31 August 2015

பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா :)

 பார்வை ஒன்றே போதுமே :)   

               ''ஒரே பார்வையில் பார்த்து ,அளக்காமலே சரியாக தைத்துக் கொடுத்து விடுவாராமே அந்த டெய்லர் !''

                           ''நல்ல வேளை ,அவர் ஆண்களுக்கு மட்டுமே தைக்கிற டெய்லரானதால்  தப்பித்தார் !''பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா ?

            ''பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்திலே கண் கலங்காம இருக்கணும்னு ரொம்ப எச்சரிக்கையா அவர் இருக்காரா ?''
            ''ஆமா ,டிவி இல்லாத வீட்டு வரன்கள் மட்டுமே வேணும்னு  தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ''


ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ ?

        ''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''
       ''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''
       ''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''


ஸெல்ப் பேட்டரி மக்கர் பண்ணலாம்  என்பதால் கிக்கருமா?

கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...
அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும் 
சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்த மருத்துவரையும் நம்ப முடியவில்லை ...
நம்பகமான ஒரு வழி உள்ளதையே நம்பத் தோன்றுகிறது!


  1. டீ.வி..இல்லாத வீடா சாத்தியமே இல்லை.......தரகர் ஏமாத்தப் போறார்.


  1. அதிலும் ,தொடர் பார்க்காத வீடா ?

34 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. புத்தர் மரணம் இல்லா வீடு இல்லையென்றார் ,இன்று டிவி இல்லா வீடும் இல்லை என்றும் சொல்லலாம்தானே :)

   Delete
 2. அங்காடித் தெருவுக்கு வந்தாச்சு... நீங்களா என்ன ஏன் பிரிச்சு பர்க்கிறீங்க...? இதுல நா வித்தியாசம் பாக்கமாட்டேன்... ஆண்
  என்ன? பெண் எனன? எனக்கு எல்லாம் ஒன்னுதான்....! என்ன... பொண்ணுங்க யாரும் வர்றதில்ல...அம்புட்டுத்தான்!


  அப்ப இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்லன்னு சொல்லுங்க...! பொண்ணு வாக்கப்பட்டு போகம இருக்கிறமேன்னு கண் கலங்கிறதப் பாருங்க...நீங்க சொலறது சரிதான்.... கல்யாணம் ஆயிரங்காலத்து பயிர்தான்... அதுக்காக விளச்சலுக்கு இம்பூட்டு நாள் எடுத்துக்ககூடாது...!

  ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறுதானே பதம்ன்னா...! ஒரு கிலோ டீத் தூள்க்கு ஒரு டீ பதம் இல்லையா...?


  உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததில்லையா...? சித்தன் போக்கு சிவன்போக்குன்னு இருக்க வேண்டியதுதான்...!

  த.ம.2


  ReplyDelete
  Replies
  1. இப்படி கெட்டபார்வைப் பார்த்தால் எந்த பொண்ணு வருவா :)

   அதானே ,கோழிகூட 21நாள்லே குஞ்சு பொரிக்குதே:)

   விலைதான் ,மனசுக்கு இதமாய் இல்லை :)

   சித்தா போக்கா ,அலோபதி போக்கான்னு குழப்பமா இருக்கே :)

   Delete
 3. Replies
  1. கலர் படத்தைத்தானே சொல்கிறீர்கள் :)

   Delete
 4. ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நம்ம ரசனை எல்லாம் வலைப் பதிவுகள்தான் டிவி யில் இல்லை :)

   Delete
 5. //பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா ?//
  மாப்பிள மேல இருக்கற அக்கறைன்னு வச்சுக்கலாம் டிவி இல்லாததால மாப்பிள்ளைய கவனிக்க நேரம் கிடைக்கும்னு நினச்சி இருப்பாரோ என்னவோ?

