11 September 2015

பொண்ணு பார்க்கையில் முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது :)

 இதைக் கேட்ட மனைவிக்கு எப்படியிருக்கும் :)              

            ''என்னங்க ,இந்த லேகியத்தை எப்படி சாப்பிடுறீங்க ,பயங்கரமா கசக்கும் போலிருக்கே !''
           ''கல்யாணம் ஆனதில் இருந்து ,கசப்பும் எனக்கு பழகிப் போச்சே !


பாரி முனையும் ,பாரிஸும் ஒன்றா ?            
                 

              ''ஹலோ ,நான் இப்போ விமானத்திலே இருக்கேன் ,அதனாலே  நீ பேசுறது சரியா எனக்கு கேட்க மாட்டேங்குது !''
             '' எதிர்த்த  பிளாட்பாரத்தை  பார்த்து பேசுடா நாதாரிப் பயலே  ,சிக்னலும் கிடைக்கும் ,நான் நிற்கிறதும் தெரியும் !''

பொண்ணு பார்க்கையில் முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது !

           ''புது பெண்டாட்டிகிட்டே , டெய்லி டைரி எழுதுவேன்னு சொன்னது தப்பா போச்சா , ஏண்டா ?''
           ''நான் கராத்தேயில்  ப்ளாக் பெல்ட் ...என்னை  அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்கிட்டா ,டைரியிலே 'இன்று திருப்பு முனை ஆன நாள் 'ன்னு எழுத வேண்டியிருக்கும்னு  சொல்றாளே !''


லஞ்சப்பணம் வாங்கும்போது 'கருடபுராணம்' நினைவுக்கு வராதோ ?

ஒரு சில கோவில்களில் ...
'பிற மதத்தினர் உள்ளே செல்ல அனுமதிஇல்லை 'என எழுதப்பட்டுள்ள வாசகங்களைப் படிக்கையில் மனதில் வலிக்கின்றது !
இதற்குப் பதிலாக ...
வழிபாடு ஸ்தலங்களில் எல்லாம் ...
'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே !


 1. Thulasidharan V ThillaiakathuThu Sep 11, 12:40:00 a.m.
  ஹாஹா....மொபைல் ஃபோனின் வசதி....சூப்பர்.....

  கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல பையன்....

  அன்நியன் அம்பி??!!!!
  1. 'காலிங் பெல்' லாக கூட மாறிவிட்டது ))))))))

   கொஞ்சமா ,நிறையவே !

   ஊருக்கு ஒரு அந்நியன் அம்பி நேரில் வந்தால் நன்றாய் தானிருக்கும் !

23 comments:

 1. எல்லாம் எ தல விதியேன்னு சாப்புடுறேன்...! ‘இந்த கசப்பான பாத்திரம் என்ன விட்டு அகலக்கடவுவதாகன்னு சொல்ல’நா என்ன கடவுளா...?


  வி...மானம் போற மாதரி ஏன்டா கத்துறான்னு சொல்ல வந்தேன்...!ஒனக்கு விமானம்ன்னு கேட்டு இருக்குமே...! நம்மெல்லாம் பாரி வள்ளல் பரம்பரைங்கிறத நீ மறந்திராதடா...! கையில ‘பாரிஸுக்கு போ’ நாவல் இருக்கே... நீ பாக்கலையா...?


  ‘ஒரு கைதியின் டைரி’ -ன்னு எழுத வேண்டியதுதான்... நீங்க வாங்கின பெல்ட்ட பேண்ட்ல மாட்டியிருக்கீங்கல்ல... அப்புறமென்ன.... இதுக்கு போயி பயப்படலாமா...?


  ‘பரமசிவன் கழுத்திருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா...?’
  ’யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே...’
  -யாருப்பா பாடுற பாட்ட நிப்பாட்டிட்டு இந்தப் பாட்டப் போட்டது...
  ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்...ஞானத்தங்கமே...!’
  என்ன.. யாராயிருந்தாலும் சட்டை கழட்டிட்டுத்தான் கோயிலுக்குள்ள போகனுமா...? இதெல்லாம் பெரிசா சட்டை செய்யலாமா?

  த.ம.1.

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை. பாரிமுனை மிகவும்.

  ReplyDelete
 3. 01. புகைப்படத்தில் உள்ளவன் சைனாக்காரன் நல்லாவே தமிழ் பேசுறான் ஜி
  02. பெரிய புரூடாவா இருப்பான் போலயே....
  03. இது தெரிஞ்சே கல்யாணம் செய்திருக்கானே கெரகம் புடிச்சவன்
  04. உண்மையான வரிகள் ஜி

  ReplyDelete
 4. கசப்பு உடம்பிற்கு நல்லது ஜி...

