19 September 2015

காதலிக்க நாயா அலையலாமா :)

               ''தினமும் நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் வர்ற பொண்ணைக்  காதலிக்க,அவளுக்குப் பிடித்த காரியம் செய்யணும்னு நீயும் ஒரு நாயோட போனீ யே ,காதல் வந்ததா ?''

          ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !'''சின்ன 'மாப்பிள்ளை(யும்) ஆகத் துடிக்கும் 'பெரிய 'மாப்பிள்ளை ' :)

                 ''என் புருஷன் மேலே ஒரு கண்ணாவே இருன்னு சொல்றீங்களே ,ஏன்ப்பா?''

               ''மூத்த மாப்பிள்ளை உங்களுக்கே செஞ்சுகிட்டே இருந்தா ,வரப் போற சின்ன மாப்பிள்ளைக்கு என்ன செய்வேன்னு கேட்டதுக்கு ..'அதுக்கு அவசியமே இருக்காது மாமா 'ன்னு சொல்றாரே !''

மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் :)
            "என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா   இருக்காங்களா ,எதிலே?"
            "புருசன்களை திட்டுவதில் தான் !" 


எல்லா நாக்கும் விரும்பும் ஒரே சுவை எதுவும் உண்டா ?

சிங்கம் சைவம் சாப்பிட்டதா  சரித்திரம் இல்லை ...
யானை அசைவம் சாப்பிட்டதா பூகோளமும் இல்லை ...
ஆனா ,மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை !


 1. Mythily kasthuri renganSun Sep 21, 06:52:00 a.m.
  மருமகன் கிருத்திருவம் புடிச்ச ஆள் போலவே:))
  கரக்டா சொன்னிங்க பாஸ்:))
  நாக்கு படுத்தும் பாடு!!
  1. அதென்ன கிருத்திருவம் ,விளக்கம் பிளீஸ்)))))))
   தாலி கட்டிகிட்டதுக்கு இந்த உரிமையும் இல்லேன்னா அதென்ன தாம்பத்தியம் ))))))
   அரையடி நாக்குக்கு என்னென்ன தேவைப் படுது))))))
  2. Mythily kasthuri renganSun Sep 21, 11:37:00 a.m.
   அகராதி அல்லது லொள்ளு!! எங்க ஊர்ல இப்படி சொல்லுவோம்:))
   Delete
  3. உங்க ஊர்க்காரங்களும் கிருத்திருவம் பிடித்த ஆளுங்களா இருப்பாங்க போலிருக்கே !

22 comments:

 1. ஓ...நாய்களுக்கு... அய்ந்தறிவு என்கிறார்கள்...! அதுகளே ஒன்ன ஒன்னப் புரிஞ்சிக்கிட்டு... ஓரங்கட்டிடுச்சுக...ஆகா காதல் வந்திருச்சு... ஆசையில் ஓடிடுச்சு... இந்த ஆறறவு படைத்த.......... புரியமாட்டேங்கிதே...! நா இப்ப நாயா அலையுறேன்...!


  நாங்கல்லாம் ஒரே கல்லில ரெண்டு மாங்கா அடிப்போம்....! குறி வச்சா தப்பாதில்ல...! மாமாவுக்கு ஏ அனாவசியமா ரெண்டு செலவு வச்சுக்கிட்டு... செலவக் குறைக்கனுமுல்ல...!


  என்ன பொருத்தம்... ஆகா... இந்த பொருத்தம்...!


  ‘மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
  இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே...’

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு நீங்க ஏன் அலையணும் :)

   இழவைஇல்லே கூட்டுவார் போலிருக்கு :)

   கணவன்மார்களுக்கு இதில் வருத்தம் :)

   பிணம்தின்னி மனிதர்களும் இருக்கிறார்களே :)

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன். நாய் அலைச்சல் என்பதன் விளைவு இதுதானா? நல்ல விளைவுதான்.

  ReplyDelete
  Replies
  1. நாய் பட்ட பாடு என்றும் சொல்லலாம் :)

   Delete
 3. 01. அதற்காகவாவது காதல் வந்ததே.... இதுதான் நாய்க்காதலோ....
  02. மாப்பிள்ளை படா கில்லாடிதான்,
  03. இருவருமே பெண்ணினம்தானே.... ஜி
  04. ஸூப்பர் பஞ்ச் ஜி

  ReplyDelete
  Replies
  1. காதல் வந்தால் சரிதானே :)
   மனசிலே மாஸ்டர் பிளான் வச்சிருக்கார் :)
   ஆனால் ,தங்களுக்குள் ஒற்றுமை இல்லையே:)
   சில நொடி வாழும் ஈசலைக் கூட மனுஷன் சாப்பிடுறானே:)

   Delete
 4. Replies
  1. நாய்க் காதலும் புதுசு ,உங்க பெயருக்குப் பின்னால் புதிதாய் ஜி முளைத்து இருப்பதைப் போல் :)

   Delete
 5. நாய்களுக்கு வந்த காதலில்..சாதிப்பிரச்சனை எழவில்லையொ....????

  ReplyDelete
  Replies
  1. அந்த கண்றாவி எல்லாம் மனிதனில் மட்டும்தான் :)

   Delete
 6. நாய்களுக்குக் காதல் வந்திடுச்சு. எந்த நாய்களுக்கு..?சொல்லாமல் சொல்லும் ஆசை...!எங்கோ யானை அசைவம் சாப்பிடுவதாகப் படித்தேனே. நினைவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நாலு கால் நாய்களுக்கு :)
   முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வந்துதானே ஆகணும் :)
   இந்த காலத்தில் எதுவும் நடக்கும் ,யானை வாழும் இடத்தை மனிதன் ஆக்கிரமித்து கொண்டானே :)

   Delete
 7. ஹாஹாஹா! இன்னிக்கு மாப்பிள்ளை ஜோக்ஸ் ஸ்பெஷலா! அனைத்தும் சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. முதல் மூன்றுக்கும் பொருத்தம் இருப்பதைக் கண்டு பிடித்த உங்களுக்கு ஸ்பெசல் நன்றி :)

   Delete
 8. மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை!
  ஆனால், எப்பதான் சாவானெனக் கணக்குப் பார்த்தே சாகிறானே!

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. சொத்து நிறைய சேர்ந்தாலே இப்படித்தான் ,கணக்கு பார்த்தே சாவான் :)

   Delete
 9. Replies
  1. தங்களின் ரசனைக்கு நன்றி

   Delete
 10. Replies
  1. கிருத்துருவம் என்பதை ரசீத்தீர்களா :)

   Delete
 11. 1. பப்பி லவ்??!!!!

  2. பெரிய மாப்பிள்ளை செம கில்லாடி போல லொள்ளு சபா மாப்பிள்ளையோ..

  3. பொண்ணுங்களே பொண்ணுங்களுக்கு எதிரினு சொன்னாலும் இதுல மட்டும் யூனிட்டி இஸ் ஸ்ட்ரெங்க்த ஊர்ஜிதப்படுத்தறாங்களோ...

  4. நாக்கு ரொம்பவே படுத்துதுதான்....சாப்பாட்டுல மட்டுமில்ல ஜி....சொல்லிலும் இல்லையா ஜி!!?

  ReplyDelete
  Replies
  1. உட் பி லவ்வும் கூட :)

   கணக்கு பண்ணுவதில் கில்லாடிதான் :)

   பாதிக்கப் படுவோர் சார்பாக கேட்கிறேன் ,இது நியாயமா :)

   செல்லிலும் அது படுத்தும் பாடு ,ஐயோ :)

   Delete