24 September 2015

ஆணா ,பெண்ணா என்று நாமே தெரிஞ்சுக்க சுலப வழி:)

--------------------------------------------------------------------------


மனைவிக்கு வந்த சந்தேகம் !           

             ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
             ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் ?
              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு 

யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் 

வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              

            ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               

          ''மதயானைக் கூட்டம் படத்திற்குக் கூட 

 கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறாரே !''

 1. ஆணா ,பெண்ணா என்று  நாமே 
 2. தெரிஞ்சுக்க  சுலப வழி:)       
 3. கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று 
 4. அறிந்து கொள்வதில் பெற்றோர்கள் மட்டுமல்ல 
 5. ,மற்றோர்களும் அறிந்து கொள்ள விரும்புவதில் 
 6. ஆச்சரியம் ஒன்றுமில்லை ...ஆனால் ,இப்படி 
 7. பாலினத்தை வெளியே சொல்வது குற்றமென்று 
 8. ஸ்கேன் சென்டர்களுக்கு அரசு 
 9. அறிவுறுத்தியுள்ளது ...கர்ப்பிணிப் பெண் முகம் 
 10. பளபளப்பாக ஆனாலும் ...இனிப்பை சாப்பிட 
 11. ஆர்வம் அதிகமானாலும் ...வாந்தி,மயக்கம் 
 12. இல்லாமல் போனாலும் ...சிசுவின் இதயத் 
 13. துடிப்பு 
 14. 140ஆக இருந்தால் ...பெண் குழந்தை 
 15. பிறக்குமென்றும் ...வலது கையை ஊன்றி 
 16. எழுந்தாலும் ...வலது புற நாசி வழியாக சுவாசம் 
 17. இருந்தாலும் ...ஆண் குழந்தை பிறக்குமென்றும் 
 18. நம்பப் படுகிறது ...நமக்கு மிகவும் அறிமுகமான 
 19. ...அமெரிக்காவில் மருத்துவ சேவை 
 20. செய்துவரும் டாக்டர் நம்பள்கி தனது 
 21. அனுபவத்தின் மூலம் ...கருவில் வளர்வது 
 22. ஆணா ,பெண்ணா என்பதை அறிய தரும் 
 23. விளக்கத்தையும் படிங்க...
Number one: 
Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
Number 2:
குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!

அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!

ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.

நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியதால் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கையின் ஆணி வேர்!

 நல்ல நேரம்" என்பது தமிழ்நாடு முழுவதும் அறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை
!" 

30 comments:

 1. Replies
  1. பிளாட் உங்களுக்குப் பிடித்ததா :)

   Delete
 2. அதானே பார்த்தேன்... எங்கே என்னிட்ட காட்டாம ஏதும் வச்சுக்கிட்டு இருக்கீங்களோன்னு ஒரு நிமிஷம் தப்பா நெனச்சுட்டேன்... ஆமா... என்ன மாதரி லூசு...இளிச்சவாச்சி யாரு சிக்குவா...?


  நீங்க கூட்டாம இல்லாம தனியாத்தானே நிக்கிறப்ப... அவரு ஏன் பயப்படுறாரு... அனவசியமா பயந்து சாகவேணான்னு சொல்லவேண்டியதுதானே...! ஒங்களுக்குத்தான் மதம் பிடிக்காதே...! நீங்கதான் நாத்திகவாதியாச்சே...!


  நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்...
  நானே எழுதி நானே நடித்த
  நாடகத்தில் ஒரு திருப்பம்
  என்னை நம்பியிருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
  என்றும் அது தானே என் விருப்பம்....
  நல்ல நேரம் பாத்துப் பிறந்தவனாக்கும்...!

  த.ம.2.