  ReplyDelete
  Replies
  1. ஓ,அப்படியும் வச்சுக்கலாமா :)

   Delete
 6. பெண் பண்கலங்காமல் இருப்பதுடன் மாப்பிள்ளையையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்றும் தரகர் சொல்லலாம். நாமும் ஒரே பார்வையில் அளந்து விடுவோம் இல்ல. ஆனால் என்ன டெய்லர் வேலை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தரகர் எதைத்தான் சொல்லாமல் விட்டார் :)
   அளவில்லாமல் தர்ம அடி வாங்காதவரையில் ,அளக்கலாம் :)

   Delete
 7. மேலே பெண் கண் கலங்காமல் எனப் படிக்கவும். பின்னூட்டத்தை இரு முறை படிக்க வைத்து விட்டேனே

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லாவிட்டாலும் அகக்கண்,அதை கண் என்றே புரிந்து கொள்கிறதே:)

   Delete
 8. டிவி இல்லாத வீடா? நோ சான்ஸ்!

  ரதிச்சோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை ,டிவியில் ரதி நடித்த படத்தை ரசீத்தீர்களா :)

   Delete
 9. நல்லவேளையா? நம்பிட்டோம்,
  அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண் அளக்காததையா கை அளக்கப் போவது என்பது சரியா :)

   Delete
 10. அனைத்தையும் ரசித்தேன்.அப்பா பாசம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இவர் மனைவியின் அழுகையைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்திருப்பாரா :)

   Delete
 11. அளக்கும் பார்வை இதுதானோ?

  ReplyDelete
  Replies
  1. நம்மை நாம்தான் அளந்து பார்த்துக் கொள்வதில்லை :)

   Delete
 12. சிறப்பான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இது தினசரி மலரும் பூ .உங்கள் தளத்தில் என்றோ ஒருநாள் கொத்து கொத்து மலரும் பூக்களை நானும் ரசிக்கிறேன் :)

   Delete
 13. 01. உள்ளதுதானே கண் பார்த்தால் கை செய்யுது.
  02. இது 35 வருஷத்துக்கு முன்னாலே வரவேண்டிய ஜோக்கோ...
  03. சரியான கேள்விதானே....
  04. இதுக்கு வழி நாளைக்கு சொல்றேன்.

  ReplyDelete
  Replies
  1. சேட்டைக்கார கை ,பார்க்காததையும் செய்யுமே :)
   அது ,வாரம் ஒருநாள் ஒரு மணி நேர ராமாயணக் காலம் ,இன்றோ ,35 தொடருக்கு பஞ்சமில்லையே :)
   தக்காளி விலைக் குறைந்தால் வெங்காய விலை எகிறிடும் ,அப்படித்தானே :)
   நாளை 5.32க்குள் சொல்லிடுங்க :)

   Delete
 14. வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்!! அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது நன்றி!!

  அன்புடன் கரூர்பூபகீதன்!!

  ReplyDelete
  Replies
  1. கரூர் பூபகீதன்௷....உங்கள் தளத்தினைப் பார்த்தேன் ,அதென்ன பெயருக்கு பின்னால் எ வ :)

   Delete
 15. டீவி இல்லா..வீடு,..,தொடர் பார்க்காத வீடு....ஒன்.,டூ பொய்யைச் சொல்லி..ஒரு கல்யாணம்.....

  ReplyDelete
  Replies
  1. ஆயிரம் பொய்யில் இது இரண்டு பொய்தானே :)

   Delete
 16. வீடே இல்லை என்றாலும் டி .வீ இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ,சமீபத்தில் பெங்களூரு சென்று இருந்த போது,நடைபாதையில் வசிக்கும் ஒரு குடும்பம் ,தள்ளுவண்டியின் கீழ் டிவி பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் :)

   Delete
 17. இங்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லைச் சகோதரா போற போக்கில
  கண் தெரியாதவர்களே அதிகமாக இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது
  அவ்வளவு தூரம் ரீவி மேல மோகம் முத்திக் கொண்டே போகுதே !சிந்திக்க வைத்த
  பகிர்வு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. TVயை இடியட் பாக்ஸ் னு சும்மாவா சொன்னாங்க ?நாம வலையடிமைகள் ,அவர்கள் தொடர் அடிமைகள் ,சரிதானே :)

   Delete