  ReplyDelete

 5. 'லஞ்சம் வாங்குபவர்கள் உள்ளே சென்று வணங்கத் தகுதி இல்லாதவர்கள் 'என்று
  எழுதி வைத்தால் நன்றாயிருக்குமே!
  என்ற வரிகளைப் படித்ததும்
  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நினைவுக்கு வந்தது.
  VIP Pass உள்ளவங்க
  உள்ளே போய்க் குப்பிட்டாங்க
  யாழ்பாவணன் போன்ற பிச்சைக்காரங்க
  பத்து உரூபா Ticket இல
  வெளியே நின்று கும்பிட்டாங்க
  இவர்களில - எவர்
  லஞ்சம் கொடுத்தாங்க
  இவர்களில - எவருக்கு
  மதுரை மீனாட்சி அம்மன்
  அருள் கிடைக்கும்?

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 6. அது மதம் பிடித்தவர்களின் செயல்,,,,,,,,
  இது திருப்புமுனை ஆன நாள்,,,,,,,,,, அருமை,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. கசப்பும் பழகிப் போச்சாம் அதுவும் மனைவியிடம்...

  ReplyDelete
 8. ஹஹஹஹ் ம்ம்ம் கசப்பு பழகித்தான் போகும்.....அனைத்தையும் ரசித்தோம்....எங்களது பின்னூட்டம் இங்கு வந்தமைக்கும் மிக்க நன்றி ஜி!

  ReplyDelete
 9. கசப்பு பழகினாத்தான் வாழ்க்கை இனிக்கும் ஜி...

  பாரீசும் பாரிமுனையும் ரொம்பச் சிரிக்க வைத்தது....

  மற்றவை எல்லாமே ரசிக்க வைத்தது....

  ReplyDelete
 10. manavai jamesFri Sep 11, 06:12:00 a.m.>>.
  கடவுளே சொன்னாலும் கசப்பு மறையாது :)

  பாரிஸுக்கு போறேன் என்று நாவல் இல்லையே:)

  கராத்தே என்றால் வெறும்கை ,பெல்ட் அதை ஜெயிக்க முடியுமா :)

  லஞ்சவாதிகள் சட்டை செய்ய மாட்டார்கள் ,அப்படித்தானே :)

  ReplyDelete
 11. கரந்தை ஜெயக்குமார்Fri Sep 11, 06:57:00 a.m.>>.
  ரசித்தது ,எழுதப் பட வேண்டிய வாசகத்தைதானே :)

  ReplyDelete
 12. Dr B JambulingamFri Sep 11, 07:17:00 a.m.
  அனைத்தும் அருமை. பாரிமுனை மிகவும்.
  Reply>>.
  பாரி முனை நம்ம ஊராச்சே :)

  ReplyDelete
 13. KILLERGEE DevakottaiFri Sep 11, 07:42:00 a.m.
  01. புகைப்படத்தில் உள்ளவன் சைனாக்காரன் நல்லாவே தமிழ் பேசுறான் ஜி
  02. பெரிய புரூடாவா இருப்பான் போலயே....
  03. இது தெரிஞ்சே கல்யாணம் செய்திருக்கானே கெரகம் புடிச்சவன்
  04. உண்மையான வரிகள் ஜி
  Reply>>
  பதிவர் விழாவில் ,சைனாக் காரனுக்கு சிறப்பு செய்து விடலாமா :)
  புருடா என் கிட்டயேவா :)
  ஜாதகத்தில் இதைப் பற்றி சொல்லவே இல்லையே:)
  நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களையும் இதில் சேர்த்துக்கலாம் :)

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. அன்புள்ள ஜீ,

  ‘பாரீஸுக்குப் போ!’ ஜெயகாந்தனின் சர்ச்சைக்குரிய புகழ்பெற்ற இந்த நாவல் ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்தது.

  நன்றி.

  ReplyDelete
 16. அதை நானும் அறிவேன் மணவையாரே:)

  ReplyDelete
 17. தனபாலன் ஜி >>.
  மனக் கசப்புதான் கெட்டது :)

  ReplyDelete
 18. ஜீவலிங்கம் ஜி >>>
  அம்மன் அருளா ,இதெல்லாம் உங்களுக்கு வேண்டாத ஆசை :)

  ReplyDelete
 19. மகேஸ்வரி ஜி >>>
  நம்ம கோவிலில் தானே அப்படி புண் படுத்தும் வாசகம் இருக்கிறது :)

  ReplyDelete
 20. பால சுப்ரமணியம் ஜி >>>
  உங்களுக்கு இன்னும் பழகவில்லை என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி அய்யா :)

  ReplyDelete
 21. துளசிதரன் ஜி >>>
  வாழ்க்கை என்றால் கசப்பும் சேர்ந்துதானே :)

  ReplyDelete
 22. குமார் ஜி >>.
  கசப்பு தருவது ,இரட்டிப்பு இனிமை :)

  ReplyDelete