22 September 2015

மனைவி இப்படியும் கட்டிப் பிடிக்கலாம் ,ஜாக்கிரதை :)

 நுணல் மட்டுமா வாயால் கெடும் :)                


               ''அந்த டாக்டர் போர்டு எழுதி வைத்ததால் மாட்டிக்கிட்டாரா ,என்ன எழுதி இருந்தார் ?''

                              ''இங்கு தேர்தல் ஜுரத்துக்கு ஊசி போடப்படும்னுதான் !'' 


  50/50 தான் தேறும் போலிருக்கு !            

             ''நர்ஸ் ,நோயாளிங்களை படுக்கவைக்க CCU வார்டில் இடமிருக்கா ,இன்னிக்கு நாலு மேஜர் ஆப்பரேசன் இருக்கே !''
            ''தேவையான அளவுக்கு ரெண்டு பெட் இருக்கு டாக்டர் ''
           ''மீதி ரெண்டு பேருக்கு ?''
          ''மார்ச்சுவரியில் இடம் இருக்கே !''

'ஷக்க லக்க 'பேபியை லவ் பண்ணத் தோணலே :)


          ''ஷக்க லக்க பேபின்னு பாடி, ஒரு பிகரை லவ் 

பண்ணியே ,அதை ஏன் கை கழுவிட்டே ?''


        ''அது என் அம்மாவோட சக்களத்தி பேபின்னு என் 


அப்பா ரகசியமா சொல்லிட்டாரே !''மனைவி இப்படியும் கட்டிப் பிடிக்கலாம் ,ஜாக்கிரதை :)

மனைவிமார்கள் ...
கணவனின் கொடுமை தாங்க முடியாமல் 
கெரசினை ஊற்றிக் கொண்டு தற்கொலை 
செய்துக் கொண்டதெல்லாம் அந்தக் காலம் !
இப்பொழுது எல்லாம் ...
எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !

 1. KILLERGEE DevakottaiWed Sep 24, 12:05:00 a.m.
  01. இது எந்த ஊரு ஆஸ்பெட்டல் பகவான்ஜி சொன்னா நல்லாயிருக்கும்.

  02. சே,,, தங்கச்சி முறையாப்போச்சே,,,

  03. அப்படீனா ? பழங்கால முறைப்படி உடன்கட்டை ஏறுறாங்களோ... ?
  1. 1. எல்லா ஊரிலும் இருக்கே:)

   2.காமத்திற்கு ஏது கண் :)

   3 ஏறலே ,ஏத்துறாங்க :)

25 comments:

 1. ஊசியில மருந்து இல்லாத மாதரி இருக்கு.... காலியா... காத்து மட்டுமே இருக்கிற மாதரி தெரியுது... ஜாக்கிரதை...!


  மார்ச்பாஸ்ட்... மார்ச்சுவரியில்...இடம் ரெண்டுக்கு நால இருந்தாலும் நல்லதுதான்!


  ஆதாம்... ஏவாள்... பரம்பரைய பார்க்கச் சொல்ல வேண்டியதுதானே...!


  ‘கட்டிப்டி கட்டிப்புடிடா...’ ‘நான் போகும் இடமெல்லாம் நீயும் வா...வா...’-ன்னு போறப்பகூட பாட்டுத்தானா...? ஒ பாட்ட கேட்கிறதுக்கு போய்சேர்ந்திடலாம்...‘நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்... போ...போ...’ ‘ஒன்ன விட்டு ஓடிப்போக முடியுமா...?’

  த.ம.1

  ReplyDelete
 2. .ஹா....ஹா.... ஹா... காதல் ஜுரத்துக்கு ஊசி போட மாட்டாராமா?

  ஹா... ஹா... அடப்பாவி நர்ஸ்!

  அய்யய்யோ.....ஷீனா போரா சிண்ட்ரோம்!

  வித்தியாசமான உடன்கட்டை!

  ReplyDelete
 3. வணக்கம்
  தொடரட்டும் நகைப்பணி
  தம +

  ReplyDelete
 4. அனைத்தையும் ரசித்தேன். மார்ச்சுவரி சற்றே அதிகமாக.

  ReplyDelete
 5. மார்ச்சுவரி சூப்பர்.

