21 September 2015

பைக் பில்லியன் காதலி இப்படி செய்யலாமா :)

 கை நீட்டி  வாங்கலாம் ,அடிக்கக் கூடாது :)           

                 ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
                    ''கை நீட்டுற வேலையை ஆபீசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''


பைக் பில்லியன் காதலி இப்படி செய்யலாமா :)

                                ''  உன் கூட  பைக் பில்லியனில் ,  ஒட்டி  உட்கார்ந்துட்டு  திரிஞ்ச பொண்ணை  இப்போ காணலியே ?''
                    ''உண்மையிலேயே முதுகிலே குத்திட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டாளே !''

பாவம் ,தாய்ப் பாசம் என்ன செய்யுமோ :)

                   ''என்னங்க, ஓடிப்போன நம்ம பொண்ணு புது  தாலிக்கயிறும் கழுத்துமா வாசல்லே  வந்து நிக்கிறா !''
             ''உள்ளே வந்தா  தூக்கு  கயிறும் கழுத்துமாதான் என்னை பார்க்க முடியும்னு சொல்லி அனுப்பிடு !''


ஓட்டுனர் வண்டியை மட்டும் ஓட்டவில்லை :)

பிரேக் போட்டால் வண்டி நிற்கிறதோ ,போய் நிற்கிறதோ  ...
எதிரே பேய் நிற்பதாகவே நினைக்கிறார்கள் ஓட்டுனர்கள் !
எனவேதான் கறுப்புக்கயிறு ,வேப்பிலைக் கொத்து ,எலுமிச்சம்பழம் வண்டிகளில் தொங்குகிறது !


 1. உலகளந்த நம்பிTue Sep 23, 10:54:00 p.m.
  பில்லியனில் உட்கார்ந்துட்டுப் போனவ இப்போ ஒரு மில்லியனர் கூடத்தான் ஓடியிருக்கணும்.
  1. இந்த காலத்து பொண்ணாச்சே ,அதுதான் இவ்வளவு விவரம்னு சொல்றீங்களா :)
26 comments:

 1. அவள்தான் வீட்ல கைநீட்டுவா... கையூட்ட கைநீட்டி வாங்கிற கைகாரியாச்சே...நான் ஏன் கைநீட்டுறேன்... கால்ன்னு ஒன்னு இருக்கிறப்ப!


  இதுக்குத்தான் முன்னாடியே சுதாரிப்பா இருக்கணும்...நீங்க செஞ்சது தப்பில்லய்யா...பின்ன... ஏன் பின்னாடி வச்சு ஓட்டுனாலதான் முதுகுல குத்திட்டு ஓடிப்போயிட்டா... ஒனக்கு முன்னாடிவண்டியில வச்சு ஓட்டவேண்டியதுதானே...மார்பில அந்த பு(பெ)ண்னத் தாங்கியிருக்கிலாமுல்ல!


  உள்ள வந்துதான் ஆவேன்னு அடம்பிடிக்கிறா...! என்ன நடந்தாலும் அத நா பாத்திட்டுதா போவேங்கிறா...! இந்த டயலாக்க நீங்க ஒங்க அப்பாட்ட... அதான் தாத்தாட்ட... கேட்டதுதானேங்கிறா...! சும்மா பீலா விடவேணாங்கிறா... புதுசா எதுவும் டயலாக் இருந்தா பேசணுமாம்...!


  ஆமாம்... பேய் பெரிய ஓட்டையப் போட்டு பேருந்துக்குள் வந்துடுச்சுன்னா...பிரேக் போடும் போது நூலிழையிடை போலுள்ள பெண் விழுந்தால் இடைநீக்கம் ஏற்படக்கூடாதில்ல...பாவம்... அவரு... எதையாவது கட்டிட்டுப் போகட்டும்... காசு கொடுத்து வாங்கின வேலை... காப்பத்துற பொறுப்பு இருக்கில்ல...!

  த.ம.1.

