18 September 2015

கட்டிக்கிட்டவளிடம் பல் வலின்னு சொன்னது தப்புதான்:)

மனைவி குத்துக் கல்லா இருந்தா ....:)

         ''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
          ''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''


கட்டிக்கிட்டவளிடம் பல் வலின்னு சொன்னது தப்புதான் !

                   ''பல் வலிக்குதுன்னு சொன்னா ,மல்லிகா டாக்டரைப் பாருங்கன்னு   ஏன் சொல்றே ?''
                  '' பொண்ணுன்னா  பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''

தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் !

            ''டாக்டர் ,நாளைக்கு எனக்கு அறுபதாவது பிறந்த நாள்னு சொன்னதும் ,எனக்கு பண்ணவிருந்த ஆபரேசனை ஏன் தள்ளி வச்சிட்டீங்க ?''
           ''நல்லநாளும் அதுவுமா ...உங்களோட ,உங்க  பேரன் பேத்திங்களோட  சந்தோசம் கெட்டு விடக் கூடாதுன்னுதான் !''


எங்காவது ஹோட்டல் திராவிடா இருக்கிறதா ?

பேரூந்து பயணத்தின் போது...
சாலையோரம் 'ஆர்யா' உணவகங்களுக்கு பஞ்சமில்லை ...
முன்பு ஆரிய பவன் ,இப்போ ஹோட்டல் ஆர்யா !
நடத்துவதும்,சமைப்பதும்,உண்பதும் நம் தமிழன்தான் ...
ஆனால் இன்னமும் ஏன் போகவில்லை இந்த 'ஆர்ய'மோகம்?

23 comments:

 1. இந்தக் குத்துக்கல்லை... அந்தச் சிலைபோல ஆக்குமுன்னா... என்ன செய்யாமுன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்...சிலை வடித்தேன் இந்தந் சின்ன பொண்ணுக்கு... இல்ல... இல்ல... பெரிய்ய....ய.....ய... பொண்ணுக்கு!


  இதுக்கு... நேரடிய... என்ன இளிச்சவாயன்னே சொல்லி இருக்கலாம்!


  இதுவரைக்கும் ஒரு ஆப்ரேசனும் எனக்கு சக்சஸ் ஆகல... ஒங்க வாழ்க்கையோட விளையாட விரும்பல... இன்றைக்கு ஒரு நாள் மட்டும் விளையாடிக்கங்க... ஒங்க குல தெய்வத்த வேண்டிக்கங்க... அதுக்காவது சக்தி இருக்கான்னு பார்ப்போம்...ம்...ம்...!


  ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோன்னே.... காரியத்தில் கண் வையடா...தாண்டவக்கோன்னே...!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. குத்துக் கல்லில் பெரிய பொண்ணு சைஸில்சிலை வடிக்க முடியுமா :)

   அது தெரிஞ்சுதானே அவுக அப்படி சொல்றாக :)

   குல தெய்வம் பக்கத்திலே கூப்பிட்டுக்கும் :)

   காரியத்தைச் சாதிக்க விடுபவன் ஈனா ,வானா தானே :)

   Delete
 2. ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. ஆப்பரேசனை தள்ளி வைத்தது சரிதானே :)

   Delete
 3. ஆர்யாஸ், ஆரியபவன், ஆரியநிவாஸ்-ன்னு எல்லாம் பேரு வெச்சு ஓட்டல் நடத்தினா உயர்தரம்னு நெனச்சுக்கிடனுமாம்..!!
  நம்மாளுவளும் மானங்கெட்டு போய் வழிச்சு நக்கிட்டுதாம்லே இருக்கான்..!!

  ReplyDelete
  Replies
  1. தமிழக ஹோட்டல் அதிபர்கள் சங்க கூட்டத்தில் இதை முதல் அஜெண்டாவாக எடுத்துக் கொண்டு விவாதித்தால் நல்லது :)

   Delete
 4. Replies
  1. குத்துக் கல்லையுமா :)

   Delete
 5. 01. உண்மையை உளறிட்டானோ..
  02. பல்வலிக்கு டாக்டர் பல்லவியை பார்க்கலாமே...
  03. மனிதாபிமானம் உள்ள டாக்டர்.
  04. நீங்க சொல்றதைப் பார்த்தால் நடிகர் ஆர்யாவை விரட்டணுமோ...

  ReplyDelete
  Replies
  1. எப்படியோ ஒருநாள் உண்மை வரும் என்பது சரிதானே :)
   அதற்குமுன் சரணம் சரண்யாவையும் பார்க்கலாம் :)
   பேரன் பேத்திகள் என்பதில் இருந்தே அது தெரிகிறது :)
   விரட்டும் நிலையிலா அவர் இருக்கிறார் :)

   Delete
 6. ஆறிய பவனா இருக்குமோ?!

  ReplyDelete
  Replies
  1. (சாம்பாரில் )ஊறிய பவனாய் இருக்கும் :)

   Delete
 7. குத்துக் கல்லில் சிலை வடிக்கத் துவங்கப் போகிறார்...! சின்ன வயசில் அல்ல வாலிப வயசில் பாம்பேயில் என் பல்லைப் பிடுங்கப் போனபோது அங்கிருந்த லேடி டாக்டரிடம் பல்லைக் காட்டியது நினைவுக்கு வருகிறது.ஆப்பரேஷன் என்றாலேயே சாவுதான் உண்மையா.? வலைப் பூவிலும் ஆர்ய திராவிட மூட்டலா?

  ReplyDelete
  Replies
  1. அதில் வடித்தால் பென்சில் மாதிரியில்லே இருக்கும் ?
   என் கற்பனை ,உங்கள் வாழ்கையில் நிஜமா :)
   ஒரு சில டாக்டர்கள் செய்தால் ,பிழைப்பது மறு ஜென்மம் தானே :)
   மூட்டல் இல்லே ,இது ஹோட்டல் :)

   Delete
 8. வணக்கம்
  ஜி
  ஒவ்வொரு நகைச்சுவையும் அற்புதமாக உள்ளது இரசித்தேன் த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ரசனைக்கு நன்றி :)

   Delete
 9. ஆர்யா..ன்னு வந்திடக்கூடாதுன்னுதான்..“அமமா...மெஸ்” னு வச்சிருக்காங்கள.....குடி மக்களின் .குடிய கெடுத்தவுக இல்ல... உணவகத்தின் முதலாளியின் அம்மா பெயர்...

  ReplyDelete
  Replies
  1. நீங்க மதுரையில் உள்ள தனியார் அம்மா மெஸ் சை பற்றிச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன் :)

   Delete
 10. சமையல் அவாளுடைய தொழில்தானே! பெயர் வைத்துக்கொள்ளட்டுமே1

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லப் படாது ,அவர்கள் தக்காளி சூப் வைக்கலாம் ,ஆட்டுக் கால் சூப் வைப்பார்களா :)

   Delete
 11. அனைத்தையும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. ஆம்பள ,ஆம்பள டாக்டரிடம் தான் போகணும் போலிருக்கு :)

   Delete