  ReplyDelete
 6. சகலக,சக்களத்தி ஆயிடுச்சா!
  அனைத்தும் அருமை

  ReplyDelete
 7. அனைத்தும் சிற(ரி)ப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. நல்ல அப்பா நல்ல பையன்,,,,,,, குடும்ப ஒற்றுமை ஓங்கட்டும்,
  அருமை,

  ReplyDelete
 9. எல்லாமே ரசிக்க வைத்தது

  ReplyDelete
 10. 01. டாக்டருக்கு நேரம் சரியில்லை போல நம்ம சோலந்தூர் சோசியர் சோனைமுத்துவை பார்க்கச் சொல்லுங்களேன்..
  02. அங்கேயாவது படுக்க வைக்கிறாங்களே..
  03. அப்பனுக்கு புள்ளை தப்பாமல் பிறந்துருக்கு..
  04. கணவன் மீது அப்பூட்டு ஆசையா ?

  ReplyDelete
 11. அரசியல் ஜுரத்திற்கு ஊசி! :)

  ரசித்தேன்.

  ReplyDelete
 12. வெங்கட் நாகராஜ்Tue Sep 22, 07:39:00 p.m.
  அரசியல் ஜுரத்திற்கு ஊசி! :) >>.
  வேடிக்கை என்னான்னா ,ஒரு 'தலவரு' இதயும் நம்பி ஊசி போட்டுக்க வந்துட்டாராம் :)

  ReplyDelete
 13. KILLERGEE DevakottaiTue Sep 22, 05:51:00 p.m.>>.
  அது சரி ,இந்த பிராடுக்கு அந்த பிராடுதான் சரி :)
  குழியைத் தோண்டி படுக்க வைக்க டாக்டர் என்ன கிரானைட் கல் தொழிலா பண்றார் :)
  ஆழமான லவ்வுன்னா எந்த உறவையும் பார்க்காதே :)
  குடிச்சிட்டு தினமும் அடிச்சா அம்பூட்டு,ஆசை வரத்தானே செய்யும் :)

  ReplyDelete
 14. G.M BalasubramaniamTue Sep 22, 05:07:00 p.m.>>.
  சுருக்கமான இன்றைய உங்க கருத்து ரசிக்க வைக்கலையே :)

  ReplyDelete
 15. mageswari balachandranTue Sep 22, 04:33:00 p.m.>>
  பையன் லவ்வினால் இத்தனை வருடம் கழித்து அப்பன் லவ்வு வெளிப்பட்டு விட்டதாலா :)

  ReplyDelete
 16. ‘தளிர்’ சுரேஷ்Tue Sep 22, 02:48:00 p.m.>>
  உங்கள் கருத்து அரு (பெரு )மை :)

  ReplyDelete
 17. சென்னை பித்தன்Tue Sep 22, 01:27:00 p.m.>>.
  சரியான அப்பா'டக்கரா 'இருக்காரே :)

  ReplyDelete
 18. சசிகலாTue Sep 22, 10:52:00 a.m.>>
  மாதாந்திர சம்பளம் வாங்குவோரை வருமான வரி பிடித்தம் உண்மையில் மார்ச்சுவரியில் தள்ளி விடுகிறது என்றே சொல்லலாம் :)

  ReplyDelete
 19. Dr B JambulingamTue Sep 22, 07:17:00 a.m.>>>
  நேற்றைய மார்ச்சுவரியும் பிடித்து இருக்குமே :)

  ReplyDelete
 20. Mathu STue Sep 22, 07:15:00 a.m.>>>
  நகைப் பணியில் கிடைக்கும் சேதாரத்தை நன்கொடையாய் அனுப்பி விடுகிறேன் :)

  ReplyDelete
 21. கரந்தை ஜெயக்குமார்Tue Sep 22, 06:50:00 a.m.>>
  ஸ்ரீ ராம்ஜி சொன்ன ஷீனா போரா சின்ட்ரோம் ரசிக்க வைத்ததா :)

  ReplyDelete
 22. ஸ்ரீராம்.Tue Sep 22, 06:23:00 a.m.>>
  ஒ ,அப்படியும் ஒரு ஜூரம் இருப்பது மறந்து போச்சே :)

  நர்ஸ் பாவம் ,டாக்டர்தான் அடப்பாவி :)

  சபாஷ்,பொருத்தமான பெயராய் இருக்கே :)

  காலத்துக்கேற்ற உடன்கட்டை தானே :)

  ReplyDelete
 23. ஹாஹஹ்ஹஹ் முதல் ரெண்டும் ம்ம்ம்டாக்டருங்க இப்ப அப்படித்தானே...

  ஷக்கலக்க...சக்களத்தி...பேபி ஹஹாஹ்ஹ செம...
  அனைத்தும் ரசித்தோம்....ஜி

  ReplyDelete
 24. Thulasidharan ஜி>>
  உண்மை டாக்டர்கள் ஜோக்கே வராது போலிருக்கே :)

  ReplyDelete