27 September 2015

பொண்ணுங்க ' டூ வீலரில்' எழுதக்கூடாதது :)

                   

                    ''ஏண்டா ராஸ்கல் ,என்  பின்னாலேயே வர்றே ?''

                   ''தொடர்ந்து வா ,தொட்டு விடாதேன்னு உங்க வண்டியிலே எழுதியிருக்கீங்களே !''  செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தள்ளிப் போகுமா ?                 
                      
                   ''நாலு வருசமா என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
                  ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?
           ''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
                     ''இதெல்லாம் என்னங்க பிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பாரத்தா அசந்துடுவீங்க !''


குத்துப்பாட்டு நடிகையால் ரூபாயின் மதிப்பு கூடும் ?

பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் 
ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
வளர்ச்சி விகிதத்தை  இரட்டை இலக்கத்திற்கு 
கொண்டுவர முடியவில்லை என்பதையும்  உணர்ந்து ...
தீர்வு தேடிய மக்கள்  ...
 'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு  அனுப்பி உள்ளார்கள் ...
இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து 
குத்துப் பாட்டுக்கு ஆடிய நடிகை  இப்போது   MP!


 1. வே. அய்யனார்Mon Sep 29, 11:47:00 a.m.
  எனக்கு 22 வருசமா கல்யாணம் தள்ளி போய்கிட்டு இருக்கு, எனக்கு செவ்வா தோஷம் இருக்குமோ ?

  என் வயசு 22.
  1. இவ்வளவு லேட்டா வந்து கேட்டா எப்படி ?22 வருசத்துக்கு முந்தியே கேட்டிருந்தா உருப்படியா பரிகாரம் சொல்லி இருப்பேனே :)

 2. Chokkan SubramanianTue Sep 30, 07:05:00 a.m.
  அந்த கான்ட்ராக்டரை நீங்கள் தான் சிபாரிசு செய்தீர்களாமே!!!
  1. Bagawanjee KATue Sep 30, 06:14:00 p.m.
   விட்டால் , நான்தான் அந்த வீடியோவை முதலில் பார்த்ததாக கூட போட்டுக் கொடுப்பீர்கள் போலிருக்கே :)

22 comments:

 1. இப்படி எழுதி வைச்சுட்டு ஏண்டா வர்ரேன்னு என்ன கேள்வி! :)

  ரசித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. பயபிள்ள மேலே தப்பே இல்லே ,அப்படித்தானே :)

   Delete
 2. Replies
  1. ரூபாயின் மதிப்பு கூடுவதை ரசிக்க முடிகிறதா :)

   Delete
 3. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

  ReplyDelete
  Replies
  1. எந்தந்த நாட்டுக்கு தேவை என்று ஐ நா சபையைக் கூட்டலாமா :)

   Delete
 4. எவ்வளவுதான் மாடர்னா ஆனாலும் ஜாதகம் பாக்கறதை விடமாட்டோம் செவ்வாய்க்கே ஆள் அனுப்பினாலும் செவ்வா தோஷம் இல்லாதவங்களைத்தான் அனுப்புவோம்

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு தேறும் என்பதை ஆராய்ந்து ,தேறாது என்றால் ஜாதகம் சேரவில்லை என்று சொல்வதற்குத் தான் ஜாதகம் பார்ப்பதாய் நடிக்கிறார்கள் :)

   Delete
 5. படித்ததை பின்பற்றும் பணபாளனை போய் ராஸ்கல்லுன்னு திட்டினதுதான் சங்கடமா இ ருக்கு தலைவரே...

  ReplyDelete
  Replies
  1. உங்க துக்கத்திலே நானும் பங்கெடுத்துக்கிறேன் ,யார்ரா அங்கே ,நம்ம கொடியை அரைக் கம்பத்திலே பறக்க விடுங்கடா :)

   Delete

 6. தங்கள் உடைகளிலேயே பொன் வாசகங்கள் பதித்தவர் நிலை....?செவ்வாய் ( சிவந்த வாய் ) என்பது தோஷமா.? முதல் இரவு வீடியோ ரசிக்க முடியவில்லை. குத்துப்பாட்டு நடிகை யாருங்க. இப்போது எல்லா நடிகைகளும் குத்துப் பாட்டுக்குக் ஆடறாங்களே.

