1 September 2015

பிரசவத்தை நேரில் பார்க்கும் துணிச்சல் உண்டா :)

காதுக்கு கம்மல் ,சுவருக்கு இது சரிதானே :)

''நாட்காட்டின்னா  பொதுவா செவ்வகமா இருக்கும் ,நீங்க ஏன் அதை கம்மல் மாதிரியே டிஸைன் செய்து இருக்கீஙக ?''

''சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்னு சொல்றாங்க ,அதுக்கு பொருத்தமா இருக்கும்னுதான் !''

 புருசனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்காதோ ?

             ''ஞாபகமா.. பக்கத்திலே வேஸ்ட் பேப்பரை வச்சுக்கிட்டு உருளைக் கிழங்கை உரிக்கச் சொல்றீயே ,ஏன் ?''
                ''போன  தடவை தோலை தட்டுலேயும் ,கிழங்கை குப்பையிலும் போட்டது மறந்துடுச்சா ?''
பதிவு எழுத நேரம் இல்லாததால் ,DTP சென்டரில் 'டைப்'பிக்க கொடுத்து வெளியிட்டதால் ,வேறு பான்ட்டில்இருந்ததால், திருத்தம் செய்யக்கூட முடியவில்லை , ஜூம் செய்துகிட்டு படிங்க ....பிழைப் பொறுத்தருள்க  !


27 comments:

 1. புதுமையான ஐடியா!

  தோல் போட்டு புது ரெசிப்பி செய்யறாங்களோ என்னவோ!

  ReplyDelete
  Replies
  1. வர்ற புது வருசத்தில் இதை யார் காப்பி அடித்தாலும் ராயல்டி கேட்டு விடலாம் :)

   தோலிலும் உண்டு எனர்ஜி :)

   Delete
 2. காதுக்கு கம்மல் , சுவருக்கும் இது சரிதான்... ஆனால் கேட்...காது...! சுவர் கேட்கின்றதென்றால் அப்ப மாட்டிவிட வேண்டியதுதான்...! சுவரையல்ல... கம்மலை...!


  இதுக்குத்தான் அந்தக் காலத்திலேயே குணம் குப்பையிலேடன்னு சொல்லியிருக்காங்களோ...?


  நிஜ பிரசவக் காட்சின்னா...செத்துச் செத்துப் பிழைப்பதுதானே...! அதான் வீட்ல.... சரி... அத விடுங்க...! எப்ப ஸ்வேதா மேனன்ன பேட்டி எடுக்க போறிங்க...? அதச் சொல்லுங்க...! ரொம்பத்தான் சுண்ட வக்காதீங்க...!

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. இது ஸ்பை காமெரா காலம் ,சுவர் கேட்க மட்டுமில்லை பார்க்கவும் செய்கிறதே :)

   நம்ம முன்னோர்கள் அறிவாளிங்க ,சரியா சொல்லி இருக்காங்களே :)

   இனிமே பேட்டி எடுத்து ஆகப் போவதென்ன :)

   Delete
 3. Replies
  1. சுண்டக் குழம்பு வாசத்தை நீங்களும் முகர்ந்தீர்களா ,ஜி :)

   Delete
  2. நாகேந்திர பாரதி ஜி ,
   உங்களோட தியானப் பயிற்சி நகைச்சுவைப் பேச்சைக் கேட்டு ரசித்தேன் ,முடிந்தால் ,அதை எழுத்து வடிவிலும் கொண்டு வரலாமே :)

   Delete
 4. இன்றைய பதிவு
  கண்ணை வெட்டும் காரமான பதிவாக
  மின்னுகிறதே - அது
  பிரசவக் காட்சியா?

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. காதணிகள் கண்ணைப் பறிப்பதில் தவறில்லையே :)
   பிரசவக் காட்சிக்கு நீங்க ,களிமண்ணு படம் ஓடுகிற சினிமாத் தியேட்டருக்கு போகணும்,இல்லையென்றால் ,ஆப்ரேசன் தியேட்டருக்கு போகணும் :)

   Delete
 5. Replies
  1. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது :)

   Delete
 6. அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. களி மண்ணு கூட நல்லாயிருக்கா :)

   Delete
 7. என் மனைவியிடம் ஸ்வேதா மேனோனின் நிஜப் பிரசவ காட்சி பற்றிச் சொன்னேன் . அவளுக்கு அதில் எந்த த்ரில்லும் இல்லை. சுவருக்குக் காதணி. என்ன கற்ப்னையப்பா.?

  ReplyDelete
  Replies
  1. பிள்ளைப் பெற்றவர்களுக்கு த்ரில் எப்படியிருக்கும் ,அந்த அனுபவம் இல்லாத நமக்குதானே அது த்ரில் :)

   கற்பனைக் காதணி நல்லாயில்லையா :)

   Delete
 8. Replies
  1. மோடி ஜி ஆட்சிக்கு வந்த பிறகு இப்போதான் வந்து இருக்கீங்க ,இத்தனை நாளாய் அவருடன் வெளி நாட்டு பயணத்தில் இருந்தீங்களா ,வக்கீல் சார் :)

   Delete
 9. Replies
  1. ஆகா எது ,பிரசவமா :)

   Delete
 10. ஜோக்காளியின் மீள் பதிவையும் நீள் பதிவையும் படித்துவிட்டேன்... முதல் தகிரியப் பரிசு..யாருக்கு..எனக்கா.... அல்லது களிமன்னு பங்காளிக்கா...???க?

  ReplyDelete
  Replies
  1. வருகிற பதிவர் சந்திப்பில் உங்களுக்கே அந்த சிறப்பு பரிசினை வழங்க ஆலோசனை செய்கிறேன் :)

   Delete
 11. வேஸ்ட் பேப்பர் ஹஹ .

  ReplyDelete
  Replies
  1. அதையும் வச்சுக்கலைன்னா தரையிலே தோலை ஒட்டிவிடுவாரே:)

   Delete
 12. 01. சுவருக்கும் மேட்சா ?
  02. புருசனுக்கு ஞாபக சக்தி அதிகமோ... ?
  03. விடாக்கண்டனும், கொடாக்கண்டனும்
  04. ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. காதுன்னா மேட்சிங் வேண்டாமா :)
   வயசானாலே இப்படித்தான் :)
   இருவருமே ரசிக்க வைக்கிறார்களே :)
   களிமண்ணு என்றாலும் அழகுதான் :)

   Delete
 13. Replies
  1. சுவர் காதுக்கு ஜிமிக்கி போட்டாலும் ரசிக்க முடியுமே :)

   Delete