  ReplyDelete
  Replies
  1. லஞ்சப் பணத்தை வேண்டுமானால் கை நீட்டி வாங்கிக்குவா மனைவி :)

   நல்ல ஐடியா ,தெரியாமப் போச்சே :)

   காதல் பரம்பரை வியாதியா :)

   பஸ் வேலையில் இருந்தவர்கள் இடை நீக்கம் செய்யப் பட்டு விட்டார்களே :)

   Delete
 2. ரசித்தேன், சிரித்தேன்.
  தம +!

  ReplyDelete
  Replies
  1. இரு தேனுக்கும் நன்றி :)

   Delete
 3. Replies
  1. ஒரு தேனுக்கும் நன்றி :)

   Delete
 4. அனைத்தையும் ரசித்தேன். கயிற்றினை அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் கறுப்புக் கயிறு ,கறுப்புதான் எனக்கு பிடித்த கலரு என்றும் பாடுவார்களோ :)

   Delete
 5. Replies
  1. நீங்களும் ,அந்த கறுப்புக் கயிறைத்தானே சொல்கிறீர்கள் :)

   Delete
 6. கை நீட்டுவது தப்பு! :)

  ரசித்தேன் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தப்புதான் , ஆபீசிலும் சரி வீட்டிலும் சரி :)

   Delete
 7. ’பின்’ னாலதானே குத்தினா! வலிக்காது!
  அருமை

  ReplyDelete
  Replies
  1. பில்லியனில் உட்கார்ந்து குத்தினா வலிக்கவே செய்யாதே :)

   Delete
 8. மூன்றுமே அட்டகாசம்! அசத்திட்டீங்க ஜி!

  ReplyDelete
  Replies
  1. நாலில் எது சோடை :)

   Delete
 9. வாங்கியதைக் கைநீட்டிக் கொடுக்கலாம்தானேஅவ இவ அல்லவா.?தூக்குக் கயிறுக்கு தாலிக கயிறே மேல் என்று இருப்பாளோ.

  ReplyDelete
  Replies
  1. வீட்டிலும் மனைவி தாராளமாய் கைநீட்டி வாங்கிக் கொள்வதால் தானே லஞ்சமே பெருகுகிறது :)

   வேறென்ன முடிவெடுக்க முடியும் :)

   Delete
 10. 01. பஞ்ச் ஸூப்பர் ஜி
  02. அவனையும் குத்தாமல் வாழ்ந்தால் சரிதான்.
  03. இதுக்கு மருமகன் என்ன சொல்றாரு....?
  04. இது நம்மூருல மட்டும்தான் ஜி

  ReplyDelete
  Replies
  1. பஞ்ச்சும் கொடுப்பா ,பஞ்சணைக்கும் அழைப்பா ..அவதானே மனைவி :)
   பில்லியனில் உட்கார்த்து கட்டி பிடிச்சிகிட்டு வரும்போது சுகமாயிருந்தது ,இப்போ வலிக்குதா :)
   கிழம் சாகட்டும் ,நம்ம பங்கை வாங்கிக்கலாம்னு சொல்றார் :)
   மரண பயம், நம்மூர் ஓட்டுனர்களை மட்டும் ஏன் இப்படி பிடிச்சி ஆட்டுதோ :)

   Delete
 11. வணக்கம்
  ஜி
  பணந்தான் மூலதனம் பிறர் சம்பாதிக்கும் குறுக்கு வழி.. இதுவும் ஒன்றுதான்... மற்றவையை இரசித்தேன் த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆபீஸில் கைநீட்டி சம்பாதிக்கிற காசையும் வேண்டாம் என்று சொன்னால் அல்லவா உத்தம மனைவி :)

   Delete
  2. ஹஹ ரசித்தோம் ஜி ...அனைத்தும்....

   Delete
  3. எங்கேயும் கை நீட்டக் கூடாது என்று இருந்தால் நல்லதுதானே :)

   Delete
 12. ம்ம் இதுதான் முதுகிலே குத்துவதோ....

  ReplyDelete
  Replies
  1. பில்லியன் என்றதும் வேற நினைப்பு வந்திடுச்சா :)

   Delete