  ReplyDelete
  Replies
  1. மனதைத் தைத்த ஒரு வாசகத்தைச் சொல்லலாமே :)
   அதானே ,தோஷம் என்பவர்களே ,பதில் சொல்லுங்க :)
   எல்லா வயசுலேயும் எல்லாவற்றையும் ரசிக்க முடியாதே :)
   ரம்யமான அந்த பெயரைச் சொல்லித்தான் ஆகணுமா :)

   Delete
 7. “தொட்டால் பூ மலரும்... தொடாமல் நான் மலர்ந்தேன்... இப்ப தொட்டுவிடும் தூரம்தான்... தொடட்டுமா...?“
  “அடி செருப்பால... அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்”
  “சொல்லாம செஞ்சிடுவீங்களோ...?”


  தோஷம் எல்லாம் ஓடிப் போயிடும்... காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... வரன் வாசல் வந்து கதவு தட்டும்...என்னது கதவு தட்டும் சத்தம் கேட்டுகுதா...? விட்டுடாதீங்க...!


  “எங்க எங்க கொஞ்சம் நா பாக்கிறேன்... கண்ண மூடு கொஞ்சம் நா காட்டுறேன்...!“
  “கண்ண மூடுனதுக்கு அப்புறம் காட்டி என்ன பிரயோஜனம்?”


  “இடையா... இது இடையா... இல்லாதது போல் இருக்கிறது...! ”
  “இஞ்சி இடுப்பழகின்னா கொஞ்சம் இஞ்ச் கூடத்தான் இருக்கும்...தப்பா நினைக்காதிங்க... இடுப்ப மடிச்சு வச்சிருக்காங்க...எம் பி நல்ல எம் பி பிஎஸ்ஸா பாக்க கிளம்பிட்டாங்க...!”

  த.ம. 8

  ReplyDelete
  Replies
  1. தொடாமல் ரசிக்கவும் என்று உடையில் வாசகம் இருப்பதைக் கவனிக்க வில்லையா ?நம்ம GMB சார் கூட கவனித்து இருக்காரே :)

   காலமெல்லாம் தோஷம் பார்க்கா காதல் வாழ்க :)

   கண்ணை, மூடி ரசிப்பதில் உள்ள சுகம் ,திறந்து ரசிப்பதிலும் இல்லையே :)

   இஞ்சி என்றால் நிறத்தைக் குறிக்குதா,வடிவத்தைக் குறிக்குதா என்பது என் நீண்ட நாள் சந்தேகம் :)

   Delete
 8. ரசிக்க வைத்தன சிரிப்புக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பின்னால் வருவதற்கும் காரணத்தைச் சொல்லும் அவனை என்ன செய்யலாம் ,நீங்களே சொல்லுங்க ஜி :)

   Delete
 9. 01. தப்பு அவன் மீது இல்லையே..

  02. இதுக்கு நம்ம சோலந்தூர் சோஸியர் சோனைமுத்து நல்லாப் பார்ப்பாரே..

  03. கேரளாவில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் உண்மையில் பலவருடங்களாக நடந்தது காரணம் எங்கள் ஹோட்டலில் ரிசப்ஷன் வைத்தால் முதலிரவு நடத்த ரூம் ஃப்ரீ இதற்க்கு ஆசைப்பட்டு மாட்டியவர்கள் முடிவில் ஒருநாள் அபுதாபியில் இருக்கும் குடும்பத்தில் உள்ளவன் கைக்கே கேசட் மாட்டியபோது ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டது

  04. இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

  தமிழ் மணம் விரைவில் முதலிடம் பிடிக்க வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. அவனைச் சொல்லி குற்றமில்லை ,அவன் வயசு அப்படி :)

   டி வி யில் வரும் அளவுக்கு அவர் இன்னும் பிரபலமாக வில்லையே :)

   இப்படியுமா நடக்கும் ,கடவுளின் தேசத்தில் :)

   இந்த கூத்தெல்லாம் நம்ம நாட்டில் நாட்டில் நடக்கும் :)

   சென்ற பதிவர் சந்திப்பு நடந்த போது த ம முதல்வன் 'ஜோக்காளி ' இம்முறையும் அது சாத்தியமாகுமா :)

   Delete
 10. Replies
  1. உடல் நலம் பெற்று, தாங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி அய்யா :)

   Delete
 11. ரசித்துத் தொடர்கிறேன்.

  முந்தைய பதிவுகளையும்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தொடர்பே இல்லை என்பதை விட இது நல்லதே :)

   Delete