23 September 2015

சன்னி லியோனும் குழந்தையும் ஒண்ணு :)

புதிய மருத்துவக் காது காப்பீட்டு திட்டம் போலிருக்கு :)                             


            '' உங்க சலூன்ல வாடிக்கையாளர்களுக்கு  இன்சூரன்ஸ்  வசதியா ?''

                  ''ஆமா , கட்டிங் செய்யும்போது காது அறுந்தாலும்  எங்க செலவிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி  செய்து ஒட்ட வச்சுருவோம் !''

ஜோடி தேடும் தலைவர் !


                ''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசிக்கிட்டே இருக்காரே ,ஏன் ?''

               ''இன்னொரு செருப்பும் வரட்டும்னுதான் !''
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் :)              

                ''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''
                     ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !

"அப்பா ,நீங்க வாங்க வேண்டாம்னு சொன்ன வைரத் தோடு அம்மா காதுலே மின்னுதே ,எப்படி ?"
"நான் சொல்ற எதைத்தான் 
உங்கஅம்மா காதுலபோட்டுகிட்டா ?"

எங்கே இன்னொரு புத்தன் ?

எந்த மரத்தடியில் புத்தன் ஞானம் அடைந்தாரோ 
அந்த போதி மரம் கூட பட்டுப் போயிருக்கும் ...
ஆனால் ,அடையாறு ஆலமரத்திற்கு வயது 
நானூற்று ஐம்பது ஆனபின்பும் ...
அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !

சன்னி லியோனும் ,உண்மையில் குழந்தை போல்தான் !

அமெரிக்காவை கதி கலக்கிக் கொண்டிருந்த 
ஒசாமா பின் லேடனையே...
கவர்ச்சியால் கதி கலக்கிய சன்னி லியோன்
'குழந்தை 'மாதிரி என்று பறைசாற்றி இருக்கிறார்  
உடன் நடித்த நம்மூர் நடிகர் ஒருவர் !
உண்மைதான் ...
பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லை ! 1. வெங்கட் நாகராஜ்Wed Oct 01, 06:40:00 p.m.
  காது வெட்டும் சலூனா! :) நெய்வேலி நினைவொன்றினை தூண்டி விட்டது!
  1. நெய்வேலியில் நிலக்கரி வெட்டுவார்கள் ,காதையுமா ?:)

24 comments:

 1. 01. இந்தக்கடை அட்ரஸ் தரமுடியுமா ? ஜி
  02. பொழைச்சுக்கிருவாரு....
  03. ஆஹா கோயில் சிலையாலே இப்படியொரு பிரட்சினையா ?
  04. அதான் காதுல போட்டுக்கிட்டாளே...?
  05. அப்ப மனுஷங்கே வாழ்ந்தாங்கே....
  06. ஸூப்ர் அடி ஜி

  ReplyDelete
  Replies
  1. நம்ம டவுன் ஹால் ரோட்டில்தான் இருக்கு :)
   இது பெரியார் வாழ்க்கையில் உண்மையில் நடந்தது :)
   இருக்கத்தானே செய்யும் :)
   போட்டுக்கிட்டுதானே ஆகணும் :)
   இப்ப எல்லோரும் தெய்வங்களா :)
   நீங்க எந்த அடியைச் சொல்றீங்க :)

   Delete
 2. ஹா... ஹா... ஹா... ஆமாம், பிளாஸ்டிக்ல காது வச்சா கேக்குமா பாஸ்!

  இவரல்லவோ செருப்பான... ச்ச்சே...சிறப்பான தலைவர்!

  ஆஹா... இது A ஜோக்!!

  பாவம்தான்!

  ஞானம்ங்கறது யாரு பாஸ்? அவங்களை ஏன் அடையணும்?

  ஆஹா... இதுவும் A!

  ReplyDelete
  Replies
  1. வைச்சு பார்த்துகிட்டு சொல்றேன் :)

   ஒரு செருப்பு யாருக்கு பயன்படப் போவுது :)

   A கிளாஸ் இல்லையா:)

   எல்லாமா காதில் ஏறும் :)

   ஒருநாள் மரத்தடியில் நின்று பார்த்தால் தெரியும் :)

   மீண்டும் A வா :)

   Delete
 3. சலூன்ல சலுகையா...? அப்ப எனக்கு ஒரு காது போனாலும் பரவாயில்லை... பக்கத்தில இருக்கிறவனுக்கு ரெண்டு காதும் போகணும்...! ஆமா... பிளாஸ்டிக் சர்ஜரின்னா என்னா...? பிளாஸ்டிக்ல்ல...போட்டுக் கொடுப்பாங்களா...?


  “செருப்புக்கு பதிலா இப்ப வந்தது... விளக்கமாறுல்ல..!”
  ''எல்லாத்துக்கு விளங்கிறமாரு விளக்கமா பேச வேண்டியதுதானே... வௌங்காத பேச்ச கத்துக்கிட்டீங்க...சீக்கிரம் பெரிய மனுசனா ஆயுடுவீங்க...!


