13 September 2015

வாடி ,போடின்னு கணவன் சொல்ல காரணம்.:)

கடவுளுக்கே பொறுக்காது என்பது சரிதான் :)
               

                    ''என்னடி சொல்றே ' வரம் தா 'ங்கிற என் பாட்டைக் கேட்டு கடவுள் நிச்சயம் வருவாரா ?''
               '' இனிமேல் வாய் திறந்து பாடமாட்டேன்  என்று உன்னிடம் சத்தியம்  வாங்கிட்டு போக அவர் வந்துதானே ஆகணும் !''                     
                       
                    
கடைக்காரர் செய்தது சரிதானே ?                                                                               

''அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு  ஏன் சொன்னார் ?''
''  ஒரிஜினல், ஜெராக்ஸ்  இரண்டையும் படிச்சு , ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிட்டு காசு தர்றேன்னு சொன்னேன் ,தப்பா ?''

வாடி ,போடின்னு உரிமையாய் சொல்ல காரணம்...!

                   ''உன் பெண்டாட்டியை நீ வாடி ,போடின்னு சொல்றது எனக்கு சரியாப்படலே !''
                             ''சரி ,சொல்லிட்டுப்    போடான்னு அவளே சொல்லும்போது உனக்கென்ன வந்தது ?''வாழ்க்கை தத்துவமே வெங்காயத்தில்  அடங்கியிருக்கு !

உரிக்கும்போது கண்ணீரை வரவழைக்கும்  வெங்காயம்தான் ...
நாவிற்கு சுவை !
வாழ்க்கையும் அப்படித்தான் ...
கஷ்டத்தில் கண்ணீரும் 
கடந்த பின்  மகிழ்ச்சியும் தருகிறது ! 1. வலிப் போக்கன்Sat Sep 13, 01:53:00 p.m.
  அவரு போடின்னு சொல்ல....அவுக போடான்னு சொல்ல.... இரண்டு பேருமே சமமா இருக்கும்போது...ஊடால எதுக்கு நரி......!!


  1. நரி ஊளை இடத்தான் செய்யும் விடுங்க ,இப்படியாவது சமத்துவம் வரட்டுமே )))))

24 comments:

 1. Replies
  1. வெங்காய நெடி தாங்க முடியலையா :)

   Delete
 2. Replies
  1. கடவுளே வந்து வரம் வாங்கிட்டு போவார் போலிருக்கு :)

   Delete
 3. ‘வரன் தா....’ என்று மாற்றிப் பாடச் சொல்வாறோ?


  செக்கிங் இன்பெக்டர் புள்ளன்னு நிருபிக்க வேண்டாமா?

  ‘போடா...போடி...’ன்னு சொல்றதுதான் இப்பல்லாம் பேஷன்..!போடா டே...போயிவேற வேலையிருந்தா வேலையப் பாருங்கடா..!


  கஷ்ட காலம்... கண்ணீரில் மிதக்க வைத்தாய்...!

  த.ம.3
  ReplyDelete
  Replies
  1. வரனை கேட்க வேண்டியதே இல்லையே,அவங்களே தேடிக்குவாங்க :)

   அதுக்காக நகலையுமா:)

   பிள்ள குட்டிங்கள படிக்க வைக்கிற வழியைப் பாருங்கடா :)

   அதை மறக்க தண்ணியில் மிதக்காமல் போனால் சரிதான் :)   Delete
  2. அப்படியே... அச்சு அசலா...தேவர் மகன் கமல் பேசுறாப்புளயே இருக்கு...!

   Delete
  3. கமல் சொன்னது சரி ,அதை நீங்க சொல்றது தப்பா போய்விடும் போலிருக்கே :)

   Delete
 4. வெங்காயத்தின் தத்துவம் அருமை ஜீ,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. 'வெங்'காயமே இது பொய்யடான்னு சொல்லமுடியலே :)

   Delete
 5. வாடி..போடி...யும் அக்கம்பக்கத்தில்தானே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. கம்பம் பக்கத்திலே போடி மட்டும்தானே இருக்கு :)

   Delete
 6. வாழ்க்கை என்ற பயணத்தில்
  வெங்காயம் என்பது வழிகாட்டி!
  என்றே
  சொல்ல விரும்புகிறேன்

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. சில் நேரங்களில் வழிகாட்டியின் விலைதான் ,மக்களை விழிபிதுங்க வைத்து விடுகிறது :)

   Delete
 7. Replies
  1. பப்ளிஷ் நேரத்தைப் பார்த்தீர்களா ,ராத்திரி பூரா உட்கார்ந்து யோச்சிச்சது :)

   Delete
 8. இந்த வாடி போடி அழைப்பு நம் அண்டை மாநிலத்தில் சகஜம் ஜெராக்ஸ் கடைக்காரர் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவிடம் தோற்று விட்டாரா.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இருப்பது பெங்களூருவில் ,நான் இருப்பது மதுரையில்,நீங்கள் சொலவது கடவுளின் தேசத்தையா :)
   கடையை மூடி விட்டு சென்றுவிட்டதாக தகவல் :)

   Delete
 9. 01. தெய்வீக குரலோ ?
  02. உண்மைதானே பேங்ல பணம் எடுத்தால் சரியா இருக்கானு செக் பண்ணுறது இல்லையா ?
  03. இது இப்போ ஃபேஷனாகிப்போச்சு காரணம் சினிமாக்காரன்தான்.
  04. எவ்வளோ விஞ்ஞானம் வளர்ந்தும் வெங்காயத்தை உரிக்காமல் பவுடராக தயாரிக்க மாட்றாங்கே..

  ReplyDelete
  Replies
  1. இல்லைன்னா தெய்வமே வருமா :)
   atmல் எடுத்தாலும் கூட :)
   வாடி போடின்னே பட டைட்டில் வேற :)
   இப்போதானே ஜிஞ்சர் பேஸ்ட் வந்திருக்கு ,நீங்க சொல்றதும் வந்திடும் :)

   Delete
 10. போடா..போடி... சரியாப் போச்சு

  ReplyDelete
  Replies
  1. அதுசரி .இளம் தம்பதிக்குள் இதெல்லாம் சகஜம் தானே :)

   Delete
 11. கடவுளை வரவழைக்க நல்ல ஐடியாவா இருக்கே.... :)

  ReplyDelete
  Replies
  1. வந்தாலும் ,அவரில்லே வரம் வாங்கிட்டு போகணும் போலிருக்கு :)

   Delete