14 September 2015

அன்று அபார்ஷனுக்கு உதவிய தோழி ...இன்று :)

  எப்படா ஸ்கூல் விடும்னு  பசங்க இருப்பாங்களோ ?       
           
           '' நம்ம பள்ளிக்கூட மணியை ,உடனே எலெக்ட்ரிக் மணியாய்  மாற்றணுமா ,ஏன் ?''
           ''தெருவிலே சோன்பப்டி வண்டிக்காரன் அடிச்ச மணி சத்தத்தைக் கேட்டு எல்லாரும் வெளியே ஓடிட்டானுங்களே !''

அன்று அபார்ஷனுக்கு உதவிய தோழி ...இன்று :)
                ''குழந்தைப் பிறக்காததற்கு , காரணம் நான் இல்லைன்னு லேப் ரிசல்ட் சொன்னாலும் என் புருசன் நம்ப மறுக்கிறார்டீ!''
               ''கல்யாணத்திற்கு முன்னாடியே ,அபார்ஷன் பண்ணிக்கிட்டதை  சொல்லிப் பாரேன் !''

அழகை ரசிக்க அழகு தேவையா ?

விரலில் எட்டிப் பார்த்தது ஒரு துளி இரத்தம் ...
குத்திய முள் கேட்டது ...
நான் ரசிக்கும் ரோசாவை நீ ஏன் பறித்தாய் ? 1. வலிப் போக்கன்Sun Sep 14, 05:10:00 p.m.
  குழந்தை பிறக்காததற்கு தான் காரணமாக இருப்பது தெரிந்திருந்தாலும் சோத்தாங் கை பயலுக ஒத்துக்க மாட்டாங்கே...ஜீ
  1. ஆண்மை சோதனைக்கு சாமியாரே ஒத்துழைப்பு தராத இக்காலத்தில் ,சோத்தாங் கை பயலுக ஒத்துழைப்பு தருவாங்களா ?:)

22 comments:

 1. இதுக்கு சங்கு ஊதிடலாம்...இனி ஓடினா... மகனே ஒனக்கு சங்குதான்...!

  கல்யாணத்திற்கு முன்னாடியே ,அபார்ஷன் பண்ணிக்கிட்டத நானும் சொல்லலாமுன்னுதான் பார்த்தேன்... ஒங்களுக்கு வேணுமுன்னா உயிர் மேலே ஆசையில்லாம இருக்கலாம்... எனக்கு இன்னும் ஆசை இருக்கு...ஒங்க உயிர்மேல...!


  எ கோபத்த கிளறாதே...உண்மையச் சொல்லு... சர்க்கரைய டெஸ்ட் பண்ணத்தானே பாத்தா...? என்ன பார்த்தா அவ்வளவு கேவலமாவா இருக்கு... இதுக்குத்தான் அப்பவே... விரலுக்கு தகுந்த வீக்கம் வேணுமுன்னாங்க...!


  த.ம.1.

  ReplyDelete
  Replies
  1. ஸ்கூல் பக்கத்தில் வடக்கத்திக் குடும்பம் இருக்கான்னு பார்த்துக்கணும் ,சங்கு ஊதித்தான் அவங்க சாமி கும்பிடுறாங்க :)

   சின்ன உயிரை அன்று கொன்னதுக்கு பழி,இன்று பெரிய உயிரா :)

   லேப்பிலே ரத்தம் செக் செய்ய முள்ளை வைத்துக் கொள்ளலாம் போலிருக்கே :)

   Delete
 2. பள்ளி மணி, பள்ளி நாள்களை நினைவூட்டின.

  ReplyDelete
  Replies
  1. அடுத்து ,வெள்ளிக் கொலுசு மணி பதிவு ,எதை நினைவூட்டுமோ :)

   Delete
 3. Replies
  1. அபார்சனுமா அருமை :)

   Delete
 4. Replies
  1. இப்படி பிச்சுக்கிட்டு ஓட வைப்பதா படிப்பு :)

   Delete
 5. நல்ல தோழி! :)

  அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. உளறிக் கொட்டாமல் இருந்தால் நல்ல தோழிதான் :)

   Delete
 6. நல்லா இருக்கே கதை,
  அருமை

  ReplyDelete
  Replies
  1. கதை கந்தலாகாமல் போனால் சரிதான் :)

   Delete
 7. 01. சோன்பப்டிகாரனாலே பிள்ளைங்களோட எதிர்காலமே பாதிக்குதே..
  02. வேறென்ன ? செய்வது நிரூபிச்’’சாகனுமே...
  03. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஸ்கூல் பக்கத்தில் மணியாட்டக் கூடாதுன்னு தடை போட்டு விடலாமா :)
   நிரூபித்து சாகிறதுக்கு சும்மாவே இருந்து விடலாமே :)
   முள்ளின் கேள்வியால் இரத்தம் உறைந்து போயிருக்குமோ :)

   Delete
 8. 1. ஹஹஹஹ் சோன்பப்புடி மணி
  2. நல்ல தோழிதான் ஜி!

  அனைத்தும் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. சோன் பப்டி சோனா பப்டி மணியோசை கேட்டா இப்படியா :)

   மறக்க வேண்டியதை மறக்காமல் இருக்கும்போதே தெரிகிறது :)

   Delete
 9. அபார்ஷனுக்கு உதவிய தோழி: மற்றுமொரு அபார்ஷன் ஜோக்!
  ________________________
  மனைவி தன கணவனிடம், "நான் இப்ப கர்ப்பம் என்று சொன்னா என்னை அடிக்கமாட்டீங்களே" என்று கேட்டார்கள்.
  அதுக்கு ஏண்டா செல்லம் அடிக்கப்போகிறேன்! நல்ல விஷயம் தானே" என்று கணவன் கேட்க....
  "இல்லை கல்யாணத்திற்கு முன்பு இப்படித்தான் இரு முறை நான் கர்ப்பம் ஆகிவிட்டேன்; அப்ப நான் கர்ப்பம் என்று என் அப்பாவிடம் சொன்னபோது என் அப்பா அடி பின்னிவிட்டார். மேலும், சூடும் வைத்தார்; அதான்" என்றார் அந்த மனைவி!

  ReplyDelete
  Replies
  1. தலைவா ,தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க ,இனிமே அபார்ஷன் பக்கமே வரமாட்டேன் :)

   Delete
 10. இனி அடுத்த கதை கந்தல்தான்....

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணும் கவலைபடத் தேவையில்லை ,கந்தலை 'வாய் 'பந்தல் போட்டு மறைச்சிடலாம் :)

   Delete
 11. பகவான்ஜி ...
  தொடரட்டும்
  நகைப்பணி
  தம +

  ReplyDelete
  Replies
  1. மது ஜி ...
   தங்கள் சித்தம் என் பாக்கியம் :)

   Delete