  கோபுரத்தை உற்று பார்க்கிற பாக்கியம் கிடைக்கணுமே...! கொடுத்து வச்சவரு... கோடி புண்ணியம் கிடைக்க...! கோபுரக் கலசத்த கையெடுத்து கும்பிட்டா... பல கோடி புண்ணியம் கிடைக்கும்...!


  நெசமா... நா வாங்கிக் கொடுக்கல...!


  அரச(ன்) மரமில்லன்னு யாரும் அமர்ந்திருக்க மாட்டாங்க...!


  பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லைதான்... ஆனால் இது சிவப்புக் குழந்தையால்ல இருக்கு !
  இருந்திட்டு போகட்டுமே...! நாய்க கண்ணுக்கு எல்லாம் ஒரு கலர்தானே...! பார்த்திட்டு போகட்டும்...!

  த.ம.3  .  ReplyDelete
  Replies
  1. சலுகை என்றதும் அடுத்தவனை கை காட்டினால் எப்படி :)

   விளக்கமாறா,அப்படின்னா எத்தனை குச்சி இருந்குன்னு எண்ணிட வேண்டியதுதான் :)

   கோபுரக் கலசத்த கையெடுத்து கும்பிட்டா....ஸ்ரீ ராம் ஜி சொன்னது சரிதான் :)

   உங்ககிட்டே யாரு கேட்டா :)

   அதுசரி இந்த ஞானம் ,எப்போ வருமோ :)

   நாய்ங்க கண்ணுக்கு கலரில்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும் :)   Delete
 4. நகைப்பணி தொடர்க
  தம +

  ReplyDelete
  Replies
  1. புதுகையில் வந்து உங்களை தொடர்கிறேன் :)

   Delete
 5. Replies
  1. போதி மரம் போதிக்கும் உண்மை சரிதானே :)

   Delete
 6. வாழ்த்துக்கள் ஜி நீங்க எங்கயோ போயிற்ரீங்க :))))))))))))))))) அந்தப் போதி மரத்துக்குக் கிட்டப் போயிராதீங்க அப்புறன் நாங்க சிரிக்க முடியாமல் போயிரும் ..:)

  ReplyDelete
  Replies
  1. போக மாட்டேன் ,என் சக்தியினால் போதிமரம்கூட பாதி மரம் ஆகிவிடக்கூடும் :)

   Delete
 7. 1. ஹஹஹஹ் அப்ப ப்ளாஸ்டிக் சர்ஜனோட டீலு??!!! ப்ளாஸ்டிக் சர்ஜை செம காஸ்ட்லில.....இல்லையா ஜி?!!

  2. ஓ நான் செருப்பா தேஞ்சு உழைக்கிறேன் அப்படின்னு......!! (இலவச செருப்பு கூட வந்துரும் போல...)

  3. ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல...

  4. ஹஹஹ் பலதுக்கும் காதை அடைச்சுக்குவாங்கல்ல

  5. ஞானம்!!?? அப்படின்னா?! (ஐயையோ..ஜாக்கிரதை...!!!!

  6. சன்னி லியோன்....ஹஹஹ் இப்படித்தான் நிறைய பேர் சொல்லிட்டு அலையறாங்க...
  பச்சைப் புள்ள....

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் இங்கேயும் வந்து காசு பார்க்கிறார் :)

   செருப்பை தாங்கி வளர்ந்தவர் இப்படியும் சொல்லலாம்:)

   ஒண்ணும் சொல்ல முடியாதுதான் பார்க்கக் கூடாததை பார்த்தால் :)

   திறந்திருந்தாலும் நுழையாதே :)

   அட நம்ம ஞானத்தைத் தெரியாதா :)

   இப்போ, லெக்கின்ஸ் மோகத்தில் அலையறாங்க :)

   Delete
 8. இதுக்கு பேர் தான் ஜோடி சேர்ப்பதா? (செருப்பு) ஹஹ.

  ReplyDelete
  Replies
  1. இதுக்குமா ஜாதகம் பார்க்க முடியும் :)

   Delete
 9. அனைத்துமே அசத்தல் ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அடையாறு ஆலமரம் ,என் வேதனை சரிதானே :)

   Delete
 10. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்!:))

  ReplyDelete
  Replies
  1. தேவையில்லை இம்மாம் பெரிய குழந்தை ,அப்படித்தானே :)

   Delete
 11. வணக்கம்
  ஜி
  அனைத்தும் அருமை இரசித்தேன்... வாழ்த்துக்கள்... த.ம 12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. புத்த போதி மரத்தின் கிளை ,உங்க நாட்டிலும் இருப்பதாய் கேள்வி பட்டேனே ,யாருக்காவது ஞானம் வந்திருக்கா :)

   Delete
 12. அந்த சலூன் கடை முகவரி அனுப்பினால் தங்களுக்கு புண்ணியம் வந்து சேரும்...

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே புண்ணியம் என்னிடம் நிரம்பி வழிகிறது ,உங்களுக்கு எத்தனை கிலோ வேண்டும் சொல்லுங்கள் :)

   Delete