  ReplyDelete
  Replies
  1. இளிச்சவாச்சி இன்னொருத்தி இருக்க வாய்ப்பே இல்லை :)

   மதவாதியை விட நாத்திகவாதி நல்லவர்தானே :)

   அடிக் கள்ளி என்று கொஞ்சியதெல்லாம் அந்த காலம் .கள்ளிப் பாலிலேயே கதையை முடிப்பது இந்த காலம் :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன். யானையை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. மதயானை பார்க்க அருமைதானே :)

   Delete
 4. அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான் அப்பன் உண்ணும்போது இறந்தான் என்று மகன் உண்ணாமலேயே இறந்தானாம்

  ReplyDelete
  Replies
  1. இப்போ எதற்கு இந்த பழமொழி என்றுதான் புரியவில்லை :)

   Delete
 5. ஹா..... ஹா.... ஹா...... அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒரே வரியில் சொன்னால் எப்படி :)

   Delete
 6. எல்லாம் சரி தான் நான் போட்டுள்ள ஆக்கத்தை முதலில் ஓடிப் போய் படியுங்க
  எனக்கு இப்ப சிரிக்கிற மூடு இல்ல அப்புறமா வாறன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :)))))))))))))))
  ஆனாலும் அந்த பிளாட்டு விசயம் கொஞ்சம் இடிக்குது அண்ணிய
  சுகம் கேட்டதாச் சொல்லுங்க (உண்மைய உறங்க விட மாட்டோமில்ல :))) )

  ReplyDelete
  Replies
  1. கையெடுத்துக் கும்பிடறேன் ,குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்கிடாதீங்க:)

   Delete
 7. ஆணா..பொண்ணா..ன்னு பார்க்ககூடாதம்ல......???????

  ReplyDelete
  Replies
  1. நல்லதுதானே ,இல்லையென்றால் கள்ளிப் பாலே கிடைக்காதே :)

   Delete
 8. அட இம்புட்டு இருக்கா? இது தெரியாமல் போச்சே,
  அருமை,

  ReplyDelete
  Replies
  1. இனிமே தெரிஞ்சுகிட்டு என்ன ஆகப் போவுது ,விடுங்க :)

   Delete
 9. ஹாஹாஹா! நல்ல சந்தேகம்தான்!

  ReplyDelete
  Replies
  1. மனைவிகள் எல்லோர் மனதிலேயும் இருக்குமா இந்த சந்தேகம் :)

   Delete
 10. ஆணா, பெண்ணா என்று
  நாமே தெரிஞ்சுக்கலாமென்றேன்

  சுமந்தவள் தானே பெத்தும் ஆகணும் என்று
  என் பெண்டாட்டி அடிக்க வாறாளே

  ReplyDelete
  Replies
  1. அதானே ,சுமக்கிறவளுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதுக்கு :)

   Delete
 11. சூப்பர்
  குழந்தை பிறப்பு பற்றி அந்தக்காலத்திலேயே திருமூலர் நிறையச் சொல்லி விட்டார்!

  ReplyDelete
  Replies
  1. அன்றைக்கு சொன்னார் திருமூலர் என்று பலரும், இன்றைக்கு மூலைக்கு மூலை கடை திறந்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்களே :)

   Delete
 12. Replies
  1. பார்த்தேன் என்று சொல்லி இருந்தாலும் தவறில்லை ,இன்றைய பதிவில் அப்படிப்பட்ட படம் இல்லை :)

   Delete
 13. ஹாஹாஹாஹா ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. என்னாச்சு கில்லர்ஜி ,என் கணினி பழுதானது போல் ,உங்களுக்கும் ஆகிவிட்டதா :)

   Delete
 14. வணக்கம்
  ஜி
  சொல்விளையாட்டுக்கள் அபாரம்... இரசித்தேன்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சொல் விளையாட்டுக்கும் ,பிளாட்டுக்கும் இடம்தானே பிரதானம் :)

   Delete
 15. Replies
  1. நல்ல வேளை ,வெறுமனே ruf என்று சொல்லாமல் போனீங்க :)

   Delete