24 August 2015

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,இதனால் தானே:)

இவர்  மனோதத்துவ டாக்டர்  ஆச்சே :)             


                 ''நர்ஸிங் படிக்காத அழகான பெண் வேலைக்கு தேவைன்னு எதுக்கு டாக்டர் கேட்கிறீங்க ?''

                   ''பீஸ் வசூலிக்கத்தான்.,,,நான் கேட்டா  நூறு ரூபாய் தரக் கூட அழுவுறாங்களே!''


டேட்டிங் காதல் எல்லாம் இப்படித்தான் புட்டுக்குமோ ?

               ''உனக்கு அறிவு இருக்கா?காதலனை நம்பி அவன் பெயரை பச்சைக் குத்திகிட்டியே 

...இப்போ விட்டுட்டுப் போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
      
         ''அதே பெயருள்ள வரனைப் பாருங்க ,கல்யாணம் கட்டிக்கிறேன் !''இந்த குணம் புருஷ லட்சணம் ஆகுமா ?
'              'என்  புருஷனை மாதிரி ஒரு அல்பத்தை பார்த்ததே இல்லை...செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு சொல்றார்டி !''
''ஒண்ணாம் தேதி வரணுமாமா ?''

''இல்லே ,கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''


சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,இதனால் தானே?

வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
காரணம் என்னவென்றால் ...
தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT ! 
 1. ஸ்ரீராம்.Sun Aug 24, 08:23:00 a.m.
  1. ஹா ஹா ஹா என்ன ஒரு சுலபமான தீர்வு!

  2. ஹா ஹா ஹா

  3. ம்ம்ம்ம்... என்ன சொல்ல!


  1. 1.படிச்ச புள்ள .ஈசியா தீர்வு கண்டிடுச்சு !

   2.நாம எதுக்கும் செருப்பைக் கழட்டாம இருக்கிறது நல்லது !

   3.மூளையினால் வேலை செய்பவனே உலகை ஆளுறான்னு சொல்லலாமே ?
  2. Mythily kasthuri renganSun Aug 24, 05:24:00 p.m.
   ஹலோ பாஸ் அந்த பொண்ணு ஏன் உங்க செருப்பை எடுக்கபோகுது:) அண்ணி செருப்பு மேல ஒரு கண்ணை வையுங்க :)
  3. ஓசின்னா எனக்கு ஒண்ணு ,என் பெண்டாட்டிக்கு ஒண்ணு அலையுற ஆளாச்சே அவர் ?

19 comments:

 1. ஏன், நர்சிங் படிச்சிருந்தா என்ன குறை?

  நல்ல டீலிங்!

  நல்ல பாலிஸி! சமீபத்தில் கோவில் சென்றிருந்தபோது என் புதுச்செருப்பை அடித்து விட்டார்கள்!

  ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. குறையொன்றும் இல்லை டாக்டருக்கு கல்லா நிறைய அழகு ஒன்றே போதும்னு நினைக்கிறார் :)

   சிக்கப் போற ஏமாளி யாரோ :)

   அவர்கள் கோவிலில் கும்பிட்டுதான் என்ன பலன் :)

   தேகத்தைக் காட்டி , இன்னும் நிறைய சம்பாதிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் ,அப்படித்தானே :)

   Delete
 2. டாக்டருக்குப் படிக்காத அவரே அழகா இருக்கிறப்ப... நர்ஸிங் படிக்காத அழகான பெண் வேலைக்குத் தேவைன்னு கேட்கிறதில்ல தப்பு ஒண்ணும் இல்லையே!


  இது பச்சைத் துரோகம் இல்லையா...?


  கல்யாணத்துக்குத்தான் ஜோடிகள் விதவிதமா வரும்.... பொறுக்கி... எடுக்கலாம்...புது செருப்பு கடிக்குமுன்னு தெரியுமுல்ல...! உன் பொன்னான கால்கள் புண்ணாகலாமா...? அப்படி ஒரு நல்ல மனசு யாருக்குக் கிடைக்கும்...?!


  ஏ.சி.யில உட்கார்ந்து சாப்ட்டுட்டு வேலை செய்வதால் சம்பளம் அதிகமோ...? இல்ல... வேலை செய்றவனுக்கு வேலையக்குடு: வேலை செய்யாதவனுக்கு சம்பளத்த கொடுண்ணு சொல்லிட்டாங்களோ...?

  த.ம.2


  ReplyDelete
  Replies
  1. கல்லாவிலே குறியாய் இருப்பதைப் பார்த்தால் ,நீங்க சொல்றது சரியாகத்தான் படுகிறது :)


   பச்சைக் குத்திக் கொண்டது பச்சைத் துரோகமா :)

   புண் ஆகக்கூடாதுன்னுதான் பழகின செருப்பா எடுக்க நினைக்கறார் :)

   ஓசியில் ஏசி எல்லோருக்கும் கிடைக்குமா :)

   Delete
 3. Replies
  1. பிரசென்ட் போட்டாச்சு ,நண்பரே :)

   Delete
 4. Replies
  1. சரியாக சொல்லுங்க ,அருமை...பதிவா ,படமா :)

   Delete
 5. Replies
  1. ஜொள்ளர்கள் இளிச்சுகிட்டு பணத்தை தரலாம் ,பெண்மணிகளிடம் இருந்து எப்படி வாங்குவாராம் :)

   Delete
 6. பெண்ணென்றால் பணம் நீட்டுவாங்களாமோ?

  ReplyDelete
  Replies
  1. நீட்ட மாட்டார்கள் ,மணி பர்சை கொடுத்து எடுத்துக்க சொல்வார்கள் :)

   Delete
 7. 01. நிறைய இடத்தில் இப்ப இப்படித்தான் ஜி
  02. நல்ல யோசனை பாடப் புத்தகத்துல சேர்க்கலாம்.
  03. அதானே நினைச்ச நேரமெல்லாம் கல்யாணம் நடக்குமா ? என்ன ?
  04. ஹார்ட்வேர் வேலைக்காரனும், சாஃப்டவேர் வேலைக்காரனும் சாப்ட்டாத்தான் வேலை செய்ய முடியும்

  ReplyDelete
  Replies
  1. கடன் ,கடன் அட்டை வாங்கிக்கச் சொல்லி செல்லில் பெண்கள் படுத்தும் பாடு இருக்கே ......:)
   காலேஜ் பாடப் புத்தகத்திலா :)
   நல்ல வேளை,இன்னைக்கே வேணும்னா கோவிலுக்கு போகலாம் என்று சொல்லாமல் விட்டாரே :)
   எல்லோரும் வேலைப் பார்க்கிறதே சாப்பிடத்தானே :)

   Delete
 8. பச்சை குத்தின பொண்ணு ரொம்...பப் புத்திசாலிதான்!

  ReplyDelete
  Replies
  1. புத்திசாலிதான் ,இன்று மொய் (ஏழாவது வாக்கு ) பரிமாறிக் கொண்ட நம்மைப் போன்றே :)

   Delete
 9. தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
  மூளை வேலைக்கு சிலபேர்கள்தான் FIT ! \\ This is fact, not joke!!

  ReplyDelete
  Replies
  1. பிச்சைக்காரர்கள் லட்சம் பேர் ,ஆனால் ஒரே ஒரு சுந்தர் பிச்சை தானே கண்ணுக்குத் தெரிகிறார் :)

   Delete
 10. சாப்புட்டுவேலைக்கு சில பேர் என்றால்... அவுகளுக்கு பெரிய்ய மூளை இருக்குமோ...????

  ReplyDelete