தானா...? நிபுனர் யாருன்னு ... நீ என்ன பத்தி அப்புறம்தான் தெரிஞ்சிக்குவா...?


  இதுக்காகவா ராஜினாமா பண்ணிட்டே...இப்பல்லாம் கண்டக்டர் வேலையோட மதிப்பு தெரியாம இருக்கியேப்பா... கோபப்படாதப்பா... ஆறு,,,,ஆறு...மனமே ஆறு! பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம கொஞ்சம் தள்ளி நிறுத்த வேண்டியதுதானே... நிக்கும்... ஆனா நிக்காது...ன்னு சொல்லவேண்டியதுதானே!


  பெண்டாட்டி நடிகையாக ஆசைப்படுறாங்க...மீண்டும் அந்த நடிகையைப் பைலட் சீட்டிலே உட்கார வச்சு சஸ்பென்ட் ஆனாலும் ஆவேன தவிர ஒன்ன ஒக்கார வைக்கமாட்டேன்...நா தெரியாமத்தான் கேக்கிறேன் நடிகையும் நீயும் ஒன்னா... நீ ஒத்துக்கிட்டா நாமெல்லாம் ஒன்னாயிடலாமா..என்னா சொல்றாய்?


  கவுன்ட் டௌன்னாயிடுச்சு...இனி எங்கே மேலே போறது...பாழாப் போறது...! ஆமா கவுன்ட்ட(வுன்) மணி என்னாச்சு...!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே சமையலில் நளன்தானா அவர் :)

   அதானே ,இவ்வளவு ரோசப் படலாமா:)

   விமானம் மட்டுமா மேலே போவுது ,மானமும்தான் :)

   கவுண்ட மணி நகைச்சுவைக்கு கவுண்ட் டவுனே கிடையாதே :)

   Delete
 2. 01. பொண்டாட்டி காரியவாதிதான்
  02. இவண் ஒழுங்கா படிச்சு இருந்தால் கண் டாக்டர் ஆகியிருக்கலாம்.
  03. ஆகமொத்தம் ஆப்பு இவணுக்குதானா...
  04. ஆனந்தக்கண்ணீரா.....

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் அவருக்கு நல்ல காரியம் ஒன்றைப் பண்ணி விட வேண்டியதுதான் :)
   கண்டக்டர் வேலைக்கு யாரு போறது :)
   இடத்தைக் கொடுத்தால் வாங்குபடத் தானே வேணும் :)
   எப்படி வரும் :)

   Delete
 3. சிரிக்க வைத்ததற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நானல்லவா நன்றி சொல்லணும் .பல' நரசிம்ம ராவ் 'கள் சிரிக்க மறுக்கிறார்களே :)

   Delete
 4. 1) ஆ! இதுக்கு மட்டும் புருஷன் வேணும்!!

  2) கண்டக்டருக்கு எத்தனை பக்கம் இடி!!

  3) சபாஷ்... சரியான போட்டி!!

  4) வெங்காய விலை இன்றும் ஏறுமுகம்தான்!!

  ReplyDelete
  Replies
  1. உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது எல்லாம் மலையேறி போயாச்சு :)

   சுகமான இடிகளும் இருக்கத்தானே செய்கின்றன :)

   கணவன் இடத்தை விட்டுத் தர முடியுமா :)

   இன்றைய தலைப்பு செய்தியே இதுதானே :)

   Delete
 5. Replies
  1. வெங்காய விலை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் வந்தாலே கொடி கட்டி பறப்பதை ரசிக்க முடியுமா :)

   Delete
 6. லேடீஸ் கிளப் கூட்டத்தில் கணவர்களின் எண்ணிக்கையேஅதிகமாக இருக்கும் பஸ்ஸை நிறுத்துவது கண்டக்டரா ட்ரைவரா.?பெண்டாட்டிக்கு எல்லாம் நடிகை அந்தஸ்து கிடைக்குமா.? ராக்கெட்டில் ஃப்யூஎல்லுக்குப் பதில் வெங்காயச்சாறு நிரப்பவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. எப்பவுமேவா :)
   கண்டக்டர் ஊதினால்தானே நிற்கும் ஓடும் :)
   அதுக்கும் மேலே இல்லே கொடுக்கணும் :)
   நாஸா உங்க கோரிக்கையை பரிசீலிக்குமா :)

   Delete
 7. லேடீஸ் கிளப் வருகைக்கு கணவனை அழைக்கும் நகைச்சுவை அருமை.

  ReplyDelete
  Replies
  1. காரணம் இல்லாமல் அழைப்பார்களா:)

   Delete
 8. லேடிஸ் கிளப் சூப்பர்!
  மற்றவையும் ரசிக்கும் படியாக வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. எத்தனை நாள்தான் வெளியே வாங்கி சாப்பிடுவது:)

   Delete
 9. லேடிஸ் க்ளப் ஹஹஹஹஹ்

  பைலட்டாஆஅ..ஹஹ்ஹ

  ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. லேடிஸ் கிளப்பில் மேஜிக் ஷோ என்றாலும் பரவாயில்லை ,போகலாம் :)

   Delete
 10. Replies
  1. பைலட் படும் பாடு சூப்பரா :)

   Delete
 11. அதானே!நளபகத்தில நிபுணர் ஆக வேண்டாமா?
  அருமை

  ReplyDelete
  Replies
  1. நிபுணர் வேற ஆகணுமா :)

   Delete
 12. சூப்பர் அண்ணே
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. பாஸ்ட் புட் தானே :)

   Delete
 13. அதுசரி... என்ன புட்டா இருந்தாலும் நீதான் செய்யணுமின்னு அம்மணி தீர்மானம் வச்சிருக்கு போல...
  அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. புட் செய்தாலும் புட்டு செய்தாலும் அய்யாதான் செய்யணும் போலிருக்கு :)

   Delete